பிக்சட் டெபாசிட் டிடிஎஸ் பணத்தினை வங்கிகள் அரசுக்கு செலுத்துகின்றனவா? எப்படி கண்டறிவது?

பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலம் பெறும் வட்டி விகித லாபமானது குறிப்பிட்ட அளவிற்கும் அதிகமாகச் சென்றால் அதற்கு வங்கிகள் டிடிஎஸ்-ஐ பிடித்தம் செய்யும். அதிலும் சிலர் வங்கிகள் இந்த டிடிஎஸ் பணத்தினைத் தங்களிடம் இருந்து பிடித்தம் செய்யும் வங்கிகள் அதனை அரசுக்குச் செலுத்துகின்றனவா என்று சந்தேகப்படுவார்கள். சில நேரம் கூடுதலாகவும் டிடிஎஸ்-ஐ வங்கிகள் பிடித்தம் செய்ய வாய்ப்புகள் உள்ளது. தவறு என்பதை அனைவரும் செய்வார்கள். இதில் வங்கிகள் ஒன்றும் விதிவிலக்கல்ல. அதிலும் சில நேரங்களில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு அதனை வங்கிகள் அரசுக்குச் செலுத்தாமல் இருக்கவும் வாய்ப்புகள் உண்டு.

பிரபல வங்கி

பிரபல வங்கி

அதில் ஒன்று தான் அன்மையில் இந்தியாவின் பிரபல வங்கி அதிகாரி ஒருவர் தனது பிக்சட் டெபாசிட் கணக்கில் இருந்து டிசம்பர் 2017, பிப்ரவரி 2018 மற்றும் மார்ச் 2018-ல் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதனை ஏன் இன்னும் தனது வருமான வரிக் கணக்கில் செலுத்தப்படவில்லை . எனது பணத்தை நீங்கள் வைத்துக்கொண்டு என்ன செய்கிறீர்கள் என்று பதிவிட்ட டிவிட்டாகும்.

பிற வங்கிகள்

பிற வங்கிகள்

இது போன்ற நிகழ்வுகள் பிற வங்கிகளிலும் நடைபெறலாம், அதற்காக வங்கிகள் எப்போதும் தவறு செய்யும் என்றும் கூற முடியாது. சில தொழில்நுட்ப காரணங்களுக்காகவும் தாமதம் ஆகலாம். எதுவாக இருப்பினும் நீங்கள் கடினமாக உழைத்துச் சேமித்த பணத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்யும் போது படிவம் 16 அல்லது படிவம் 26ஏஎஸ் மூலம் தீர்வு காண முடியும். அது பற்றி விளக்காக இங்குப் பார்க்கலாம்.

டிடிஎஸ் பிடித்தம் செய்து இருப்பதைக் கண்டறிவது எப்படி?

டிடிஎஸ் பிடித்தம் செய்து இருப்பதைக் கண்டறிவது எப்படி?

2017-2018 நிதி ஆண்டில் பிரிவு 194ஏ-ன் கீழ் அனைத்து வங்கிகளுக்கும் பிக்சட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகித லாபம் 10,000 ரூபாய்க்கும் அதிகமாகவும், மூத்த குடிமக்கள் என்றால் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக இருந்தால் டிடிஎஸ் பிடித்தம் கட்டாயம் ஆகும். வட்டி வருவாய் மீது வங்கிகள் ஒவ்வொரு காலாண்டு அல்லது வருடத்திற்கு ஒரு முறை டிடிஎஸ்-ஐ பிடித்தம் செய்யும்.

பான் கார்டு முக்கியம்

பான் கார்டு முக்கியம்

அதிலும் பான் கார்டு இருந்தால் 10 சதவீதம் டிடிஎஸ்-ம், பான் இல்லை என்றால் 20 முதல் 30 சதவீதம் வரையிலும் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும். அதே நேரம் டிடிஎஸ் பிடித்தம் செய்ததைத் திரும்பப் பெறவும் பான் கார்டு தேவை.

படிவம் 16ஏ

படிவம் 16ஏ

டிடிஎஸ் பிடித்தம் செய்யும் போது வங்கிகள் ஒவ்வொரு காலாண்டிற்கும் வாடிக்கையாளர்களுக்கும் படிவம் 16ஏ-ஐ அளிக்க வேண்டும். இந்தப் படிவத்தில் பிக்சட் டெபாசிட் மீதான வட்டி வருவாய் உள்ளிட்ட விவரங்கள் காலாண்டு வாரியாக அளிக்கப்பட்டு இருக்கும். காலாண்டு வாரியாகப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களைச் சரிபார்த்து டிடிஎஸ் பிடித்தம் குறித்துத் தெரிந்துகொள்ளலாம்.

படிவம் 26ஏஎஸ்

படிவம் 26ஏஎஸ்

இதற்கு மாற்று என்று பார்த்தால் வங்கிகள் பிடித்தம் செய்துள்ள டிடிஎஸ் விவரங்களைப் படிவம் 26ஏஎஸ் மூலம் அறிந்துகொள்ளலாம். படிவம் 26ஏஎஸ்-ல் டாக்ஸ் கிரெடிட் மற்றும் டாக்ஸ் பெய்டு போன்ற விவரங்களின் அறிக்கையாக இருக்கும். இதனை வருமான வரி இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியும்.

ஆனால் இந்தத் தருணத்தில் உங்களால் படிவம் 26ஏஎஸ்-ல் டிசம்பர் வரையிலான டிடிஎஸ் விவரங்களை மட்டுமே பெற முடியும். மார்ச் வரை வேண்டும் என்றால் ஜூன் 7-ம் தேதி வரை காத்திருக்க வேண்டும். வங்கிகள் டிடிஎஸ் விவரங்களை மே 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். படிவம் 26ஏஎஸ் ஜூன் 7 முதல் கிடைக்கும்.

 

பான் அளித்த பிறகு ஏற்படக்கூடிய தவறுகள்

பான் அளித்த பிறகு ஏற்படக்கூடிய தவறுகள்

சில நேரங்களில் வங்கிகள் பான் எண்ணை அளித்திருந்தாலும் 20 சதவீதம் வரை டிடிஎஸ் பிடித்தம் செய்ய வாய்ப்புகள் உண்டு. அதற்காகப் பயப்பட வேண்டாம். வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அதனை எளிதாகச் சரி செய்யலாம்.பின்னர் படிவம் 26ஏஎஸ்-ல் புதுப்பிக்கப்படும்.

எனவே வங்கிகளுக்குப் பான் கார்டு விவரங்களை அளிக்க மறந்திட வேண்டாம். பான் எண்ணை வங்கிகளில் அளிக்கவில்லை என்றால் படிவம் 26ஏஎஸ்-ல் டிடிஎஸ் விவரங்கள் பதிவேற்றப்படாது. படிவம் 26ஏஎஸ்-ல் டிடிஎஸ் விவரங்கள் பதிவேற்றப்பட்டு இருந்தால் மட்டுமே டிடிஎஸ் கிரெடிட் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

 

முடிவு

முடிவு

படிவம் 16-ன் உதவியுடன் 4 காலாண்டிலும் டிடிஎஸ் பிடித்தம் எவ்வளவு செய்துள்ளனர் என்பதைச் சரிபார்க்க முடியும். மாற்று வழி வேண்டும் என்றால் வருமான வரி துறையின் இணையதளம் மூலம் படிவம் 26ஏஎஸ் பெற்றுச் சரிபார்க்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+