ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎப்) கணக்கின் பெயரும், ஆதார் கார்டில் உள்ள பெயரும், பான் கார்டில் உள்ள பெயரும் ஒத்துப்போகவில்லை என்றால் பிஎ பணத்தினைத் தேவைப்படும் போது எளிதாகத் திருப்பி எடுக்க முடியாது. எனவே ஆதார் மற்றும் பான் கார்டுகள் சரியாக இருந்து பிஎப் கணக்கில் உள்ள பெயரில் வித்தியாசம் இருப்பின் அதனை ஆனலைன் மூலம் எளிதாக மாற்ற முடியும்.
இப்படிச் செய்ய வேண்டும் என்றால் ஆதார் மற்றும் யூஏஎண் உள்ளிட்டவை கட்டாயம் ஆகும். சரி, ஆன்லைனில் ஈபிஎப் கணக்கின் பெயரினை திருத்தும் செய்வது எப்படி என்று இங்குப் பார்ப்போம்.
படி 1:
ஈபிஎப்ஓ-ன் unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இனைப்பிற்கு உங்கள் உலாவில் செல்ல வேண்டும். உங்கள் யூஏஎண்-ஐ பதிவு செய்து ஆக்டிவேட் செய்யவில்லை என்றால் ‘Activate UAN'என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 2:
யூஏஎண்-ஐ ஆக்டிவேட் செய்த பிறகு இந்தத் தளத்திற்குள் உள்நுழைந்து ‘Manage > Modify Basic Details' என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
இந்தப் படியினைச் செய்யும் முன்பு உங்கள் ஆதார் எண்ணை kyc-ல் சென்று பதிவு செய்ய வேண்டும். ஆதார் கார்டுடன் மொபைல் எண் இணைக்கப்படாமல் இருந்தால் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் சென்று மொபைல் எண்ணை சேர்ப்பது கட்டாயம் ஆகும்.
படி 3:
திருத்தம் செய்வதற்கான பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டுக் கூடுதலாகப் பெயர், பாலினம், பிறந்த தேதி போன்றவற்றை அதாரில் உள்ளது போன்று உள்ளிட வேண்டும். இவற்றை அளித்த பிறகு ‘விவரங்களைப் புதுப்பிக்கவும்'(update) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
படி 4:
பின்னர் ‘நிலுவையில் உள்ள கோரிக்கைகள்'(pending requests) என்ற தெரிவுக்குச் செல்லும் போது நீங்கள் பணிபுரியும் நிறுவனம் அதனைப் புதுப்பிக்க அனுமதி அளிக்க வேண்டும் அவர்கள் அனுமதி அளித்த பிறகு ஈபிஎப் கணக்கை நிர்வகிக்கும் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அவர்கள் இந்த விவரங்களைச் சரிபார்த்து பெயர் திருத்தத்திற்கான அனுமதியை அளிப்பார்கள்.
குறிப்பு:
ஆன்லைனில் ஈபிஎப் கணக்குப் பெயரினை திருத்தம் செய்யும் முன்பு ஆதார் விவரங்களைத் திருத்த வேண்டும். பின்னர் ஆதார் கார்டில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச்சொல் அனுப்பப்படும் என்பதால் சரியான மொபைல் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
ஆப்லைனில் திருத்தம் செய்ய முடியுமா?
ஆப்லைனில் ஈபிஎப் கணக்கின் பெயரினை திருத்தம் செய்ய வேண்டும் என்றால் யூஏஎண் உதவி மையம் அல்லது நிறுவனத்தின் மனித வள அதிகாரியினை அணுகுவது நல்லது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications