மியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி?

By Sornamani Ramamoorthy
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நிதி முதலீடுகள் செய்யும்போது வரும் லாப நட்டங்கள் தனிமனிதனின் பொருளாதாரத் தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்துவதால் பொதுவாகப் பதட்டங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. பரஸ்பர நிதி என்கிற மியூட்சுவல் பண்ட் திட்டங்கள் பல்வேறு பரிணாமங்களில் கிடைப்பதால் அதனை லாகவமாகத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்கள் கூட முந்தைய தவறுகளில் இருந்து தான் பாடம் கற்றுக்கொள்கிறார்கள்.ஏனென்றால் ஒன்றையொன்று ஒப்பிடுவதில் ஏற்படும் தடுமாற்றங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதில் அன்னம்போல் பிரித்தெடுக்கச் சில அளவுகோல்கள் உள்ளன .

திறனை மதிப்பிடுதல்

திறனை மதிப்பிடுதல்

மியூட்சுவல் பண்டில் பண்ட் மேனேஜரின் பின்புலம் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும். பண்ட் மேனேஜரின் கடந்த காலச் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டும். நிர்வகித்த பண்ட்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுள்ளதாக என்பதையும், பெஞ்ச் மார்க் என்கிற நிலக்குறியை அடைந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.எத்தனை விதமான முதலீட்டுத் திட்டங்களைக் கையாண்டுள்ளார் என்பதை அறிந்து கொள்ளவும்.

 

 

முதலீட்டு நோக்கங்களை அறிதல்

முதலீட்டு நோக்கங்களை அறிதல்

மியூட்சுவல் பண்ட்டில் ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு தனித்துவமான அடையாளங்கள் உண்டு. குரோத், விலை உள்ளிட்டவை குறித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். மதிப்பு முதலீடு(Value Investing), வளர்ச்சி உபாயம் (Groeth strategy) மற்றும் கலப்பு உபாயம் (Blended Strategy)உள்ளிட்ட தந்திரங்கள் முதலீட்டுத் திட்டங்களில் உள்ளன.

சரியான வருவாய் ஒப்பீடு
 

சரியான வருவாய் ஒப்பீடு

குறிப்பாகத் தேர்வு செய்யப்படும் மியூட்சுவல் பண்ட் கடந்த காலத்தில் வருவாயை ஈட்டுவதில் சரியாகச் செயல்பட்டுள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதேநேரம் கடந்த காலத்தில் வெற்றிகரமாகச் செயல்படாத ஒரு பண்ட், எதிர்காலத்திலும் அதேபோல் நீடிக்கும் என்ற முடிவுக்கு வரக்கூடாது. ஆகையால் மியூட்சுவல் பண்டில் ஒரே அளவுகோலை பயன்படுத்தக்கூடாது.

ஆபத்துகளை அறிதல்

ஆபத்துகளை அறிதல்

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மியூட்சுவல் பண்ட் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருவாயில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஸ்டாண்டர்டு டிவியேஷன் எனப்படுகிறது. சந்தையின் ஏற்ற இறக்க அபாயங்களில் பாசிட்டாவான பலனை பெறுவது சார்பே விகிதம் ஆகிறது. சந்தையின் நிலக்குறியை விட அதிகமான லாபத்தைத் தரும் திட்டமாக ஆல்பா விகிதம் இருக்கிறது. சந்தையின் ஏற்ற இறக்க புள்ளிகளோடு ஒத்திசைவாக இருப்பது பீட்டா விகிதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

தரவரிசைகளை ஆராய்தல்

தரவரிசைகளை ஆராய்தல்

பல்வேறு முகமைகள் வழங்கும் தரவரிசைகளைச் சரியான அளவுகோலுடன் ஆராய்ந்து ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். கொடுக்கப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் தரவரிசைகளை ஆய்ந்து ஒன்றில முதலீடு செய்யலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Things to check while comparing mutual funds

Things to check while comparing mutual funds
Story first published: Tuesday, September 25, 2018, 8:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X