இன்றளவில் முதலீட்டாளர்கள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வங்கிகள் தரும் குறைந்த வட்டிவிகிதம். அதிகபட்சமாக 6-7% வட்டி தான் வைப்புத் தொகைக்குத் தரப்படுகிறது. அதிக வட்டிவிகிதம் தரும், அதே சமயம் பாதுகாப்பான முதலீடுகள் செய்யவேண்டுமா?
இதோ உங்களுக்காக 6 அசத்தலான முதலீட்டுத் திட்டங்கள்...
தமிழ்நாடு பவர் ஃபைனான்ஸ் (TN Power Finance)
தமிழ்நாடு அரசு நிறுவனமான இது 36, 48 மற்றும் 60 மாதகால நிரந்தர வைப்புத்தொகைக்கு 8.5% வட்டியை (மூத்த குடிமக்களுக்கு 9%) தருகிறது. அதிகபட்சமாக 10.55% (மூத்த குடிமக்களுக்கு 11.31% ) கூட்டு வட்டிவிகித்தில் 5 ஆண்டுகால முதலீட்டுத் திட்டமும் உள்ளது.
நிரந்தர வருமானம் தேவைப்படுவோருக்காக இந்நிறுவனம் மாதாந்திர, காலாண்டு, ஆண்டு வட்டி வழங்கும் திட்டங்களையும் கொண்டுள்ளது.
கேரளா டிரோன்ஸ்போர்ட் பைனான்ஸ் ( KTDFC)
கேரள அரசு நிறுவனமான இதில், 2000 கோடி வரையிலான முதலீட்டுக்குக் கேரள அரசு உத்தரவாதம் அளித்துள்ளது. தமிழ்நாடு பவர் பைனான்ஸை விட வட்டிவிகிதம் குறைவே என்றபோதிலும் 1,2,3 ஆண்டுக்கால வைப்புத்தொகைக்கு 8.25 சதவீதமும் 4 மற்றும் 5 ஆண்டுக்கு 8% வட்டியும் தரப்படுகிறது.
வட்டியானது மாதாமாதம் வைப்புத்தொகையுடன் சேர்க்கப்படுவதால் இறுதியில் அதிகபட்ச தொகை கிடைக்கும். ஆனால் வங்கிகள் காலாண்டில் தான் வட்டியை அளிக்கும்.
இடைத்தரகர்கள் இல்லாததால், நிறுவனத்தின் இணையத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அஞ்சல் வழியாக அனுப்பலாம்.
தேசிய சேமிப்புப் பத்திரங்கள் (NSC)
இந்திய அரசின் கீழ் இயங்கும் இதில் 7.6% வட்டிவிகிதம் தரப்படுகிறது. 6.5% வட்டிதரும் வங்கிகளை விட இது சிறந்த முதலீடாக இருக்கும். உங்களின் 100 ரூபாய் 5 ஆண்டுகளில் 144.3 ரூபாயாக உயரும்.
இவ்வகை வருமானத்திற்கு வரிவிலக்கு கோரமுடியாது. ஆனால், இந்தப் பத்திரத்தை எளிதாக மற்றவர் பெயருக்கு மாற்றலாம். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இந்திய அரசு நிறுவனம் என்பதால் இது மிகப் பாதுகாப்பான முதலீடு.
தன்னார்வ வருங்கால வைப்புநிதி (Voluntary Provident Fund)
நிறைவான வட்டிவிகிதத்தில் எதிர்காலத்திற்கான சேமிப்பிற்குச் சிறந்த முதலீட்டுத் திட்டம் இது. தற்போது 8.55% வட்டியோடு 80C பிரிவின் கீழ் வரிவிலக்கும் கிடைக்கிறது.
நீங்கள் தொழிலாளர் வைப்புநிதியை தொடரும் வரை இதையும் தொடரலாம். கூடிய விரைவில் நீங்கள் பணிஓய்வு பெறப்போவதில்லை எனில் வரிச்சலுகை, சிறந்தவட்டியுடன் பாதுகாப்பான முதலீடு இது.
ரிசர்வ் வங்கியின் முதலீடு பத்திரங்கள் (RBI Bonds)
வங்கி முதலீட்டைக் காட்டிலும் சிறந்த, பாதுகாப்பான 7.75% வட்டிவிகிதம் முதலீடு இது . ஆனால் வங்கியைப் போல இதற்கும் 80c பிரிவின் கீழ் வரிவிலக்கு இல்லை. ஆயினும் நிரந்தர வருமானம் தரும் முதலீடு.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens Savings Schemes)
பணிஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் மாதாந்திர வருமானம் பெற 8.3 % வட்டி விகிதத்தில் முதலீடு செய்யச் சிறந்த திட்டம். இதற்கு 80C பிரிவின் கீழ் வரிவிலக்கும் கிடைக்கும்.
More From GoodReturns

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!



Click it and Unblock the Notifications