வரலாறு காணாத லாபத்தில் அமேசான்.. அடுத்த டாக்கெட் 1 டிரில்லியன் டாலர்..!

அமெரிக்க முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் சில நாட்களுக்கு முன்பு மோசமான காலாண்டு முடிவுகளை அறிவித்துச் சுமார் 120 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்த நிலையில், முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் வரலாறு காணாத அளவிற்கு லாபத்தை அறிவித்துள்ளது.

வரலாறு காணாத லாபத்தில் அமேசான்.. அடுத்த டாக்கெட் 1 டிரில்லியன் டாலர்..!

2.5 பில்லியன் டாலர் லாபம்

2018ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் அமேசானின் கிளவுட் சேவைகள் மற்றும் விளம்பர வர்த்தகம் பெரிய அளவிலான வருமானத்தை ஈட்டிய நிலையில் 3 மாத காலத்திற்குச் சுமார் 2.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.

1,200 சதவீத லாபம்

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் அமேசான் வெறும் 197 மில்லியன் டாலர் லாபத்தை அடைந்திருந்த நிலையில் தற்போது 1,200 சதவீத வளர்ச்சியுடன் சுமார் 2.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.

தொடர் லாபம்

இதன் மூலம் அமேசான் முதல் முறையாக 2 பில்லியன் டாலர் லாபம் என்ற அளவில் இருந்து தாண்டியுள்ளது. இதோடு கடந்த 3 காலாண்டுகளாக அமேசான் தொடர்ந்து லாபத்தை மட்டுமே அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

வருவாய்

இக்காலாண்டில் அமேசான் 53.41 பில்லியன் டாலர் வருவாயை அடையும் எனக் கணிப்புகள் வெளியாகிய நிலையில், இக்கணிப்பில் இருந்து சிறிய அளவு குறைந்து 52.9 பில்லியன் டாலர் வருவாயைப் பெற்றுள்ளது.

வெப் சர்வீசஸ்

ஜூன் காலாண்டில் அமேசான் நிறுவனத்தின் வெப் சர்வீசஸ் சேவைகள் மட்டும் சுமார் 6 பில்லியன் டாலர் வருவாயை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 டிரில்லியன் டாலர் மதிப்பீடு

இதன் மூலம் அடுத்தச் சில காலாண்டுகளில் அமேசான் நிறுவனம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் 1 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அமெரிக்க முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் இனி வரும் வாரத்தில் அதிகளவிலான முதலீட்டை பெறுவார்கள் எனத் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+