வருமான வரி தாக்கல் செய்யும் போது உங்களிடம் இருக்க வேண்டிய 11 முக்கிய ஆவணங்கள்!

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்கிவிட்டது. இந்த வருடம் நாம் கண்டிப்பாக வருமான வரியைச் செலுத்த வேண்டும். இல்லை என்றால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும்.

வருமான வரியை எளிமையாகத் தாக்கல் செய்யம் முன்பு அதற்குத் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கையில் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் இல்லை என்றால் வரி தாக்கல் செய்வது கடினமாகிவிடும்.

இந்த ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்யும் போது வரி செலுத்துனர்களின் சம்பள பிரேக்கப் மற்றும் வீடு அல்லது சொத்துக்கள் மூலம் வருகின்ற வருவாய் போன்றவற்றையும் உள்ளிட வேண்டும். எனவே தான் வரி தாக்கல் செய்யும் முன்பு தேவையான ஆவணங்களை அனைத்தையும் உங்களைக் கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் கூறுகிறது.

சரி, வருமான வரி தாக்கல் செய்யும் போது வைத்துக்கொள்ள வேண்டிய ஆவணங்கள் குறித்து இங்குப் பார்க்கலாம்.

படிவம் 16

படிவம் 16

நீங்கள் மாதம் சம்பளம் வாங்கும் நபர் என்றால் வருமான வரி தாக்கல் செய்யும் போது உங்களுக்குக் கண்டிப்பாக ஐடிஆர் 16 படிவம் தேவை. அதில் உங்களுக்கு நிறுவனம் அளித்த சம்பளம் டிடிஎஸ் எவ்வளவு பிடித்தம் செய்யப்பட்டுள்ளது போன்ற விவரங்கள் இருக்கும். உங்கள் சம்பளத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால் கண்டிப்பாகப் படிவம் 16 உங்கள் கையில் இருக்க வேண்டும்.

சம்பள பிரேக்அப்

சம்பள பிரேக்அப்

நடப்பு ஆண்டு முதல் வருமான வை தாக்கல் செய்ய ஐடிஆர் 1 படிவத்தில் நிறுவனங்கள் சம்பள பிரேக்கப்பினை குறிப்பிட வேண்டியது கட்டாயம். எனவே அது இருக்கும் போது வருமான வரி தாக்கல் செய்வது எளிமையாகிவிடும்.

பே ஸ்லிப்

பே ஸ்லிப்

சம்பள பிரேக்கப் விவரங்களை உள்ளிட வேண்டும் என்பதால் பே ஸ்லிப்பில் வீட்டு வாடகை படி எவ்வளவு, பயணப்படி எவ்வளவு போன்ற விவரங்கள் இருக்கும். இந்த ஆண்டு 19,200 ரூபாய் வரை பயணப்படிக்கு விலக்கு உண்டு. ஆனால் 2018-2019 நிதி ஆண்டு முதல் ஸ்டாண்டர்ட் டிடக்‌ஷனாக 40,000 ரூபாய் வரி மெட்க்கல் அலவென்ஸ் மற்றும் பயனபப்டி இரண்டு சேர்ந்துவிடும்.

வங்கி மற்றும் தபால் அலுவலக டெபாசிட் மூலம் கிடைத்த வட்டி வருவாய்

வங்கி மற்றும் தபால் அலுவலக டெபாசிட் மூலம் கிடைத்த வட்டி வருவாய்

2017-2018 நிதி ஆண்டில் வங்கி மற்றும் தபால் நிலைய சேமிப்புக் கணக்குகள் டெபாசிட்கள், பிக்சட் டெபாசிட்கள் மூலம் கிடைத்த வட்டி வருவாய் குறித்த விவரங்களை எடுத்து வைத்துக்கொள்ள வண்டும். வங்கி பாஸ்புக் மூலம் இதனைச் சரிபார்க்க முடியும். தனிநபர்கள் 10,000 ரூபாய்க்கும் அதிகமாக வங்கி டெபாசிட்கள் மீது வட்டி வருவா பெற்று இருக்கும் போது வரி செலுத்த வேண்டும்.

படிவம் 26AS

படிவம் 26AS

இதுவும் படிவம் 16 போன்று தான். இதிலும் உங்கள் பான் எண் கீழ் ஒரு நிதி ஆண்டுக்கான டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட விவரங்கள் இருக்கும். இதனை வருமான வரி இணையதளம் மூலம் நீங்களே பதிவிறக்கம் செய்ய முடியும்.

வரிச் சேமிப்பு முதலீட்டு ஆவணங்கள்

வரிச் சேமிப்பு முதலீட்டு ஆவணங்கள்

80சி, 80சிசிசி மற்றும் 80சிசிடி போன்ற வரிச் சேமிப்பு பிரிவுகளின் கீழ் முதலீடு செய்து இருக்கும் போது அதற்காக ஆவணங்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

முக்கியமாக

1) பிபிஎப்
2) ஈபிஎப்
3) ஈஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு விவரங்கள்
4) லைப் இன்சூரன்ஸ் பிரீமியம்
5) என்பிஎஸ் மற்றும் பிற

 

80டி மற்றும் 80யூ

80டி மற்றும் 80யூ

சேமிப்பு மற்றும் முதலீடுகள் மட்டும் இல்லாமல் 80டி மற்றும் 80யூ பிரிவு கீழும் வரி விலக்கு பெற முடியும். தற்போது 25,000 ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு பிரீமியம் நீங்கள் செலுத்தி இருந்தால் வை விலக்கு பெற முடியும்.

வீட்டு கடன்

வீட்டு கடன்

வீட்டு கடன் பேற்று இருக்கும் போது வட்டியில் இருந்து 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு பற முடியும். எனவே வீட்டுக் கடனில் எவ்வளவு வரி செலுத்தியுள்ளீர்கள் என்ற விவரத்தினைப் பெற்று வரி விலக்கு பெற்றுப் பயன்பெறலாம்.

முதலீட்டு வரவுகள்

முதலீட்டு வரவுகள்

சொத்துக்கள் மற்றும் பங்கு சந்தை முதலீடுகள் போன்றவற்றின் மீலம் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக 2018 ஜனவரி 31-க்கு பிறகு விற்று லாபம் பார்த்து இருக்கும் போது 10% வரி செலுத்த வேண்டு வரும்.

அதார் கார்டு

அதார் கார்டு

வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதார் எண்ண்டன் பான் எண்ணை இணைத்து இருக்க வேண்டும் மேலும் ஆதார் சரிபார்ப்பு மூலமாக வருமான வரித் தாக்கலினை தபால் ஏதும் அனுப்பாமல் எளிமையாகச் செய்துவிடலாம்.

பான் கார்டு

பான் கார்டு

வருமான வரி இணையதளத்தில் உள்நுழை பான் கார்டு எண் தான் பயனர் ஐடி என்பதால் அதுவும் மிக முக்கியமான ஆவணம் ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+