தங்கநகை கடன் வாங்க போறிங்களா? இந்த விஷியத்தை எல்லாம் மறக்காமல் கவனத்தில் கொள்ளுங்கள்.!

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனிநபர் கடன் மற்றும் வீடு கடன் போல இல்லாமல் தங்கநகை கடன் மிகவும் பாதுகாப்பான கடன் முறையாகப் பார்க்கப்படுகிறது ஏன் என்றால் கடன் தருபவர்களுக்கு, கடன் பெறுபவர்களுக்கு காசின் உத்திரவாதம் உண்டு. கடன் தருபவர்கள் நம்பிக்கையின் உடன் இருக்கலாம் என் என்றால் கடன் பெற்றவரின் நகை இவர் கையில். எனவே எளிதில் தங்களிடம் உள்ள நகை, தங்க நாணயங்கள் அல்லது தங்க கட்டிகளை வங்கியில் கொடுத்து கடன் பெறலாம். பெற்ற கடன் தொகையைத் திருப்பி கொடுத்தவுடன் வங்கி நகையைத் திருப்பி தந்து விடும்.

 

செயல்முறை மிகவும் எளிது

செயல்முறை மிகவும் எளிது

தங்கநகை கடனில் உள்ள மிகப் பெரிய நன்மை, கடன் வாங்குவதற்கான செயல்முறை மிகவும் எளிது மற்றும் இந்த கடன் குறைந்த காலத்திற்காக வைக்கப்படுகிற கடன் ஆகும்.

தங்கநகை கடன் பெற ஒருவர் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் மற்றும் அவர் இடம் தங்கம் சொந்தமாக இருக்க வேண்டும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

தங்கநகை கடன் எளிமையாகக் கிடைக்கிறது என் என்றால் இதற்கான வட்டி விகிதம் இதற்கு இணையான லோங்களை விட மிகக் குறைவு. அது போக கடனின் கால அளவு மிக நெகிழ்வு, இது சில நாட்களில் இருந்து 5 வருடம் வரை வைத்துக்கொள்ளலாம். இந்தக் கடனிற்கு எந்த ஒரு வங்கி பீஸும் கிடையாது. இதற்கு மிகக் குறைந்த அளவிலான டாக்குமெண்ட்கள் தான் தேவை படும்.

என்ன தான் தங்கநகை கடன் மக்களின் மத்தியில் மத்த லோங்களை விட மிகக் கவர்ச்சியாக இருந்தாலும், தங்கநகை கடன் வாங்கும் முன் நீங்கள் சில விஷயங்களைக் குருந்து கவனிக்க வேண்டும்.

#1
 

#1

ஆர்பிஐ-இன் உத்தரவுப் படி அடகு வைத்த தங்கத்தின் மதிப்பில் அதிகபட்சமாக 75% மட்டுமே கடனாக வழங்கப்படும். இந்த % ஓவுவொரு நிதி நிறுவனங்களைப் பொறுத்து மாறலாம்.

#2

#2

பெரும்பாலும் கடன் தருபவர்கள் தங்கநகை கடனிற்கு அதிக செயல்முறை கட்டணம் வசூலிக்க மாட்டார்கள். இந்தச் செயல்முறை கட்டணம் பல நிறுவனங்களில் கடன் தொகைக்கு 1% கீழ் தான் இருக்கும். நீங்கள் கடன் வாங்கும் இடத்தில் இதை விட அதிக கட்டணம் வசூலித்தல் நீங்கள் வேறு நிறுவனங்களை நாடலாம்.

#3

#3

மற்ற பாதுகாப்பு இல்லாத மற்றும் பல வகை பாதுகாப்புள்ள கடன்களை விட தங்கநகை கடன்கள் எளிதில் கிடைக்கும். நீங்கள் கடன் பெரும் நிறுவனத்தைப் பொறுத்து அதற்கு உண்டான வட்டியை ஒரு மாதம் அல்லது மூன்று மாத்திற்கு ஒரு முறையோ செலுத்தி கொள்ளலாம். இறுதியில் கடனின் கால அளவு முடிவுக்கு வரும்போது அசலைத் திருப்பிச்செலுத்த வேண்டும். கடன் அப்ளை செய்த உடன் மிக விரைவில் உங்களுக்கு பணம் கிடைக்கும்.

#4

#4

தங்கத்தின் மூலம் கடன் வாங்குவதற்கு முன்னாள் ஒன்றுக்கு பத்து இடத்தில் விசாரியுங்கள். நீங்கள் அடகு வைக்கப் போகும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் தங்கத்தின் தரத்தை உங்கள் வசம் தெரிந்துவைத்து கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gold loan கடன் banks
English summary

Are you planning to avail gold loan? Remember these points or else you will be trapped

Are you planning to avail gold loan? Remember these points or else you will be trapped
Story first published: Friday, November 9, 2018, 17:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X