போலிகளைக் கண்டு ஏமாறாதீர்! ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் உஷார்..!

இணையதள வர்த்தக நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்றவை சந்தை மாதிரியை ( marketplace model) அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. இதன் மூலம் வாங்குபவர் மற்றும் விற்பவர் தொடர்பு கொள்ளும் பொதுவான இடமாகச் செயல்படும் இவை, அந்த நிறுவனத்தின் சொந்த பொருட்களை இந்த இணையதளத்தில் வாங்க முடியாது என்பதையே குறிக்கிறது.

லாஜிக்கல் சர்வே எனும் நிறுவனத்தால் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 6,923 நபர்களில் 38% பேர், தாங்கள் பிளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீல் போன்ற இணையதள வர்த்தக நிறுவனங்கள் வாயிலாகப் போலியான பொருட்களை விற்கப்பட்டுள்ளது என்ற உண்மையை வெளிகொண்டு வந்துள்ளனர்.

இந்தப் போலியான பொருட்களின் பட்டியலில் வாசனைத் திரவியங்கள், காலணிகள் மற்றும் நாகரீக பொருட்கள் தான் முன்னிலை வகிக்கின்றன. இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் போலியான பொருட்களைக் கண்டு ஏமாறாமல் ஸ்மார்டாக ஷாப்பிங் செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

ரீவியூக்களைப் பார்த்தல்

ரீவியூக்களைப் பார்த்தல்

பொருட்களை வாங்கும் போது அனைவரும் செய்யும் பொதுவான விசயம் அந்தப் பொருட்களுக்கான ரீவியூக்களைப் பார்ப்பது. ஆனால் அதனுடன் விற்பனையாளர் மீதான ரிவியூக்களையும் பார்க்கவேண்டும். இந்த இணைய வர்த்தக நிறுவனங்கள் பொருட்களை வாங்குபவர்களிடம் தங்கள் அனுபவத்தை மதிப்பிட ரீவியூ செய்யுமாறு கூறுவதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளனர்.

இந்த ரீவியூக்கள் மூலம் அந்தப் பொருட்கள் மற்றும் அதன் விற்பனையாளர்களை மதிப்பிட முடியும். மேலும் இவ்வாறு உங்கள் அனுபவத்தை மதிப்பிடுவதன் மூலம் குறைகளை அந்த இணைய நிறுவனத்திற்குத் தெரியப்படுத்த முடியும். ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் மீது அதிக எதிர்மறையான விமர்சனங்கள் எழும் போது, அதன் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

 

WS Retail விற்பனையாளர்

WS Retail விற்பனையாளர்

பிளிப்கார்ட்-ஐ பொறுத்தவரை 'WS Retail' என்ற விற்பனையாளரை நம்பலாம். ஏனெனில் இது அந்நிறுவனத்தின் மொத்த விற்பனை (Wholesale) பிரிவு ஆகும். மூன்றாம் தரப்பு அல்ல.

பொருட்களை விற்பனை செய்யும் திரையில் பொருட்களுக்கு அருகில் "Fulfilled by Amazon" அல்லது "Flipkart Assured" என இருந்தால் அது நம்பகமான பொருள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. அந்த மூன்றாம் தரப்பு விற்பனையாளர் , இணைய நிறுவனத்தின் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் சேவையைப் பயன்படுத்துவதால் பொருட்களுக்குத் தரும் உத்திரவாதம் தான் இது. எனவே இதைப் பொருட்களின் நம்பகத்தன்மையுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது.

 

உண்மையானதுடன் ஒப்பிடுதல்

உண்மையானதுடன் ஒப்பிடுதல்

ஒரு பிரபலமான நிறுவனத்தின் பொருட்களை வாங்க நினைக்கும் போது, அந்த நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று அதன் மாடல் எண், அம்சங்கள் மற்றும் கூறுகளைத் தெரிந்துகொண்டு இந்த இணைய வர்த்தக நிறுவனத்தில் குறிப்பிட்டுள்ளவற்றுடன் ஒப்பிட வேண்டும். ஆனால் அந்தப் பொருட்களுக்குத் தற்போது தேவை அதிகம் இல்லையெனில், அதிகத் தள்ளுபடி வழங்குவது சகஜமான ஒன்றே.

லோகோ

லோகோ

நீங்கள் ஒரு பொருளை ஏற்கனவே வாங்கியிருத்து அதைப் பரிசோதிக்க விரும்பினால், லோகோ சரியான இடத்தில் உள்ளதா போன்ற நுணுக்கமான விசயங்களைச் சரிபார்க்கலாம். அப்பொருள் கைப்பேசியாக இருக்கும் பட்சத்தில் ,ஐ.எம்.இ.ஐ எண்ணைச் சரிபார்க்கலாம். பொருட்களில் ஏதேனும் சந்தேகம் உடனே அதைத் திருப்பி அனுப்பிப் பணத்தைத் திரும்பப் பெறலாம். இது உங்களால் சேதப்படுத்தப்பட்ட பொருட்களுக்குப் பொருந்தாது.

திரும்பப்பெறும் விதிகளைக் கவனித்தல்

திரும்பப்பெறும் விதிகளைக் கவனித்தல்

மின்னணு பொருட்கள் போன்ற சிலவற்றிற்கு மட்டும் பொதுவாகத் திரும்பப்பெறும் காலவரம்பு 10 முதல்15 நாட்கள் எனக் குறுகியதாக இருக்கும். இதில் 15 நாட்கள் என்பது நீங்கள் பொருளை பதிவு செய்த நாளிலேயே துவங்கிவிடும். அது உங்களிடம் வந்து சேர்ந்த நாளில் இருந்து துவங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை

பிரச்சனை

பொருள் உங்களிடம் வந்து சேர 5 நாட்கள் ஆகி, நீங்கள் 10 நாட்கள் பயன்படுத்தி 15 வது நாளில் செயல்படாமல் போகிறது என வைத்துக்கொள்வோம். இந்தச் சூழ்நிலையில், அந்தப் பொருளுக்கு 1 வருட உத்திரவாதம் இருந்தாலும் இணைய வர்த்தக நிறுவனம் அதற்குப் பொறுப்பேற்காது. நீங்கள் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரை நேரிடையாகத் தொடர்புகொண்டு மாற்றித்தரக் கோரவேண்டும். அது போலியான பொருளாக இருக்கும்பட்சத்தில், அந்நிறுவனமும் உங்களுக்கு உதவமுடியாது.

அதிகத் தள்ளுபடி என்ற வலையில் விழுந்துவிடக்கூடாது

அதிகத் தள்ளுபடி என்ற வலையில் விழுந்துவிடக்கூடாது

சமீபத்தில் புதிதாக வெளியான ஒரு பொருளை அதிகத் தள்ளுபடிக்குத் தருகிறார்கள் என்றால் அது நிச்சயம் போலியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். எடுத்துக்காட்டாக விளையாட்டு காலணிகளை எடுத்துக்கொண்டால், அச்சுஅசலாக உண்மையானதைப் போலவே காட்சியளிக்கும் போலிகளைப் பாதி விலைக்கு விற்பனையாளர்கள் தருவர். ஏற்கனவே கூறியபடி, ஒரு மாடல் காலாவதியாகி விட்டால் அதை விற்றுதீர்க்க தள்ளுபடி தருவதில் நியாயம் உள்ளது. எனவே எந்தவொரு தள்ளுபடி என்றாலும் பொருளை வாங்கும் முன் நன்கு அலசி ஆராய்வது நல்லது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+