ஆதார் அடையாள அட்டை பெற்றவர்கள், ஆதார் எண்ணோடு மொபைல் எண்ணையும் இணைத்துள்ளவர்கள் வருமானவரித் துறையின் இணையதளம் மூலமாக எலக்ட்ரானிக் பான் அட்டை (e-PAN) பெறலாம்.
தற்போதைய நிலையில், இந்துக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ( HUFs), அறக்கட்டளைகள், நிறுவனங்கள், உரிய வயதடையாத மைனர்கள், இந்தியாவில் வசிக்காதவர்கள் (NRI) போன்றோர் இணையம் வழியாக எலக்ட்ரானிக் பான் அட்டை (e-PAN) பெறமுடியாது.
பான் கார்டு எதற்கு
ஒருவருடைய வருமானம், வருமானத்துக்கான ஆதாரம், செலுத்திய வரி போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் பான் அட்டை உதவுகிறது.
பான் அடையாள எண்
கீழ்க்கண்ட நடைமுறைகளின் போது பான் அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1. 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட அசையாச் சொத்துக்களை வாங்கினாலும் விற்றாலும்,
2. 50,000 ரூபாய்க்கு அதிகமான வங்கிப் பரிவர்த்தனைகளின் பொழுது,
3. வங்கிக் கணக்கு அல்லது டீ மேட் கணக்குத் தொடங்கும் பொழுது,
4. மோட்டார் வாகனங்களை வாங்கும் பொழுதும் அல்லது விற்கும் பொழுதும்,
5. வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் பொழுது,
ஆகிய நடவடிக்கைகளின் பொழுது பான் எண் அவசியம்.
இ-பான் என்றால் என்ன?
டிஜிட்டல் கையெழுத்துடன், மின்னணு வடிவத்தில் பெறக்கூடிய பான் அட்டையைத்தான் எலக்ட்ரானிக் அல்லது மின்- பான் அட்டை என அழைக்கிறோம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் ஜீன் 29 ஆம் தேதி முதல் மின்- பான் எண் வழங்கப்படுகிறது. ஏற்கனவே மெய்வடிவில் பான் அட்டை (physical PAN) பெற்றறவர்ளும் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து மின்-பான் அட்டையப் பெறலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
இ-பான் பெற எவ்வாறு விண்ணப்பிப்பது?
ஏற்கனவே பான் அட்டை இல்லாதவர்கள் மின் - பான் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். ஆதார் எண் பெற்றவர்கள், அந்த ஆதார் எண்ணோடு தங்களுடைய மொபைல் எண்ணை இணைத்தவர்கள் இந்திய வருமானவரித் துறையின் இணையத் தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
வாடிக்கையாளரைப் பற்றிய தகவல்கள் (KYC) உங்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒரு முறை பயன்படுத்துதற்கு ஏற்ற கடவுச் சொல் மூலம் உறுதி செய்யப்படும்.
ஆதார் எண்ணில் உள்ள தகவல் தொகுப்பின் அடிப்படையில் மின்- பான் அட்டை வழங்கப்படும். உங்களுடைய புகைப்படம் மற்றும் கையெழுத்து ஆகியவற்றை உரிய வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மின் - பான் அட்டை பெற்றவர்களுக்கு மெய்வடிவ பான் அட்டை வழங்கப்படாது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications