திறமையமான ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..?

Written By: Staff
Subscribe to GoodReturns Tamil

சிறந்த கலைஞர்கள், ஊழியர்கள் என்றுமே தங்களது பணியிடத்தில் கீழே தள்ளப்படுவார்கள். உங்கள் சக ஊழியர்களிடமிருந்து தனியாகத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகம் உழைப்பவரா நீங்கள்? அப்படி என்றால் நீங்கள் தண்டனை பெறுவீர்கள்

சிறப்பாக வேலை செய்யும் தொழிலாளர்களிடம் சக ஊழியர்கள் சினம் கொள்ளவும், அவர்களின் வேலையைக் குறைத்து மதிப்பிடவும் வைக்கிறது. எந்த அளவு நீங்கள் உங்கள் வேலையே சரியாகச் செய்கிறீர்களோ, அந்த அளவிற்கு உங்களுக்குச் சமூகத் தண்டனைப் பெறும் சூழ்நிலை உருவாகும்.

உதாரணம்

டோம் ஹான்க்ஸ் , ஹாலிவுட்டின் மிகச் சிறந்த நடிகர் என்பதில் சந்தேகம் இல்லை. 1993ம் ஆண்டு மற்றும் 1994ம் ஆண்டுத் தொடர்ந்து இவர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். பிலடெல்பியா மற்றும் பாரெஸ்ட் கம்ப் என்ற படங்களுக்கு இந்த விருது வழகப்பட்டது.

அதன் பிறகும் தொடர்ந்து அபோல்லோ 13, சேவிங் ப்ரைவேட் ரயன் போன்ற படங்களிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் அவரின் சகி கலைஞர்கள் அவருடைய நடிப்பிற்கு வாக்குகளை வழங்கிப் பரிந்துரைக்கவில்லை. விருதுகளுக்கு அவர் தகுதியானவர் என்ற போதிலும், அவரால் எந்த ஒரு விருதையும் பின்னர்ப் பெற முடியவில்லை.

 

அனைவருக்கும் இதே நிலைதான்

இந்த நிலை, நடிகர்கள் மற்றும் மேல் தட்டு மக்களுக்கு மட்டும் இல்லை, தொழிற்சாலையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இதே நிலை தான். நீங்கள் ஒரு சிறந்த தொழிலாளியாக இருப்பது மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்துவதாக இருக்கும்.

ஆராய்ச்சியும், ஆய்வும்

உயர் செயல்திறன் கொண்ட தொழிலாளர்கள் எப்படிப் பட்ட பொறாமைக்கு உள்ளாகிறார்கள் என்பதை அறிவதற்காக ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை மேற்கொண்டவர்கள் மின்சொட்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்.

அலுவலகம்

இவர்கள் தைவானில் சலூன் கடையில் வேலை செய்பவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். திறமையாக வேலை செய்யும் தொழிலாளர்களை இகழ்வதும், சிறுமைப்படுத்துவதும், அவமானப்படுத்துவதும் அதிகமாக இருந்தது. இது குறைந்த திறனுடன் வேலை செய்யும் தொழிலாளர்களிடம் செயல்படுத்தப்படுவதில்லை. மேலும், குழுவாக இருந்து பணிபுரியும் இடங்களில் உயர்ந்த செயல்திறன் உள்ளவர் மற்றவர்களால் பெருமளவில் தவறாக நடத்தப்படுகிறார்.

வித்தியாசம்

மற்றொரு ஆராய்ச்சியில் மேலாண்மை மாணவர்கள் உட்படுத்தப்பட்டார்கள். இந்த ஆய்வில், குறைவான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில் , உயர் திறன் கொண்ட தொழிலாளர்களுடன் போட்டி போட்டு, அவர்களின் தரத்தை குறைக்க மற்றவர்கள் முயற்சிக்கின்றனர். அதுவே தொழிலாளர்களுக்கான வேலையைப் பிரித்துக் கொடுத்துச் செய்யச் சொல்லும்போது, உயர் செயல்திறன் கொண்டவர்களைத் தம்முடன் வைத்துக் கொள்ள அனைவரும் விழைகின்றனர். இதன்மூலம் அவர்களின் வேலை எளிதாக முடிவடைகிறது.

முடிவுரை

இதனால் அறியப்படுவது என்ன வென்றால், இது முழுக்க முழுக்கச் சுய விருப்பத்தால் உண்டாகும் பொறாமை தான். சக தொழிலாளர்கள் விரும்பினால், உயர் திறன் கொண்ட தொழிலாளியை இழிவுப் படுத்தி, அவர்களை வெளியேற்றுகின்றனர். அல்லது அவர்களைத் தூக்கி வைத்துக் கொள்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Working hard is a sure way to lose friends in office

Working hard is a sure way to lose friends in office
Story first published: Thursday, January 18, 2018, 16:43 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns