பொதுவாக இணையதள வங்கி சேவைகளில் ஒரு வங்கி கணக்கில் இருந்து பிற வங்கி கணக்குகளுக்குப் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் பயனாளியின் (beneficiary) கணக்கு விவரங்களைச் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.
இதை உடைத்தெரியும் படி எஸ்பிஐ வங்கி 'குவிக் டிரான்ஸ்பர்' என்ற சேவை மூலம் beneficiary கணக்கு விவரங்களைச் சேர்க்காமல் 25,000 ரூபாய் வரை பணம் அனுப்பும் முறையினைச் சில மாதங்களுக்கு முன்பே அறிமுகம் செய்துள்ளது.
பரிவர்த்தனை வரம்பு
எஸ்பிஐ வங்கியில் beneficiary சேர்க்காமல் ‘குவிக் டிரான்ஸ்பர்' சேவை மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 25,000 ரூபாய் வரை பணத்தினை அனுப்பலாம். ஆனால் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சம் 10,000 ரூபாய் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும்.
எஸ்பிஐ ‘குவிக் டிரான்ஸ்பர்’ மூலம் பணம் பரிமாற்றம் செய்வது எப்படி?
1. அன்லைன் எஸ்பிஐ கணக்கில் உள்நுழைய வேண்டும்.
2. பரிவர்த்தனை / டிரான்ஸ்ஃபர் என்ற டேபிற்குச் செல்லவும்
3. ‘குவிக் டிரான்ஸ்பர்' என்ற இனைப்பினை கிளிக் செய்ய வேண்டும்.
4. பின்னர்ப் பணம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களது கணக்கு விவரங்கள், ஐஎப்எஸ்சி உளீட்ட விவரங்கள், செலுத்த வேண்டிய தொகை உள்ளிட்டவற்றை அளித்துச் சமர்ப்பித்துப் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓரு முறை கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம் எளிதாகப் பணத்தினை டிரான்ஸ்ஃபர் செய்ய முடியும்.
இந்தப் புதிய ‘குவிக் டிரான்ஸ்பர்' முறையினால் அனைவரின் வங்கி கணக்கு விவரங்களை இணையதள வங்கி சேவையில் சேர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிற வங்கிகள்
எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கி நிறுவனங்களில் இப்படி beneficiary சேர்க்காமல் பணம் அனுப்ப முடியாது. ஆனால் beneficiary சேர்த்த 30 நிமிடத்தில் ஐஎம்பிஎஸ் சேவை மூலம் உடனே பிற வங்கி கணக்குகளுக்கு நொடியில் பணத்தினை அனுப்ப முடியும்.
ஐஎம்பிஎஸ்
ஐஎம்பிஎஸ் சேவை மூலம் இணையதள வங்கி சேவை beneficiary வங்கி கணக்கினை சேர்த்து இருக்கும் போது 24 மணி நேரம், வங்கி விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் நொடியில் பணப் பரிமாற்றத்தினைச் செய்ய முடியும்
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications