பெரும்பாலான மக்கள் தாங்கள் கடினமான உழைத்து சேர்த்த பணத்தின் ஒரு பகுதியை அரசாங்கத்திற்குத் தருவதற்கு விருப்புவதில்லை. ஆனால் அது நாட்டின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. வரி என்ற பெயரில் வசூலிக்கப்படும் பணம் அரசாங்கத்தால் பல்வேறு மக்கள் நல திட்டங்களுக்கும், ஒட்டுமொத்த தேசத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது பலர் பணத்தைத் திரட்ட பல்வேறு மாற்று வழிகள் உள்ளன எனக் கூறலாம். ஆனால் நிஜத்தில் அரசுக்கு இதிலிருந்து தான் பெரும்பான்மையான வருவாய்க் கிடைக்கிறது. மக்கள் வரிக் கணக்கீடுகளில் முறைகேடுகள் செய்யும் போதோ அல்லது வரி செலுத்தாமல் இருந்தாலோ, அரசுக்குத் தான் வருவாய் குறையும். அதனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சியும் குறைய வாய்ப்புள்ளது.
வரி செலுத்துவதைத் தவிர்ப்பவர்களுக்கு விதிக்கப்படும் 5 பொதுவான வரி அபராதங்களை இங்கே காணலாம்.
1) வரிச் செலுத்துவதில் தாமதம்
ஒவ்வொருவரும் தங்களுடைய வரிக்கு உட்பட்ட வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும் மற்றும் அதைக் குறிப்பிட்ட காலநேரத்திற்குள் செலுத்த வேண்டும் என்பதை இந்திய வருமானவரித் துறை அறிவுறுத்தும். நிலவையிலிருக்கும் முழு வரித்தொகையையும், அந்தக் காலத்திற்குள் செலுத்தவில்லை எனில் மதிப்பீட்டு அலுவலர் ஆய்வின் போது அபராதம் விதிக்கமுடியும்.ஆனாலும் இந்த அபராதம் நிலுவையிலுள்ள வரித் தொகையை அதிகரிக்காது.
2) வரி தாக்கல் செய்வதில் தாமதம்
வருமானவரி தாக்கல் செய்வதற்குப் பொதுவாகக் கடைசித் தேதி ஜூலை 31 ஆக இருக்கும் நிலையில், அதற்குள் வரிதாக்கலை செய்து முடிக்கவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும். அதே ஆண்டின் டிசம்பர் 31க்குள் வருமான வரி தாக்கலை செய்துமுடித்தால் ரூ5000 அபராதமாக விதிக்கப்படும். அதற்குப் பின்னர் ரூ10,000 அபராதம் விதிக்கப்படும்.
ஒரு நபர் வேண்டுமென்றே வரி தாக்கலின் போது தவறான தகவல்களை அளித்தால் சிறை தண்டனை வழங்கப்படும். வரிஏய்ப்பு செய்த தொகைக்கு ஏற்றவாறு 6மாதம் முதல் அதிகபட்சமாக 7ஆண்டுகள் வரை சிறை தண்டனையின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.
3) வெளிப்படுத்தப்படாத வகையில் வரும் வருமானம்
ஒவ்வொருவரும் தனக்கு வருமானம் வரும் அனைத்து வழிகளையும் வெளிப்படுத்துவது சட்டப்படி கட்டாயம் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு நபர் தனக்கு வருமானம் வரும் அனைத்து வழிகளையும் வெளிப்படுத்தவில்லை எனத் தெரிந்தால், செலுத்தவேண்டிய வரியில் 10% கணக்கிட்டு, மதிப்பீடு அலுவலர் அபராதம் விதிக்க முடியும்.
இந்த வகையில் அபராத தொகை மிகவும் அதிகமாக இருக்கும். கூடுதலாகத் தெளிவுபடுத்தப்படாத முதலீடுகள், பணம் அல்லது சரியாக விளக்கப்படாத/ அங்கீகரிக்கப்படாத வழிகளில் வரும் வருமானம் போன்றவற்றிற்கு அபராதம் விதிக்க மதிப்பீட்டு அலுவலருக்கு அதிகாரம் உள்ளது.
4) ரூ2 லட்சத்திற்கு அதிகமாக ரொக்கமாகப் பெறுதல்
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்பு அமல்படுத்தப்பட்ட பிரிவு 269ST யை பற்றிப் பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். இதன் படி ஒரு நபர் ரூ2 லட்சத்திற்கு அதிகமான தொகையை ரொக்கமாக மூன்றாம் தரப்பிடம் இருந்து ஒரே நாளில் அல்லது ஒரே பரிவர்த்தனையில் அல்லது ஒரு நிகழ்வில் பெறக் கூடாது. அப்படிப் பெற்றால், ரொக்கமாகப் பெற்ற பணத்திற்கு இணையாக மதிப்பீட்டு அலுவலர் அபராதம் விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
5) வேண்டுமென்றே வரிஏய்ப்பு செய்தல்
வரிஏய்ப்பு என்பது ஏதேனும் ஒரு வழியில் வருமானத்தைக் குறைத்துக் காட்டுதல் அல்லது வருமானத்தைத் தவறாகக் குறிப்பிடுதல் ஆகும். ஒரு நபர் வரிஏய்ப்பு செய்ததற்காகப் பிடிபட்டால், சிறைத்தண்டனை நிச்சயம்.
வருமானவரிச் சட்டத்தின் 270Aன் பிரிவு படி, வருமானத்தைக் குறைத்து காட்டும் போது, வரிக்குற்பட்ட தொகையில் 50%ஐ அபராதமாக விதிக்கப்படும். வருமானத்தைத் தவறாகக் குறிப்பிட்டால், வரிசெலுத்த வேண்டிய தொகையில் 200% அபராதமாக விதிக்கப்படும். மேலும் வரிஏய்ப்பு செய்வோருக்குப் பிரிவு 276Cன் படி சிறைத்தண்டனையும் விதிக்க வாய்ப்புள்ளது.
பல வழிகள்
மக்கள் இன்னும் பல வழிகளில் வரி செலுத்தவதை தவிர்க்கின்றனர். அதற்கேற்றவாறு அபராதங்களும் விதிக்கப்படுகின்றன. எனவே சரியான வரிப் பணத்தைச் சரியான நேரத்தில் செலுத்துவதன் மூலம் அபராதங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பிற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications