ஆன் லைன் வர்த்தகராக ஆசையா - இந்த பத்தும் இருந்தால் போதும்

ஆன் லைன் வர்த்தகம் உலகத்தில் புதிய புதிய அவதாரங்களை எடுத்து வருகிறது. சிறிய அளவில் தொடங்கப்பட்ட பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள், உலக வணிக மேலாதிக்கவாதிகளோடு மல்லுக்கு நிற்கிறது. போட்டி போட்டு அறிவிக்கும் அதிரடிச் சலுகைகளும், தள்ளுபடிகளும் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் ஆன் லைன் வர்த்தகம் ஒரு டிரென்ட்டாக பரிணாமம் பெற்றுவிட்டது.

ஆன்லைன் வர்த்தகத்துக்கு இணைய வழியில் மேதாவித்தனங்கள் தேவை தான். ஆனால் ஆரம்பத்தில் அள்ளி இறைக்கும் அளவுக்கு ஆடம்பரம் தேவையில்லை. உங்களுக்கு ஒரு நல்ல வலைத்தளம்(வெப்சைட) கிடைத்து விட்டால் நீங்கள் வெற்றிகரமான வர்த்தகர்தான்.

 விமர்சனங்கள் தேவை

விமர்சனங்கள் தேவை

நீங்கள் தயாரித்து வழங்கும் பொருட்களின் தரத்தை வாடிக்கையாளர்களால் ஆய்வு செய்ய வேண்டும், அதன் மீது உள்ள முறையீடுகளையும் உறுதி செய்ய வேண்டும். உங்கள் பிராண்டுகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு ஆரோக்கிய விமர்சனங்கள் உங்களுக்கு உதவும்.

கலந்துரையாடல் அவசியம்

கலந்துரையாடல் அவசியம்

உங்கள் தயாரிப்புகளுக்கு நம்பகமான, வசதியான மற்றும் மேம்பட்ட வழிகளைக் கண்டறிய வேண்டும். உள்ளூர் தயாரிப்பு நிறுவனங்களை நேரில் சென்று பார்வையிடலாம். தரம் குறித்து விவாதிக்கலாம். இதேபோல் வெளிநாட்டு நிறுவனங்களிடமும் நீங்கள் தயாரிப்பு சார்ந்த உரையாடலை மேற்கொள்ள வேண்டும். நேரில் சந்திக்க இயலாவிட்டால் ஸ்கைப் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்தி ஆலோசியுங்கள். புதிய உத்திகள் கிடைக்கும்

தனித்துவமான பிராண்டுகள்

தனித்துவமான பிராண்டுகள்

உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தனித்துவமான பொருட்களை வழங்க வேண்டும். அதில் குறைபாடுகள் இருப்பதாகப் புகார் எழுந்தால் அதனைச் சுமூகமான வழியில் தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் ஆன் லைன் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு இது பெரும் உதவியாக அமையும்

சந்தையின் நம்பகத்தன்மை

சந்தையின் நம்பகத்தன்மை

பிராண்டின் மீது நம்பகத்தன்மையை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் சந்தையில் உங்கள் தயாரிப்புகளுக்கு நற்பெயர் கிடைக்கும். வணிக நடவடிக்கைகளை நேர்த்தி செய்வதற்கு இது உதவி செய்யும். லாபத்துடன் கூடிய பரஸ்பர அணுகுமுறை வாடிக்கையாளர்களை நீண்ட நாட்களுக்குத் தக்க வைக்கச் செய்யும்

 கவன ஈர்ப்பு

கவன ஈர்ப்பு

வாடிக்கையாளர்களுடனான தொடர்பை நாளுக்கு நாள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இது பின்னாளில் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். நீங்கள் விரும்பியதற்கு இணையாகத் தயாரிப்புகள் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். பிராண்டுகளின் தனித்தன்மையை மேம்படுத்தக் கருத்துக்களையும் கேளுங்கள். வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறும் கடைகள் வேகமாக வளர்ச்சியடையும்

சமூக வலைத்தள உதவி

சமூக வலைத்தள உதவி

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கான சிறப்பான தளங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நேரமும் அதனை புதுப்பித்துக் கொண்டே இருங்கள்.

 சந்தேகத்துக்குத் தீர்வு

சந்தேகத்துக்குத் தீர்வு

ஒரு புதிய வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்கு முன்பு அதன் தரம் குறித்துச் சோதிக்க விரும்புவார். ஆகையால் தயாரிப்புகளின் தரம் மற்றும் சான்றுகளை பெறுவதற்கு வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்துங்கள். பல நிறுவனங்கள் அளிக்கும் மதிப்புரைகள் மீது அவர்களுக்கு எப்போதுமே ஐயப்பாடுகள் உண்டு

வாடிக்கையாளர்களின் குரலாக மாறுங்கள்

வாடிக்கையாளர்களின் குரலாக மாறுங்கள்

உங்கள் தயாரிப்புகளில் உள்ள பிரச்சினைகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு காண வேண்டும்.தொழில் வளர்ச்சி மற்றும் பிராண்டுகளின் சிறப்பு குறித்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். ஏனென்றால் இன்றைய போட்டியில் சிறிய கிசுகிசுக்கள் கூட உங்களைச் சந்தையிலிருந்து விலக்கி வைத்து விடும். உங்களது வலைத்தளம் வாடிக்கையாளர்களின் குரலை எதிரொலிப்பதாக இருக்கட்டும்

பணிநியமங்களுக்கு தயங்காதீர்கள்

பணிநியமங்களுக்கு தயங்காதீர்கள்

ஒரு நிறுவனத்தை தொடங்கிவிட்டால் ஊழியர்களை நியமிப்பதற்குப் பயப்படக்கூடாது,. நம்பகமான ஊழியர்கள், உதவியாளர்கள், விற்பனையாளர்கள் நியமனம் செய்து கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் மதிப்பு வாய்ந்த பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்துகிறார்கள்.

ஆர்வம் வெற்றி பெறும்

ஆர்வம் வெற்றி பெறும்

ஒரு குறிப்பிட்ட முயற்சிக்குப் பிறகு தொழிலில் பற்றில்லாத தன்மை உங்களை ஒட்டிக்கொள்ளலாம். அதற்கு இடம் கொடுக்காமல் உங்கள் தயாரிப்புகளின் மீது தணியாத ஆர்வத்தைச் செலுத்துங்கள். தோல்விகளும் பின்னடைவுகளும் உங்களை அண்டாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+