'ஸ்டாண்ட் அப் இந்தியா' பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அறிவித்த ஒரு திட்டம். இந்தத் திட்டம் எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் உள்ளிட்ட சமுதாயத்தில் சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு வணிக நிதிகளை விரிவுபடுத்துகிறது.
இத்திட்டத்திற்கான இணையத்தளம் படி, 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை பசுமை நிறுவனத்தை அமைப்பதற்காக ஒரு வங்கி கிளை குறைந்த பட்சம் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி (SC) அல்லது பழங்குடி (ST) அல்லது ஒரு பெண் தொழிலதிபருக்குக் கடனுதவி வழங்குகிறது.
எந்த மாதிரியான நிறுவனம்
இந்தத் திட்டம் கீழ் ஆரம்பிக்கும் நிறுவனம் உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறையில் இயங்கலாம் . தனிநபர் அல்லாத நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தபட்சம் 51% பங்கு மற்றும் கட்டுப்பாட்டு பங்குகளை ஒரு எஸ்சி / எஸ்டி அல்லது பெண் தொழில்முனைவோரால் நடத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற எங்கு விண்ணப்பிக்கலாம் ?
நிதித் துறையின் இந்தத் திட்டத்தைப் பற்றி அறிய மூன்று முதன்மை நிலைகள் உள்ளன.
1 .SIDBIன் எழுந்து நில் இந்தியா வலைத்தளம் அல்லது www.standupmitra.in மூலம் அறிந்து கொள்ளலாம்
2 . வங்கிக் கிளைகளில் நேரடியாக அறிந்து கொள்ளலாம்.
3 . முதன்மை மாவட்ட மேலாளர் வழியாக அறியலாம்
பழைய நிறுவனங்களுக்குக் கடன் கிடையாது
இந்தத் திட்டத்தைத் தெளிவுபடுத்துவதற்கு, ஏற்கனவே தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்த நிறுவனங்களுக்கு நிதியளிக்கப்படுவதில்லை.
எந்த மாதிரியான கடனை எல்லாம் வங்கிகளால் வழங்க முடியும்?
கடன் உத்தரவாதத்துடன் கூடிய கடன் தொகையை வங்கிகள் வழங்குகிறது . வாகன கடன் முதல் அலுவலக உபகரணத்திற்கான கடன் வரை எந்த ஒரு கடனையும் வங்கிகள் வழங்க முடியும். 7 வருட காலத்திற்குள் இந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.
இந்தத் திட்டத்தின் நோக்கம்
நேஷனல் கிரெடிட் உத்தரவாத டிரஸ்டீ கம்பெனி மூலம் கடன் தொகை உத்தரவாதம் முறையைத் தொடங்குவதே எழுந்து நில் இந்தியா திட்டத்தின் குறிக்கோளாகும்.
இந்தியாவில் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) மூலம் மறுநிதியளிப்புச் சாளரத்தை ரூ.10,000 கோடி வரை நிதி அளித்து உதவ ஸ்டாண்ட் ஆப் இந்தியா திட்டம் துவங்கப்பட்டுள்ளது
நன்மைகள்
ஸ்டாண்ட் ஆப் இந்தியா திட்டம், தொழில் துவங்கும் முன் கடன் தேவை என்ற கட்டத்தில் உள்ளவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. கூடுதலாக, சரக்கு போக்குவரத்துச் சேவைகள், ஆன்லைன் தளங்கள் மற்றும் மின்-சந்தை இடங்களில் பதிவு செய்தல் போன்ற சேவைகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும், கல்வி படிவங்கள் மற்றும் ஆதரவு அமர்வு, தொழில் முனைவோர் சிறந்த நடைமுறைகள் மற்றும் சிக்கல் தீர்க்கும் வழியைப் புரிந்து கொள்ள உதவும் இந்தத் திட்டம் உதவும்.
பொருளாதார ரீதியாகப் பின் தங்கி சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் உள்ள தாழ்த்தப்பட்ட சமுகம் மற்றும் பெண்களுக்கு இந்த ஸ்டாண்ட் அப் இந்தியா பெரும் பயன் அளிக்கும்.


Click it and Unblock the Notifications