எஸ்பிஐ வங்கி 18 வயதிற்கு உட்பட்டவர்களும் சேமிப்பு கணக்குத் தொடங்கித் தனி மனித நிதியம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகப் பெஹ்லா கதாம் மற்றும் பெஹ்லி உதான் ஆகிய இரண்டு திட்டங்களை வழங்கி வருகிறது.
எஸ்பிஐ வங்கியின் பெஹ்லா கதாம் திட்டத்தின் கீழ் 18 வயதிற்குக் கீழ் உள்ள அனைவரும் தனிநபராகச் சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும். இதுவே பெஹ்லி உதான் திட்டம் கீழ் 10 வயது நிரம்பியவர்கள் மட்டுமே சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும்.
குறைந்தபட்ச இருப்புத் தொகை
எஸ்பிஐ வங்கியின் இந்த இரண்டு சேமிப்புத் திட்டங்கள் கீழ் முதலீடு செய்யும் சிறுவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதாவது ஒரு ரூபாய் கூட வங்கி கணக்கில் வைக்காமல் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.
தகுதி
பெஹ்லா கதாம்: 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இந்தத் திட்டம் கீழ் சேமிப்பு கணக்குத் தொடங்கலாம் என்றாலும் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்கள் உடன் இணைந்து ஜாயிண்ட் கணக்காக மட்டுமே தொடங்க முடியும்.
பெஹ்லி உதான்: இந்தத் திட்டம் கீழ் 10 வயது நிரம்பிய சிறுவர்களால் தங்களது பெயரினிலேயே எஸ்பிஐ சேமிப்புக் கணக்கினை தொடங்க முடியும்.
செயல்படும் விதம்
பெஹ்லா கதாம்: இந்தத் திட்டம் கீழ் எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது சிறுவர்கள் பெற்றோர் அல்லது காப்பாளருடன் இணைந்தும் கணக்கை நிர்வகிக்கலாம். அல்லது பெற்றோர்களால் சிறுவர்களின் அனுமதி இல்லாமல் கணக்கினை நிர்வகிக்க முடியும்.
பெஹ்லி உதான்: 18 வயது நிரம்பாதவர்களே தங்களது சேமிப்புக் கணக்கினை நிர்வகிக்கலாம்.
ஏடிஎம் - டெபிட் கார்டு
பெஹ்லா கதாம்: சிறுவரின் புகைப்படம் பொதியப்பட்ட ஏடிஎம் - டெபிட் கார்டு பெற்றுப் பணம் எடுக்க முடியும். இதுவே ஷாப்பிங் செய்த பிறகு பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் 5,000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.
பெஹ்லி உதான்: இதிலும் புகைப்படம் பொறிக்கப்பட்டு இருக்கும். ஏடிஎம் - டெபிட் கார்டு பெற்றுப் பணம் எடுக்க முடியும். இதுவே ஷாப்பிங் செய்த பிறகு பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்த வேண்டும் என்றால் 5,000 ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.
இணையதள வங்கி சேவை
இரண்டு வகையான கணக்குகளிலும் இணையதள வங்கி சேவை பயன்படுத்தும் போது 5,000 ரூபாய் தினசரி பரிவர்த்தனை செய்ய முடியும். பில்கள் செலுத்துதல் போன்றவையும் செய்ய முடியும். ஆனால் வங்கி கணக்குகள் இடையில் என்ஈஎப்டி பரிவர்த்தனை மட்டுமே செய்ய முடியும்.
செக் புக்
பெஹ்லா கதாம்: இந்தச் சேமிப்பு கணக்கு தொடங்கும் பொதுப் பாதுகாவலர் கீழ் உள்ள சிறியவர் என்ற பெயரில் செக்குகள் வழங்கப்படும்.(10 செக் தாள்கள்)
பெஹ்லி உதான்: சிறுவரால் தனது கையெழுத்தினை மாற்றம் ஏதுமில்லாமல் ஒரே மாதிரியாகப் போட முடியும் என்றால் 10 தாள் கொண்ட செக் புத்தகம் விநியோகிக்கப்படும்.
வட்டி விகிதம்
சாதரன சேமிப்புக் கணக்குகளுக்கு அளிக்கப்படும் அதே வட்டி விகிதம் இந்த இரண்டு கணக்குகளும் வழங்கப்படும். நாமினேஷ்ன் வசதியும் உண்டு. டிமாட் டிராப்ட்டும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications