எஸ்பிஐ வங்கியின் நடப்பு கணக்கு எப்படிச் செயல்படுகிறது? குறைந்தபட்ச இருப்பு தொகை எவ்வளவு மற்றும் பல!

எஸ்பிஐ என்று பலராலும் அரியப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி நிறுவனங்கள், வணிகர்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு நடப்பு வங்கி கணக்கு (current bank account) என்பதைத் திறக்க அனுமதி அளிக்கிறது. எஸ்பிஐ வங்கியின் நடப்புக் கணக்கினை திறப்பவர்கள் வரம்பற்ற முறையில் வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவற்றில் சில கட்டுப்பாடுகளும் உள்ளது.

நடப்புக் கணக்குகள் தினசரி பரிவர்த்தனைகளை நிர்வகிக்கச் சரியானதாக இருக்கும். சாதாரண நடப்பு கணக்கு சிறு வணிகர்கள், டிரேடர்கள் போன்றவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும். எனவே எஸ்பிஐ நடப்பு கணக்கு அளிக்கும் நன்மைகளை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

யாரெல்லாம் எஸ்பிஐ நடப்புக் கணக்கினை திறக்கலாம்?

யாரெல்லாம் எஸ்பிஐ நடப்புக் கணக்கினை திறக்கலாம்?

வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு துவங்கத் தேவைப்படும் ஆவணங்கள் இருப்பின் எந்தத் தனிநபரும் எஸ்பிஐ வங்கியின் நடப்புக் கணக்கினை இதறக்கெல்லாம் என்று sbi.co.in இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரம் தனிநபராகவும், கூட்டாகவும், நடப்பு கணக்குகளைத் திறக்க முடியும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

பொதுவாகச் சேமிப்புக் கணக்குகளுக்கு எஸ்பிஐ வங்கி ஆண்டுக்கு 3.5 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கும் நிலையில் நடப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதம் ஏதும் அளிப்பதில்லை.

குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவும்?

குறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவும்?

எஸ்பிஐ வங்கியின் மாநகரக் கிளைகளில் நடப்புக் கணக்கினை திறக்கும் போது 10,000 ரூபாயும், கிராமம் அல்லா சிறு நகரங்களில் 5,000 ரூபாயும், கிராமப்புற கிளைகளில் 2,500 ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும்.

அதிகபட்ச வரம்பு

அதிகபட்ச வரம்பு

எஸ்பிஐ வங்கியில் நடப்பு கணக்கு நிர்வகிப்பவர்களுக்கு அதிகபட்சம் இவ்வளவு தொகை தான் கணக்கில் வைக்க வேண்டும் என்ற எந்த வரம்பும் இல்லை. அதே நேரம் நாள் ஒன்றுக்கு 25,000 ரூபாய் வரையில் மட்டுமே ரொக்க பணத்தினை இலவசமாக டெபாசிட் செய்ய முடியும். கூடுதல் தொகையினை டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

கிளைகள்

கிளைகள்

எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் உள்ள 24,000+ வங்கி கிளைகளும் நடப்புக் கணக்கில் பணம், செக் போன்றவற்றைச் செலுத்தலாம், பணத்தினை எடுக்கவும் செய்யலாம்.

நாமினி

நாமினி

சேமிப்புக் கணக்குகளுக்கு எப்படி நாமினிகள் நியமிக்க முடியுமோ அதே போன்று நடப்பு கணக்குகளுக்கும் நாமினிகளை நியமிக்கலாம்.

செக்

செக்

எஸ்பிஐ நடப்புக் கணக்கை துவங்கும் போது அளிக்கப்படும் முதல் 50 செக் இதழ் புத்தகம் மட்டும் இலவசம். பின்னர் வாங்கப்படும் ஒவ்வொரு செக் பிக்கிற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

வங்கி அறிக்கைகள்

வங்கி அறிக்கைகள்

நடப்பு கணக்குகளின் வங்கி அறிக்கைகளை மாதம்/காலாண்டு, அரையாண்டு/ஆண்டு வாரியாகப் பெற முடியும்.

காப்பீடு

காப்பீடு

எஸ்பிஐ நடப்பு கணக்கின் உரிமையாளர்க்குத் தனிநபர் விபத்து காப்பீடும் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+