பங்குச் சந்தை வர்த்தகம் என்பது ஒரு மாய வலை. இங்கு மிகவும் புத்திசாலித்தனமாக வர்த்தகம் செய்ய வேண்டும். அதுவும் புதிதாக வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் ஆர்வக் கோளரில் இந்த மாயவலையில் வசமாகச் சிக்கிக் கொள்கின்றனர். புதிதாகப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, அவர்கள் தங்களுடைய மொத்த பணத்தையும் சந்தையில் முதலீடு செய்து விடவது தான். அதோடு மட்டுமல்லாமல் சிலர் கடன் வாங்கிப் பங்குகளில் முதலீடு செய்கின்றனர்.
இது ஒரு மிகப் பெரிய தவறாகும். இவ்வாறு கட்டுப்பாடில்லாமல் பங்குகளில் முதலீடு செய்வது புதைகுழியில் இறங்குவதற்குச் சமமாகும். எனவே புதிதாகப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் நபவர்கள் சந்தையில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். இந்தக் கேள்விக்குரிய விடை ஒவ்வொரு வர்த்தகரையும் ஆபத்தில் இருந்து பாதுகாக்கும். இதைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
பல நிதி வல்லுநர்கள் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்குத் தேவையான தொகையைப் பற்றிப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். எனினும் இதற்குரிய விடையை ஒரு பொதுவான கருத்தின் மூலம் விவாதிக்கலாம்.
பங்கு சந்தை முதலீட்டிற்கு நிதியை ஒதுக்குவது எப்படி?
உங்களுக்கு ஏதேனும் பொருளாதாரக் கஷ்டம் எனில் அதிலிருந்து மீள உங்களுக்குக் குறைந்தது மூன்று முதல் ஆறு மாத காலம் தேவைப்படும். எனவே உங்களுடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய உதவும் நிதியை சுமார் 3 முதல் 6 மாத காலத்திற்கு இருப்பில் நீங்கள் வைத்திருக்க வேண்டும். அந்த நிதியைத் உங்களுடைய சேமிப்பில் இருந்து கழித்து விட்டு மீதித் தொகையை நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்.
அவசரக் கால நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா?
ஒரு பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டால் உங்களுக்கு அந்த நிலையைச் சமாளிக்க அவசர கால நிதி தேவைப்படும். எனவே நீங்கள் அந்த நிதியை எப்பொழுதும் எடுக்கக் கூடிய லிக்விட் ஃபண்டு அதாவது வங்கிச் சேமிப்பு போன்ற கணக்குகளில் வைத்திருக்க வேண்டும். இந்த அவசரக்கால நிதியை எந்த ஒரு சூழ்நிலையிலும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யக் கூடாது. இந்த அவசரக்கால நிதி ஆபத்துகள் குறைந்த துறைகளில் முதலீடு செய்யப்பட வேண்டும்.
அதிகம் முதலீடு செய்ய வேண்டுமா?
பங்கு வர்த்தகத்தில் வெற்றிபெற உங்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை. இருப்பினும், ஒரு சிறிய முதலீட்டால் பங்குச் சந்தையில் ஒரு நிலையான தொடக்கத்தைத் தர இயலாது.
தரகு கட்டணங்கள்
ஒரு கெளரவமான தொடக்கத்திற்கு, குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் தரகு கணக்குகளைத் தொடங்க வேண்டியது மிக முக்கியம். இது வழக்கமாக மிகவும் குறைந்த அளவாக அல்லது ஒரு குறிப்பிட்ட நிரந்தர அளவாகவே இருக்கும். ஏனெனில் தரகு நிறுவனம் குறைந்த அளவு கட்டணத்தை வசூலித்து வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முயற்சிக்கும். அப்பொழுதுதான் அவர்களுக்கு அதிகக் கமிஷன் கிடைக்கும். ஒரு சில முதலீட்டாளர்கள் இந்தக் கமிஷனுக்குப் பயந்து அடிக்கடி வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை. இது ஒரு சில சமயங்களில் உங்களுடைய முதலீட்டுத் தொகையைக் காப்பாற்ற உதவும்.
இரட்டை பிறவிகள்
ஆபத்து, மற்றும் வருவாய் ஆகிய இரண்டும். ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவிகள். ஆபத்து இல்லாவிட்டால் வருவாய் கிடைக்காது. அதிக வருவாய் பெற நீங்கள் ஆபத்து மிகுந்த பங்குச் சந்தை வர்த்தகத்தில் அடிக்கடி ஈடு பட வேண்டும்.
பல்வகைத் துறை பங்குகள்
உங்களுடைய போர்ட்போலியோவில் பல்வகைத் துறைகளின் பங்குகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். மேலும் அதிக டிவிடெண்ட் தரக்கூடிய முதல் 50 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது ஆபத்துக்களைக் கணிசமாகக் குறைக்கும். மேலும் பங்குத் துறை வல்லுநர்கள் கடந்த காலச் செயல்பாட்டின் படி அதிக மற்றும் உயர் வருவாயைத் தரக்கூடிய பங்குகளை இந்த முதல் 50 நிறுவனப் பங்குகளில் இருந்து எளிதாக அடையாளம் கண்டு கொண்டு விடுவர். எனவே இந்த நிறுவனப் பங்குகள் அதிக முதலீட்டாளர்களால் விரும்பப்படுகின்றது. உங்களுடைய போர்ட்போலியோவில் பல்வகைத் துறை மற்றும் நிறுவனப் பங்குகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது உங்களுடைய முதலீடுகளின் மீதான ஆபத்தைக் கணிசமாகக் குறைத்து விடும்.
முடிவுரை
நீங்கள் பங்குச் சந்தைக்குப் புதியவராயிருந்து அதிலும் குறிப்பாகப் பங்குச் சந்தையைப் பற்றிக் கற்றுக் கொண்டிருந்தால், சிறிய அளவிலான முதலீடுகளை மட்டுமே மேற்கொள்ளுங்கள். இது முதலீட்டு அபாயங்களைக் கணிசமாகக் குறைக்கும். உங்களால் முடிந்த அளவிற்கு முதலீடு செய்வதன் மூலம் பங்குச் சந்தையைப் பறி கற்றுக் கொள்ளுங்கள். எனவே ரூ.1,000 முதல் 5,000 இடையேயான ஒரு தொகை உங்களுடைய முதலீட்டுக்கு ஒரு சிறந்த தொடக்கமாக இருக்கும். பங்குச் சந்தையில் அதிக அளவிலான வருவாயைப் பெற உங்களுடைய ஒவ்வொரு முதலீடுகளில் இருந்தும் கற்றுக் கொண்டே இருங்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது உங்களுடைய கற்றல் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்.
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications