குடை காப்பீட்டுத்திட்டம் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடை காப்பீடு அல்லது ஒருங்கிணைந்த காப்பீடு (Umbrella Insurance) என்னும் இந்தத் திட்டம் பொறுப்பேற்கும் காப்பீட்டுத் திட்டம் எனக் கூறும் வகையில் நமது அனைத்து வகையான சொத்துக்களுக்கும் ஒரே காப்பீட்டின் கீழ் பாதுகாப்பு வழங்குகிறது. இந்தத் திட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறதா?

 

உங்கள் சொத்துக்களை மட்டுமல்லாமல், கடுமையான காலங்களில் சட்டரீதியாகக் காப்பீடு/பாதுகாப்பு வழங்கி உங்கள் எதிர்காலத்தையும் பாதுகாக்கிறது. இதுபோலப் பல்வேறு நன்மைகள் சேர்க்கப்பட்டு நம் சொத்துக்கும், உரிமை கோருவதற்கும் காப்பீடாக வழங்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

1) பல காப்பீடுகளுக்குப் பதில், இந்த ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் காப்பீட்டு நிறுவனம் பல தள்ளுபடிகளைத் தரவாய்ப்புள்ளது.

2) இத்திட்டத்தில் தவறான கைது நடவடிக்கை, அவதூறு , ஜாமீன் போன்ற மிரட்டல்களில் இருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

3) ஆரம்பச் சுகாதாரம், ஆயுள், மருத்துவக் காப்பீடுகளையும் பெரும் வகையில் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

4) இந்த ஒருங்கிணைந்த காப்பீட்டின் கீழ், உங்கள் இன்னபிற காப்பீட்டுத் திட்டங்களில் உள்ள குறைகளையும் நிவர்த்திச் செய்யலாம்.

வீட்டு வாடகை

வீட்டு வாடகை

எதிர்காலத்தில் உங்கள் சொத்திற்குச் சேதாரம் ஏற்பட்டாலோ, உங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவருக்கு உங்கள் வீட்டால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டாலோ கூட இந்த ஒருங்கிணைந்த காப்பீடு உதவும்.

உங்களால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் உதவும்?
 

உங்களால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் உதவும்?

உங்கள் சார்பாக நீதிமன்றத்தில் நடைபெறும் சட்ட நடைமுறைகளுக்கும், உங்களால் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் மருத்துவச் செலவுகளையும் கூட இந்தக் காப்பீடு திட்டத்தில் பெறலாம். சுருக்கமாகக் கூறவேண்டுமானால் நீங்கள் பொறுப்பேற்கும் அனைத்துக்கும் உங்கள் சார்பாக ஒருங்கிணைந்த காப்பீடு திட்டம் பொறுப்பேற்கும்.

டாடா ஏஐஜி

டாடா ஏஐஜி

இந்தியாவில், டாடா ஏஐஜி (TATA AIG) நிறுவனம் இவ்வகை ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டங்களைத் தருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Do you know what Is Umbrella Insurance? Should You Be Buying It?

Do you know what Is Umbrella Insurance? Should You Be Buying It?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X