அனைத்து வகையான தொழில்களும் அது எந்த வகையாக இருந்தாலும், அத்தொழில் நீடித்து நிலைக்கவும், தொடர்ந்து செயல்படவும், விரிவாக்கம் செய்யவும் பணம் மிகவும் அவசியம். பணத்தைத் தவிர வேறு வழியே இல்லை என்ற தோற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பணத்தை விடச் சிறந்த தேர்வாக இருப்பது மாற்றவியலாத கடன் பத்திரங்கள் (non convertible debentures).
இந்தக் கடன் பத்திரங்கள் ஒரு நிலையான வட்டி விகிதத்தில் நீண்ட கால முதலீட்டுப் பத்திரமாக நிறுவனங்களால் வழங்கப்படும். ஆனால் இந்த முதலீடு பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்றதாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளது.
ஒரே ஒரு குறை
இதில் உள்ள ஒரே குறை என்னவென்றால், இந்த மாற்றவியலாத கடன்பத்திரங்களை எதிர்காலத்தில் பங்குகளாக மாற்றமுடியாது(பெயருக்கேற்றவாறு!). அதே நேரம் மாற்றக்கூடிய கடன்பத்திரங்களில் இந்த வசதி உள்ளது.
லாபம் எப்படி?
ஏன் இந்த வகைக் கடன் முதலீட்டுத் திட்டங்கள் இத்தகைய சமநிலையில் உள்ளன கேட்டால் மிகச்சுலபமாகச் சொல்லிவிடலாம். ஏனெனில் மற்ற வழக்கமான வங்கி நிரந்திர வைப்புநிதி திட்டங்களைக் காட்டிலும் இவை அதிக லாபத்தைத் தரக்கூடியது.
இணைய வழியில் ஏதேனும் பலனா?
இணையவழியில் நிறையப் பலன்கள் உள்ளன. டிமேட் படிவத்தில், மாற்றவியலாத கடன்பத்திரங்களுக்கு ஏகப்பட்ட சலுகைகள் உள்ளன. இதில் வரும் வட்டி வருவாய்க்கு டிடிஎஸ் வரிப் பிடித்தம் செய்யப்படாது. ஆனால் காகித படிவத்தில் வரிப் பிடித்தம் உண்டு.
பணப் பற்றாக்குறை பற்றி?
கடன் பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், பணத்தைப் பற்றிய கவலையை விட்டுவிடுங்கள். இவற்றை எளிதில் பணமாக மாற்றிக்கொள்ளலாம்.
ஆழம் தெரியாமல் காலை விடாதே!
மாற்றவியலாத கடன்பத்திரங்களில் எப்படி முதலீடு செய்வது எனத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். அனைத்துத் தகவல்களையும் காகித படிவத்தில் பூர்த்திச் செய்து சமர்ப்பிக்கும் வழி ஒன்று. டிமேட் கணக்கின் மூலம் இணையவழியில் விண்ணபித்து மறுவழி. மும்பை அல்லது தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இரண்டாம்பட்ச சந்தையில் இருந்தும் இந்தக் கடன்பத்திரங்கள் எடுத்துக்கொள்ளப்படும்.
பயிற்சி அவசியம்
இதைப் பற்றி நன்கு ஆராய்ந்து தெரிந்துகொள்ளுங்கள். இதில் முதலீடு செய்யும் முன் என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். கிரிடிட் ரேட், ஆப்பரின் கூப்பன் ரேட், விற்பவரின் நம்பகத்தன்மை போன்றவை முக்கியம்.
கதைகளை நம்பாதீர்
முதலீட்டாளர்களும் இந்த மாற்றவியலாத கடன்பத்திரங்கள் பாதுகாப்பானவையா இல்லையா என்பதை ஆராய வேண்டும். நிதி மேலாளர்கள் எப்போதும் பாதுகாப்பான கடன்பத்திரங்களையே பரிந்துரைப்பர்.
உங்கள் விருப்பம்
எப்போது கடன்பத்திரங்களுக்கு வட்டி செலுத்த வேண்டும் எனத் தெரியவில்லையா? உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாதாமாதம், காலாண்டிற்கு ஒரு முறை, அரையாண்டிற்கு ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை கூடச் செலுத்தலாம்.
More From GoodReturns

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications