சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஒரு வருட காலத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்து வருகின்றது. இதனுடைய விலை சர்வதேச அளவில் 67 டாலருக்கு நிகரமாக வர்த்தகம் செய்யப்பட்ட போதிலும் உள்நாட்டுச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்ந்து வருகின்றது. சிறிது காலத்திற்கு முன்னர் உள்னாட்டுச் சந்தையில் எரிபொருட்களின் விலையானது புதிய சாதனை அளவைத் தொட்டது. கடந்த சில நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை அதிகரித்தது. இத்தகைய விலை உயர்வை மிகச் சமீபத்தில் யாரும் பார்த்ததில்லை.
எனவே, எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து வருகின்றது. எனினும் இந்திய அரசு உறுதியான எந்தத் தீர்வுக்கும் இன்னும் வரவில்லை. எனினும் நாம் நம்முடைய கடன் அட்டைகளைப் பயன்படுத்தி எரிபொருள் செலவில் சிறிது மிச்சப்படுத்தலாம்.
எனவே நாங்கள் இங்கு உங்களுக்காக எரிபொருள் செலவை குறைக்க உதவும் சில சிறந்த கடன் அட்டைகளைப் பற்றிய விபரங்களைப் பற்றித் தெரிவித்துள்ளோம்:
எஸ்.பி.ஐ யின் எளிமையான பாதுகாப்பைப் பெறும் அனுகூல அட்டை
எஸ்.பீ.ஐ. இன் இந்த அட்டை மூலம் எந்தவொரு எரிபொருள் நிலையத்தில் நீங்கள் எரிபோருள் வாங்கினாலும் உங்களுக்கு 1% கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. இருப்பினும், இந்தச் சலுகையைப் பெற நீங்கள் 500 முதல் 3000 வரையிலான ருபாய் மதிப்பிற்கு எரிபொருள் வாங்க வேண்டும்.
நீங்கள் வாங்கும் ரூ. 100 மதிப்பிலான எரிபொருளுக்கு 1 வெகுமதி புள்ளி உங்களுக்குக் கிடைக்கும்.
ஹெச்.டி.எப்.சி வங்கி பாரத் கேஸ் பேக் அட்டை
இந்த அட்டையைப் பயன்படுத்திச் செய்யப்படும் குறைந்த பட்ச பரிவர்த்தனையான ரூ. 400 மீது உங்களுக்கு 1% கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. அதோடு உங்களின் பரிவர்த்தனைத் தொகையில் 5% ரொக்கமாக (அதிகப் பட்சம் ரூ 150 வரை) திரும்பக் கிடைக்கும். இதில் நீங்கள் செலவு செய்த தொகையைத் திரும்பச் செலுத்த 50 நாட்கள் வரை வட்டி இல்லா அவகாசம் கிடைக்கின்றது.
ஆக்சிஸ் பாங்க் பிரைவேட்ஜ் கிரெடிட் கார்டு
இந்த அட்டையைப் பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு ரூ. 400 - முதல் 4000 வரை செலவு செய்யும் நபர்களுக்கு அதிகபட்ச நன்மையாக ஒர் மாதத்திற்கு ரூ. 400 வரை கிடைக்கின்றது. அதோடு ரூ. 2,500 க்கும் அதிகமான மதிப்புடைய பரிவர்த்தனைகளுக்கு இ எம் ஐ முறையில் பணம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது.
இந்தியன் ஆயில் சிட்டி பிளாட்டினம் கடன் அட்டை:
இது ஒரு இந்திய ஆயில்-சிட்டி பேங்க் பிரத்தியேக அட்டை ஆகும். இதைச் சிட்டி பேங்க் ஈ.டி.சியில் தேய்க்கும் பொழுது மட்டுமே வாடிக்கையாளருக்கு நன்மைகள் கிடைக்கும். இதைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு எரிபொருள் சார்ந்த பரிவர்த்தனைக்கும் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 4 டர்போ புள்ளிகள் அல்லது 2.67% கிடைக்கும். எரிபொருள் கொள்முதல் மீதான 1% எரிபொருள் கட்டணத்தின் மீதும் முழுமையான விலக்கு அளிக்கப்படுகிறது. 1 டர்போ புள்ளி என்பது ரூ. 1 மதிப்புடைய எரிபொருளுக்குச் சமம்.
கொட்டக் ராயல் கையொப்பம் கடன் அட்டை
இந்தக் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களால் அதிக எரிபொருள் கட்டணத்தைச் சேமிக்க முடியும். இதில் ஒரு வருடத்தில் ரூ 3500 வரை எரிபொருள் கூடுதல் கட்டணத்தைச் சேமிக்கலாம். ஒவ்வொரு ரூ. 150 செலவிற்கும் அட்டை வைத்திருப்பவர் 4 முறை வெகுமதி புள்ளிகளைப் பெறுவார்.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications