எஸ்பிஐ வங்கியில் NEFT பரிவர்த்தனை எவ்வாறு ரத்துச் செய்வது?

இணைய வழி பணப் பரிமாற்ற சேவைகளை வழங்குவதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்த வங்கி தன்னுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இணைய வங்கி மூலம் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) சேவைகளை வழங்குகின்றது. இந்தச் சேவையின் மூலம் ஒருவருடைய வங்கிக் கணக்கிலிருந்து இன்னொருவரின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை மிக எளிதாக மாற்றலாம். அதோடு மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு பில்கள் மற்றும் வேறு எந்தக் கட்டணங்களையும் இந்தச் சேவையைப் பயன்படுத்திப் பணத்தைச் செலுத்தலாம்.

NEFT என்பது நாடு முழுவதும் பணத்தை மாற்றுவதற்கான தொந்தரவு இல்லாத, வேகமான மற்றும் வசதியான வழியாகக் கருதப்படுகின்றது. எனவே இந்தச் சேவையை எஸ் பி ஐ வாடிக்கையாளர்கள் எவ்வாறு பெற இயலும். இதற்கான வழிமுறை என்னென்ன. அதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்.

படிகள்

படிகள்

1. நீங்கள், உங்களுக்கான எஸ்.பி.ஐ. இணைய வங்கி கணக்குக்கிற்குப் பதிவு செய்ய வேண்டும்.

2. அதன் பின்னர் உங்களுடைய இணைய வங்கியில் உள்ளீடு செய்த பின்னர் ‘பணப் பரிமாற்றம் ' விருப்பத்தைச் சொடுக்கவும்.

3. அதில் உங்களுக்கு நிதி பரிமாற்றத்திற்கான இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும். எஸ்.பி.ஐ வங்கிக்கு உள்ளேயான பரிமாற்றம் மற்றும் எஸ் பி ஐ வங்கிக்கு வெளியேயான பரிமாற்றம்.

4. உங்களுக்கு உகந்த பரிவர்த்தனையைத் தேர்வு செய்யவும்.

5. SBI க்கு வெளியே NEFT பரிவர்த்தனை செய்ய, 'இன்டர்-பாங்க் பயனாளியின்' மீது கிளிக் செய்யவும் அதன் பின்னர் 'NEFT' ஐ தேர்வு செய்யவும்.

6. அதன் பின்னர்த் தொடரியை கிளிக் செய்யவும்.

7. அதன் பின்னர் நீங்கள் NEFT பரிமாற்றம் செய்ய விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

8. 'அளவு' பத்தியில் மாற்றப்பட வேண்டிய தொகையை உள்ளிடவும்.

9. பயனாளியின் பெயர், கணக்கு எண், வங்கி பெயர் மற்றும் வரம்பு போன்ற பயனாளியின் விவரங்களை வழங்கவும்.

10. கொடுக்கப்பட்ட விருப்பங்களில் இருந்து பணம் அனுப்ப வேண்டிய நேரம் எது என்பதைத் தேர்வு செய்ய 'ஒரு அட்டவணை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்' அதில் உங்களுக்கு மூன்று விதமான விருப்பங்கள் இருக்கும். : 'Pay Now', 'Schedule Later', அல்லது 'Standing Instruction' இந்த மூன்றி ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

11. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.

12. கடவுச்சொல்லை உள்ளிட்டு, 'சமர்ப்பி'ப் பொத்தானை சொடுக்கவும்.

13. விவரங்களைச் சரிபார்த பின்னர், 'உறுதிப்படுத்து' என்பதைக் கிளிக் செய்க.

14. இதற்குப் பின்னர் நீங்கள் பணப்பரிமாற்றத்தின் உறுதிப்படுத்தல் நிலையைப் பெறுவீர்கள்.

 

NEFT பணப்பரிமாற்றத்திற்கான தேவையான தகவல்கள்

NEFT பணப்பரிமாற்றத்திற்கான தேவையான தகவல்கள்

NEFT பரிவர்த்தனை செய்யும் போது, பின்வரும் விவரங்களை நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வழங்க வேண்டும்.

1. பணம் செலுத்தும் தொகை

2. உங்கள் எஸ்.பி.ஐ வங்கியின் கணக்கு எண்

3. பயனாளியின் வங்கி பெயர்

4. பயனாளியின் பெயர்

5. பயனாளியின் கணக்கு எண்

6. செலுத்தநரின் விபரம் (தகவல் அனுப்புவதற்காக)

7. பயனாளியின் வங்கிக் கிளைகளின் IFSC குறியீடு

 

 24 மணி நேரமும் பணப் பரிமாற்றம் செய்யலாம்

24 மணி நேரமும் பணப் பரிமாற்றம் செய்யலாம்

இணைய வழி NEFT பணப்பரிமாற்றத்தை எந்த நேரமும் மேற்கொள்ளலாம். கீழே தெரிவிக்கப்பட்டுள்ள நேர இடைவெளியைப் பொருத்து,நீங்கள் அனுப்பிய பணம் அடுத்த வங்கி வேலை நாளில் பயனாளிகளுக்கு மாற்றப்படும்.

வசதி: NEFT

நேரம்: -

வார நாட்களில்: 9.00 முதல் 18.45 மணி வரை

சனிக்கிழமை: 9.00 முதல் 12.45 மணி வரை

எஸ்.பி.ஐ.யில் NEFT பரிவர்த்தனை எப்படி ரத்துச் செய்வது?

ஆன்லைன் NEFT குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே செய்ய முடியும். ஏற்கனவே துவங்கப்ப்பட்ட NEFT பணப் பரிமாற்றத்தை நம்மால் ரத்து செய இயலாது.

 

என்ஈஎப்டி

என்ஈஎப்டி

NEFT வாடிக்கையாளர்களின் மிகவும் விருப்பமான இணையப் பணப்பரிமாற்ற முறையாக மாறி வருகிறது. இது பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் இதற்கு மிகவும் குறைவான நேரமே தேவைப்படுகின்றது. அதோடு இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் மிகவும் வேகமானது. பல கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்கு சென்று நீண்ட வரிசைகளில் நிற்காமல், வீட்டிலிருந்தபடியே NEFT பரிமாற்றத்தின் மூலம் ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்குப் பணத்தை மாற்றுகின்றார்கள். அதோடு இதற்குக் கட்டணமும் குறைவு. NEFT பணப் பரிமாற்றத்தில் ஒரு சிறிய ஆபத்து உள்ளது. பெறுநரின் விவரங்களைப் பூர்த்திச் செய்யும் போது நீங்கள் ஏதேனும் சிறு தவறு செய்தால், அந்தப் பணம் ஒரு திட்டமிடப்படாத பெறுநருக்கு மாற்றப்படும்.

எப்படி வங்கி தகவல் அளிப்பது?

எப்படி வங்கி தகவல் அளிப்பது?

உங்கள் பணம் ஒரு திட்டமிடப்படாத பெறுநருக்கு மாற்றப்பட்டால், நீங்கள் மின்னஞ்சல் மூலம் உடனடியாக வங்கிக்கு அதைப் பற்றிய விபரங்களை அறிவிக்க வேண்டும். இது ஒரு முக்கியமான ஆதாரமாக விளங்குகின்றது. ஏனெனில் ஆதாரம் எப்பொழுது வேண்டுமானாலும் உங்களுக்குத் தேவைப்படும். உங்களின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் உங்களின் பிரதிநிதியாக , வங்கியின் பரிவர்த்தனையை மாற்றும் கோரிக்கையை வங்கியாளர் அறிவிப்பார். வங்கியின் கோரிக்கையைப் பிரதிவாதி ஏற்றுக்கொண்ட பின்னர் 3 முதல் 5 நாட்களுக்குள் பணமானது உங்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+