உங்களுக்கான பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

Written By:
Subscribe to GoodReturns Tamil

மியூச்சுவல் ஃபண்ட்ஸ் உங்களுக்குப் புதியதா, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய எண்ணுகிறீர்களா, பேலன்ஸ்டு ஃபண்ட்ஸ், டெப்ட் ஃபண்ட்ஸ், ஈக்விட்டி ஃபண்ட்ஸ், கில்ட் ஃபண்ட்ஸ் போன்ற பல தேர்வுகள் இருப்பதால் எதில் முதலீடு செய்வது என்ற குழப்பமா.

கீழே உங்களுக்குப் பொருத்தமான மியூச்சுவல் ஃபண்டை எவ்வாறு தேர்ந்துடுப்பது என்று பார்க்கலாம் தொடர்ந்து படியுங்கள்.

வயது:

வாரன் பஃபெட் உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர், தனது 14 வயதிலேயே முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். தற்பொழுது அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு 90 பில்லியன் டாலருக்கும் அதிகம்.

முதலீடு செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்றாலும், இளமைப் பருவத்திலேயே முதலீடுகளைத் தொடங்குவது நல்லது, அப்போதுதான் மியூச்சுவல் ஃபண்ட் பற்றித் தெரிந்து கொள்வதற்குப் போதிய காலம் கிடைக்கும், தொடக்கம் என்பதால் எளிதாகத் தவறை திருத்திக் கொள்ளலாம், அதிக அளவு முதலீடு செய்ய முடியும், முடிவுகளைத் துணிந்து எடுக்க முடியும், எனவே உங்களின் இளமை வயதிலேயே முதலீட்டுக்களைத் தொடங்குங்கள்.

 

நுணுக்கங்கள்

எவ்வளவு அதிகமாகப் பங்கு சந்தையின் முதலீடு நுணுக்கங்கள், பல தரப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும் அதன் சாத பாதகங்களைத் தெரிந்து கொள்கிறீர்களோ அதே அளவு வெற்றிகளையும் குவிக்கலாம்.

எனவே அதிக அளவு கட்டுரைகளைப் படியுங்கள், திட்டங்கள் பற்றிய முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள், திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளைக் கேளுங்கள், வெற்றி பெற்றவர்கள் செயல் பட்ட விதங்கள் பற்றி ஆராயுங்கள், தினசரி நடப்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள் இவை அனைத்தும் உங்களுக்கு வெற்றிகளைக் குவிக்க உதவும்.

 

முடிவு எடுத்தல்:

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நினைத்தால் உங்களுக்குப் பின் வரும் குணங்கள் அவசியம். ஒன்று துணிந்து முடிவுகளை எடுத்தல், பொறுமை அவசியம், சந்தை நிலவரத்தை உற்று நோக்குதல், சூழ்நிலைகளை ஆராய்ந்து உங்களுக்குப் பொருத்தமான முடிவுகளை எடுத்தல் அவசியம் . இவைகள் உங்களை இழப்புகளில் இருந்து காப்பாற்றும். ஒரு வேளை தோல்வியைச் சந்தித்தால் அதற்கான காரணத்தைத் தேடுங்கள், அடுத்த முறை அந்தத் தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்

ஆபத்து குறைந்த முதலீடுகள்:

ஒரு சிலர் முடிவுகளை எடுக்கத் தயங்குவர். இது போன்ற வேளைகளில் ஆபத்துக் குறைந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் முதலீடுகள் எப்போதும் ஆபத்து நிறைந்தவையே, இருந்தாலும் அதிக லாபத்தைக் கொடுக்கும். அதே நேரத்தில் லார்ஜ் கேப் திட்டங்கள் குறைந்த ஆபத்து கொண்டவை ஆனால் சுமாரான லாபத்தையே கொடுக்கும். இருப்பினும் எல்லா மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் எதாவது ஒரு வகையில் ஆபத்து கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டாக,

ஆபத்து குறைந்த திட்டங்களான, 3-5 ஆண்டுகள் கொண்ட பேலன்ஸ்டு ஃபண்ட் திட்டங்கள் உங்களுக்குக் கை கொடுக்கும். இவற்றில் செய்யப்படும் முதலீடுகள் ஈக்விட்டிஸ் மற்றும் டெப்ட் திட்டங்களில் முதலீடு செய்யப் படும். இதில் ஈக்விட்டிஸ் மதிப்பு உயர வாய்ப்புகள் அதிகம் அதே நேரம் டெப்ட் முதலீடு நிலையான வருமானத்தைக் கொடுக்கும். இருப்பினும் முதலீட்டிற்கு முன்பு முழுமையாக ஆராய்ந்து ஈக்விட்டிஸ் மற்றும் டெப்ட் திட்டங்களுக்கு இடையே செய்யப்படும் சதவீத அளவுகளைத் தெரிந்து கொள்வது நல்லது.

வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்:

நீங்கள் அதிக வரி செலுத்துபவராக இருந்தால் வரிச் சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்துடுக்கலாம். இதன் மூலம் வரிச் சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு அதிக வட்டி எனப் பல நண்மைகளைப் பெறலாம், எடுத்துக்காட்டாக ஈக்விட்டி லிங்க்டு சேவிங்க்ஸ் திட்டங்கள் உங்களுக்கு மாத மாத முதலீடு, வங்கி வைப்புத் திட்டங்களுடன் ஒப்பிடும் பொழுது இரண்டு மடங்கு வட்டி, முதிர்வு காலத்தில் திரும்ப வரும் வருமானத்திற்கு 80சி ன் கீழ் வரிச் சேமிப்பு, வரம்பற்ற முதலீடு என எண்ணற்ற பயன்களை வழங்கும். இருப்பினும் முதலீடு செய்வதற்கு முன் உங்களின் வரி கணக்குகளை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

முதலீட்டின் அளவு:

எல்லோருக்கும் எல்லாத் திட்டங்களும் பொருந்தமாக இருக்காது, உங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு முன் கூட்டியே திட்டமிடுவது எப்பொழுதும் நல்லது. உங்களின் எதிர் காலத் தேவை, முதலீட்டின் அளவு, கால அளவு, ஒரு வேளை இழப்பு ஏற்பட்டால் எவ்வாறு சமாளிப்பது போன்ற காரணிகளை மனதில் கொண்டு பொருத்தமான திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்.

நீங்கள் ஒரே ஒரு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது அதிக ஆபத்து, அதற்குப் பதிலாக இரண்டு அல்லது மூன்று திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது, ஏனெனில் ஒன்றின் மதிப்புக் குறைந்தாலும் மற்றொன்று கை கொடுக்கும், உங்களால் சம நிலையில் இருக்க முடியும். உங்களின் அனைத்து முதலீடுகளும் ஏறுமுகத்தில் இருந்தால் அதிக லாபத்தைப் பெறமுடியும்.

 

முதலீடுகளைத் திட்டங்களுக்கு இடையே மாற்றுதல்:

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு இடையே மாற்றும் வழிகளும் உள்ளன, அதிக ரிட்டர்ன்ஸ் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு முதலீட்டுத் திட்டங்களுக்கு இடையே மாற்றிக் கொள்ளலாம். அதே நேரத்தில் குறிப்பிட்ட அளவு ஃபண்ட், திட்டங்களை மாற்றுவதற்கான பிடித்தம் மற்றும் வரிகள் செலுத்த வேண்டி இருக்கும்.

ஈக்விட்டி ஃபண்ட்ஸ்

எடுத்துக்காட்டாக ஈக்விட்டி ஃபண்ட்ஸ்களை ஒரு வருடத்திற்குள்ளாக மாற்றும் பொழுது 1 சதவீதம் எக்சிட் லோடு பிடித்தம் செய்யப் படும். எனவே தான் திட்டங்களுக்கு இடையே மாற்றும் பொழுது தற்போதைய திட்டத்தின் ஏற்ற இறக்கங்கள், புதிய திட்டத்திற்கு மாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் இழப்புகள் எல்லா வற்றையும் ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. மேலும் அடிக்கடி திட்டங்களை மற்றுவதும் நல்லதல்ல. ஒரு வருடத்திற்கு ஒரு முறை மாற்றுவது சிறந்தது. முதலீட்டுத் திட்டங்களைக் கவனமாகப் படித்துப் பின்பு செயலில் இறங்குவது நன்று.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Choose The Right Mutual Fund For You?

How To Choose The Right Mutual Fund For You?
Story first published: Thursday, March 1, 2018, 17:55 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns