நீண்ட கால மூலதன வருமானத்தின் மீது 10% வரிவிதிக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது முதலீட்டாளர்களைக் கவலை அடையச் செய்துள்ளது. எனவே வரியை சேமிக்கும் விதமாக, இந்தப் புதிய வரிவிதிப்பிற்கு உட்படாத 'அலகுகளுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம்' - யூலிப்-ல் (Unit Linked Insurance Plans) முதலீடு செய்யலாம்.
நீங்கள் இந்த யூலிப்-ல் முதலீடு செய்கிறீர்களா இல்லையா என்பதை, உங்கள் பொருளாதார நோக்கங்களைக் கருத்தில் கொண்டு நீங்கள் முடிவு செய்யவேண்டும். பின்வருவனவற்றைப் படித்து யூலிப் பற்றி நன்கு அறிந்த பின் தீர்க்கமான முடிவு எடுங்கள்.
யூலிப் என்றால் என்ன?
அலகுகளுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம் என்பது, காப்பீடு மற்றும் முதலீடு என இரண்டும் ஒருங்கே அமைந்துள்ள திட்டம். காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் இந்தத் திட்டத்தை யூனிட் டிரஸ்ட் அப் இந்தியா என்ற நிறுவனம் முதலில் அறிமுகப்படுத்தியது. இவ்வகைத் திட்டங்கள் முக்கியாக இந்தியாவில் தான் வழங்கப்படுகின்றன.
யூலிப்-ம் மியூட்சுவல் பண்ட்-ம் ஒரேமாதிரியான திட்டங்களா?
மியூட்சுவல் பண்ட் போலவே இதிலும் முதலீட்டைக் குறிப்பிட்ட விகிதத்தில் தவணைகளாகச் செலுத்தலாம். உங்களின் முதலீட்டுத் தேவை மற்றும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, முதலீட்டை உங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளலாம்.
யூலிப் தினமும் குறிப்பிட்ட அளவு பணத்தை மொத்த சொத்து மதிப்பு ( Net Asset Value) என்று பிடித்தம் செய்யும். ஒவ்வொரு அலகின் மதிப்பும், மொத்த முதலீட்டையும் மொத்த அலகுகளின் எண்ணிக்கையையும் வகுத்துக் கணக்கிடப்படும். திரும்பக் கிடைக்கும் பணத்தின் விகிதம் மொத்த சொத்து மதிப்பை கருத்தில் கொண்டு கணக்கிடப்படும்.
யூலிப் மியூட்சுவல் பண்ட் உடன் எப்படி வேறுபடுகிறது?
யூலிப்-ல் குறைந்தபட்ச பண முடக்கக் காலம் (Lock in period) 5 ஆண்டுகள். இதில் காப்பீட்டையும் உள்ளடக்கியது. பங்குகளுடன் இணைந்த மியூட்சுவல் பண்ட் திட்டத்தில், பங்குகளின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்றால் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிச் சுதந்திரமாக விற்கலாம். ஆனால் யூலிப்-ல் முதலீட்டைத் திரும்பப்பெறுவது கடினம் ஏனெனில் காப்பீட்டை இழக்க நேரிடலாம்.
யூலிப் காப்பீட்டுத் திட்டத்தைப் போன்றதா?
இந்த யூலிப் திட்டத்தில், ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் போல ஆயுள் முழுவதற்குமான காப்பீடு கிடைக்கும். நீங்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்குப் பீரிமியம் செலுத்த வேண்டும். அது திட்டத்தைப் பொறுத்து வேறுபடும். ஒட்டுமொத்தமாகவும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கொரு முறை எனத் தவணை முறையிலும் இதில் முதலீடு செய்யலாம்.
யூலிப் முதலீட்டின் நன்மைகள்
1.சந்தையுடன் இணைந்தது
யூலிப் முதலீடுகள் சந்தையுடன் இணைந்தவற்றில் முதலீடு செய்யப்படுவதால், சந்தை நிலவரத்தைப் பொறுத்து நம்பமுடியாத அளவிற்கு லாபம் கிடைக்கும்.
2) ஆயுள் காப்பீடு
இத்திட்டம் காப்பீட்டுக்கான அம்சங்களையும் கொண்டிருப்பதால், ஆயுள் காப்பீடும் கிடைக்கும்.
3) நீண்டகாலச் சேமிப்பு
பொதுவாக யூலிப் திட்டங்கள் 5 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் இருக்கக்கூடியவை. காப்பீட்டுத் திட்டங்களைப் போலவே நீண்டகாலம் பிரீமியம் செலுத்தினால், இறுதியில் திட்டம் முதிர்ச்சியடையும் போது சிறப்பான லாபம் கிடைக்கும்.
