இந்திய பங்கு சந்தையில் பை-பேக் எப்படி செயல்படுகிறது?

பை பேக் எனப்படும் பங்குகளைத் திரும்ப வாங்குதல் என்பது ஒரு நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஒரு பங்ககுள் மதிப்பு இவ்வளவு என அளிக்கும் போதும், முன்பு பல முதலீட்டாளர்களுக்கு அளித்த பங்குகளை மீட்டு நிறுவனத்தில் உள்ள உரிமையை அதிகப்படுத்துவது போன்ற வகையில் நடைபெறுகிறது.

பொதுவாக நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து பங்குகளைப் பை பேக் செய்யும் போது சந்தையின் பிரீமியம் விலையினை அளிக்கும்.

இந்தியாவில் பங்குகளை இரண்டு வழிகளில் பைபேக் செய்கின்றனர். ஒன்று ஏலம் விடும் டெண்டர் ரூட் மற்றும் திறந்த சந்தை வழி.

ஏலம் விடுதல்

ஏலம் விடுதல்

விளம்பரதார்கள் மற்றும் பொது மக்களிடம் உள்ள பங்குகள் என இரண்டுமே ஏழும் விடும் முறையில் திரும்பப் பெறப்படும். எவ்வளவு பங்குள் மற்றும் விலை என்பது நிலையாக முடிவு செய்யப்பட்டு இருக்கும்.

பங்குதார்களுக்குச் சலுகை குறித்த விவரங்களைக் கட்டணத்துடன் 21 நாட்களுக்கு முன்பே தெரிவித்து இருக்க வேண்டும், குறைந்தது 15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை பை பேக் மூலம் பங்குகளைத் திரும்பப்பெறப்படும். 15 நாட்கள் பைபேக் ஆஃபர் முடியும் என்றால் பணம் பரிவர்த்தனை மற்றும் ரத்து குறித்த விவரங்களை முதலீட்டாளர்களுக்குக் கடிதம் மூலம் தெரிவுப்படுத்த வேண்டும்.

 

திறந்த சந்தை வழி

திறந்த சந்தை வழி

பொது மக்கள் வசம் உள்ள பங்குகள் மட்டுமே திறந்த நிலை சந்தை மூலம் திரும்பப் பெறப்படும். பங்குகளின் எண்ணிக்கை மற்றும் அதிகபட்ச உச்சவரம்பு விலை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பங்குகளை வாங்குவதற்கும், குறைந்த விகிதத்தில் வாங்க அனுமதிக்கப்படுகிறது.

திறந்த சந்தைடில் பங்குகளைத் திரும்பப் பெறும் போது நிறுவனம் வணிக வங்கியை நியமிக்க வேண்டும். பைபேக் செய்வதற்குக் குறைந்தது 7 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். பைபேக் செய்யப்போவதற்காகக் கடிதத்தினை அறிவித்த இரண்டு நாட்களுக்குள் செபியில் சமர்ப்பிக்க வேண்டும்.

 

பிற விதிகள்

பிற விதிகள்

போன்ஸ் ஆகப் பெற்ற பங்குகளைப் பைபேக் மூலம் விற்பனை செய்ய முடியாது. ரொக்க பணம் அல்லது செக்காக மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும், ஒரு முறை அறிவிப்பை வெளியிட்டு விட்டால் அதனை நிறுவனங்களால் திரும்பப் பெற முடியாது. லாக் செய்யப்பட்டுள்ள பங்குகளை மீண்டும் வாங்க முடியாது.

பைபேக்கில் எந்தப் பங்கு தாரர்களிடம் எல்லாம் 1 சதவீதத்திற்கும் அதிகமாகப் பங்குகள் உள்ளதோ அவர்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.

 

பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கான காரணங்கள்

பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கான காரணங்கள்

நிதி நிலையில் வலுவாக உள்ள போது இருப்புநிலைக் குறிப்பில் தங்கள் இருப்புக்களில் மிகப்பெரிய தொகையை வைத்திருக்கும் போது, தற்போதைய சந்தை விலை அவர்களின் உண்மையான மதிப்பைப் பிரதிபலிப்பதாக இல்லை எனும் போது நிறுவனங்கள் பங்குகளைத் திரும்பப் பெறுகின்றன.

பங்கு பைபேக் சந்தையில் பங்குதாரர் மதிப்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் விலையை உயர்த்தக் கோரிக்கைகளை விட்டு வெளியேறும் பங்குகளின் எண்ணிக்கை (சப்ளை)-ஐ குறைக்கிறது.

 

நிறுவனத்தினைக் கட்டுப்படுத்த முயல்வது

நிறுவனத்தினைக் கட்டுப்படுத்த முயல்வது

அதிகப் பங்குகளை வைத்து இருக்கும் ஒரு முதலீட்டாளர் நிறுவனத்தினைக் கட்டுப்படுத்த முயல்வதைக் குறைக்கவே இந்தப் பைபேக் முக்கியமாகப் பயன்படுகிறது. இதனால் நிறுவனங்கள் எந்தப் பயமும் இன்று பங்கு சந்தையில் இருந்து நிதிகளைத் திரட்ட முடியும்.

பைபேக்

பைபேக்

பைபேக் முதலீட்டாளர்களை ஈர்க்கும் படியே அமைக்கப்படும். வெளியில் இருக்கும் பங்குகளின் அளவைக் குறைக்கும் போது ஒரு பங்கில் இருந்து நிறுவனம் பெறும் வருவாய் என்பது தானாகவே அதிகரிக்கும். குறைந்த கால முதலீட்டாளர்களுக்கு இது அதிக லாபம் அளிக்கும் ஒரு முறை. நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும். பைபேக் செய்யும் போது முதலீட்டாலர்கள் முந்திக்கொண்டு அதிகளவில் பங்குகளை வாங்கவும் செய்வார்கள்.

கூடுதல் முதலீடு

கூடுதல் முதலீடு

நிறுவனம் வேகமாக வளரும் போது நிறுவனர்கள் தங்களது சொந்த நிறுவனத்தில் கூடுதலாக முதலீடு செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பொருளாதார நிலைமைகள் மீது நிறுவனங்களுக்கு நம்பிக்கை இல்லாத போது பழமைவாத பைபேக் முறையினைப் பின்பற்றுவார்கள், இது பங்குதாரர்களை மகிழ்வதற்கான ஒரு கூடுதல் வழியாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+