கோடீஸ்வரர் ஆவதற்கான அறிகுறிகள் இவை தான் தெரியுமா?

கோடீஸ்வரர்கள் அறுவடை செய்யும் பணப் பழக்கவழக்கங்களும், தனித்திறன்களும் மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உயர்வானவை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்து, ஏற்கனவே சரியான பொருளாதாரப் பாதையில் பயணித்தால், ஒரு நாள் நீங்களும் பணக்காரராக முடியும்.

கடற்கரைக்கு அருகில் சொந்தமாக வீடு அல்லது அற்புதமான இடத்திற்கு ஓர் பயணம் என ஒவ்வொருவருக்கும் விதவிதமான கனவு இருந்தாலும், நம் அனைவருக்கும் பொதுவான கனவு பணக்காரராக வேண்டும் என்பது தான். இது சிலருக்குச் சாத்தியமற்றதாக இருந்தாலும், சரியான பணப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றிவரும் பலருக்கும் இது தான் பணக்காரர் ஆவதற்கான நிரூபிக்கப்பட்ட வழிமுறையாகும். செல்வச்செழிப்புடன் இருப்பது என்பது எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதை மட்டும் பொறுத்ததல்ல, அந்தப் பணத்தை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதையும் பொறுத்தது. சில பணம் செலவாளிக்கும் பழக்கங்களை மாற்றுதல் மற்றும் குறிப்பிட்ட பொருளாதாரத் தவறுகளைத் தவிர்த்தல் போன்றவை உங்களைச் செல்வச்செழிப்பிற்கான சரியான பாதையில் பயணிக்க வைக்கும்.

என்றேனும் ஒரு நாள் நீங்கள் பணக்காரர் ஆவீர்கள் என்பதற்கான 5 அறிகுறிகள் இதோ.

1. உடனடி மனநிறைவைத் தவிர்த்தல்

1. உடனடி மனநிறைவைத் தவிர்த்தல்

"எனக்கு இப்போதே வேண்டும்"என்ற ஆசை தூண்டுதலை உங்களால் எதிர்க்க முடிந்தால், பணச் சம்பாதித்தலில் உள்ள முதல் தடையை வெற்றிகரமாகக் கடந்துவிடலாம். உடனடி மனநிறைவு என்பது குறுகிய காலத்திற்கு விலைமதிப்பில்லாததாகத் தெரிந்தாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை எனில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சோதனையான காலத்தில் உதவும் அல்லது நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும்.

2. விருப்பமானவற்றை அயராது செய்தல்

2. விருப்பமானவற்றை அயராது செய்தல்

உங்கள் பணியில் சிறந்தவராக மாறப் போதுமான அளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள் எனில், உங்களின் வருமானம் ஈட்டும் திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். விருப்பமானவற்றை அயராது இடைவிடாமல் செய்வதன் மூலம்,சந்தேகங்கள், போராட்டங்கள் மற்றும் சாத்தியமான நிராகரிப்பு மற்றும் வெறுப்பு ஆகியவை ஏதுமின்றிச் சிறப்பான பலன்களைப் பெறமுடியும். நீங்கள் செய்வதைச் சிறப்பாகச் செய்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.

3.குறைந்த பட்ஜெட்டில் சமநிலையான வாழ்க்கை

3.குறைந்த பட்ஜெட்டில் சமநிலையான வாழ்க்கை

பணத்தைச் செலவழிக்கும் போது சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பீர்களா? உங்கள் தேவைகளைத் தேவைக்கு முன்பே முன் வைக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தைத் தேவைக்கும் விருப்பித்திற்கும் இடையில் வைப்பது அவரவர் முடிவே. உண்மையில் பணக்காரர்கள் தங்களைப் பணத்தை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். எளிய உடைகளை உடுத்தும் மார்க் சக்கர்பெர்க் முதல் நடுத்தரமான வீட்டில் வசிக்கும் வாரன் பப்பெட் வரை, சில செல்வச்செழிப்பானவர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்கின்றனர். செலவழிக்கும் முறை என்பது, நமது நிதிநிலை மற்றும் சொத்துக்கள் மீது குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேவையில்லா செலவுகளைத் தவிர்தல், தினமும் வெளியில் உணவருந்துவதைக் குறைத்தல், சாதாரண வீட்டில் வசிப்பது போன்றவை அதிகம் பணம் சேமிக்க வழிவகுக்கும்.

4. நிதி திட்டமிடல்

4. நிதி திட்டமிடல்

பணத்தைச் சேமிக்கும் மற்றும் செலவழிக்கும் வழிகளை நிதி திட்டமிடல் கூறுமா? உங்களின் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யும் சரியான திட்டத்தின் மூலம் தான் பணக்காரர் ஆவதற்கான பாதை துவங்குகிறது. நல்ல பொருளாதாரத் திட்டத்திற்கான முதல் அடி சிறந்த நிதி திட்டமிடல் தான். ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல் மற்றும் உங்களின் தேவைகள் மீதான செலவுகளை மாதாமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்ய வைத்து அதிகமாகச் சேமிக்க வழிவகுக்கும். உங்களின் வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய தெளிவான பார்வை உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், நிதி திட்டமிடலில் வராத தேவையில்லா செலவுகளைக் குறைப்பது எளிதாக இருக்கும்.

 5. வாய்ப்புள்ளவற்றில் முதலீடு

5. வாய்ப்புள்ளவற்றில் முதலீடு

பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறன் அல்லது அதிர்ஷ்டம் அல்லது உரிமை வழங்குதல் போன்றவற்றைப் பொறுத்ததல்ல. ஆனால் செல்வ செழிப்பு இல்லாமல் இருப்பவர்கள் ஏன் பெரும்பாலும் முதலீட்டாளர்களாக இல்லாமல் இருக்கிறீர்கள் என்பது தான் கேள்வி. முதலீடு செய்வதற்கு அதிகளவு பணம் தேவைப்படும் என்றே நாம் நினைப்போம். ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக, சிறுதுளிகள் ஒன்று சேர்ந்தால் தான் கடல் உருவாகும் என்பது போல, முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தில்(Systematic Investment Plans -SIPS) முதலீடு செய்யும் சிறிய அளவிலான பணம் மற்றும் சரியான சொத்து முதலீடு போன்றவை விரைவில் உங்களைக் கோடீஸ்வரராக மாற்றும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+