4)நெகிழ்வுத்தன்மை
உங்கள் தேவைக்கேற்ப பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கு இடையே மாறும் வசதியை யூலிப் வழங்குகிறது.
5)வரிவிலக்கு
யூலிப் மூலம் வரும் வருமானத்திற்குப் பிரிவு 80C மற்றும் 10D ன் கீழ் வரிவிலக்கு கிடைக்கும்.
பிரீமியம் திட்டங்கள்
ஒட்டுமொத்தமாக முதலீடு செய்யும் திட்டம் அல்லது குறிப்பிட்ட ஆண்டுகளுக்குத் தவணை முறையில் பிரீமியம் செலுத்தும் திட்டத்தைத் தேர்வுசெய்யும் வசதி யூலிப்-ல் உள்ளது.
யூலிப்-ல் உள்ள ஆபத்துகள்
அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களின் விளம்பரங்களிலும் குறிப்பிடப்படும் ஒரு பொதுவான விசயம் ' இவை சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை. முதலீடு செய்யும் முன் காப்பீடு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படிக்கவும் ' . எனவே யூலிப்-ல் முதலீடு செய்யும் முன் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து செயல்படவும்.
உங்களின் யூலிப் முதலீடு நேரிடையாகச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்தது. எனவே அனைத்துவித ஆபத்துகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.
யூலிப் கட்டணங்கள்
காப்பீட்டு நிறுவனங்கள் நிர்வாகக் கட்டணம், முதலீடுகள் மேலாண்மை கட்டணம், பரிமாற்ற கட்டணம், ஒப்படைக்கும் கட்டணம், பீரிமியம் வசூலிக்கும் கட்டணம், பணம் எடுக்கும் கட்டணம் எனப் பல கட்டணங்களை விதிக்கும். இவை அனைத்தும் காப்பீடு நிறுவன விதிகளைப் பொறுத்து வேறுபடும்.
யூலிப் திட்டத்தை வழங்கும் நிறுவனங்கள்
எல்.ஐ.சி ஆப் இந்தியா
எஸ்.பி.ஐ லைப்
கனரா- எச்.எஸ்.பி.சி
ஏகன் லைப்
ஈடில்வீஸ் டோக்கியோ லைப் இன்சூரன்ஸ்
ரிலையன்ஸ் லைப்
ஐ.சி.ஐ.சி.ஐ ப்ருடென்சியல்
எச்.டி.எப்.சி லைப்
பஜாஜ் அலையன்ஸ்
அவிவா லைப் இன்சூரன்ஸ்
மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ்
கோடாக் மகேந்திரா லைப்
டி.எச்.எப்.எல் ப்ரமீரிகா லைப் இன்சூரன்ஸ்
வரிச் சலுகைகள்
காப்பீட்டாளரின் இறப்பு, முதிர்ச்சியடைந்த காப்பீடு அல்லது காப்பீட்டாளரின் விருப்பப்படி பகுதி பணம் திரும்பப் பெறப்படும் போது யூலிப் திட்டம் திரும்பப்பெறப்படும்.
இறப்பு பலன் :
காப்பீட்டாளரின் மரணத்திற்குப் பிறகு திரும்பப் பெறப்படும் பணத்திற்கு முழு வரிச்சலுகை உண்டு.
காப்பீடு திட்ட முதிர்ச்சி:
காப்பீடு முதிர்ச்சியடைந்து திரும்பப் பெறப்படும் பணத்திற்குப் பிரிவு 10D யின் கீழ் வரிச்சலுகை கிடைக்கும்.
பகுதி திரும்பப் பெறுதல்:
காப்பீட்டின் மொத்த மதிப்பில் 20%க்கு மிகாமல் மற்றும் பண முடக்கக் காலத்திற்குப் பிறகு திரும்பப் பெற்றால் வரி கிடையாது.
பிரீமியம்:
பங்குகள், கடன் மற்றும் பணச் சந்தையில் முதலீடு செய்யப்படும் யூலிப் திட்டத்திற்குச் செலுத்தப்படும் பிரீமியத்திற்குப் பிரிவு 80c யின் கீழ் வரிவிலக்குக் கோரலாம். தற்போதும், இனி வரும் காலங்களிலும் ரூ1.5லட்சம் வரை பிரிவு 80c யின் கீழ் வரிவிலக்குக் கோரலாம்.
பின்னர்ச் சேர்க்கப்படும் கூடுதல் பிரீமியம் தொகைக்கு, அது மொத்த தொகையின் 10% ஐ குறைவாக இருந்தால் பிரிவு 80c மற்றும் 10d கீழ் வரிவிலக்குக் கோரலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications