வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்ற செயலி யூபிஐ பணப் பரிவர்த்தனை சேவையினைச் சோதனை செய்து வரும் நிலையில் 6 மாதத்திற்கு முன்பு கடன் மற்றும் கிரெடிட் கார்டு பெறும் சேவையினையும் அறிமுகம் செய்து இருந்த நிலையில் தற்போது இலவசமாகக் கிரெடிட் ஸ்கோர் செக் செய்யும் சேவையினை வழங்கி வருகிறது.
எனவே வாட்ஸ்ஆப்-ல் இலவசமாகச் சிபில் கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
மிஸ்டு கால்
வாட்ஸ்ஆப் மூலம் முதலில் சிபில் கிரெடிட் ஸ்கோர் பெற 8287151151 என்ற மொபைல் எண்ணிற்கு மிஸ்டு கால் அளிக்க வேண்டும்.
வாட்ஸ்ஆப் சாட்
மிஸ்டு கால் செய்த உடன் உங்கள் மொபைல் எண் சிபில் ஸ்கோர் வாட்ஸ்ஆப் சாட்-ல் சேர்க்கப்படும்.
தேவையான விவரங்கள்
பின்னர் உங்கள் பெயர், பிறந்த தேதி, பான் எண், வீட்டு முகவரி, எந்த நகரத்தில் உள்ளீர்கள், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றைச் சாட்டிங் மூலம் அனுப்ப வேண்டும்.
சிபில் ஸ்கோர்
இந்த விவரங்களை எல்லாம் அளித்த பிறகு உங்கள் வாட்ஸ்ஆப் சாட்டுக்குச் சிபில் கிரெடிட் ஸ்கோர் அனுப்பப்படும்.
ஒருமுறை கடவுச்சொல்
விஷ்ஃபின் நிறுவனம் உங்கள் விவரங்களைச் சரிபார்க்க ஒரு முறை கடவுச்சொல்லை உங்கள் போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பும். இதனை எல்லாம் உறுதி செய்த பின்னர்த் தான் உங்களுக்குக் கிரெடிட் ஸ்கோர் அளிக்கப்படும்.
வாய்ஸ் சேவை
விரைவில் வாய்ஸ் சேவை மூலம் இது போன்ற சேவையினை வழங்கும் வசதிகளைத் தயார் செய்து வருவதாகவும் விஷ் ஃபின் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications