சுந்தரம் பி.என்.பி. பாரிபாஸ் நிலை வைப்புகளுக்கு 8.75 % வட்டி வழங்குகிறது.!

By Abu Bakker Fakkirmohamed
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையை மையமாகக் கொண்டு செயல்படும் சுந்தரம் பி.என்.பி். பாரிபாஸ் நிதி நிறுவனம் காலமுறை நிலை வைப்பு (term deposits) நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. சுந்தரம் நிதி நிறுவனம் மற்றும் பி.என்.பி. பாரிபாஸ் பர்சனல் பைனான்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து செயல்படுகின்றன. இந்நிறுவனம் மூத்த குடிமக்களின் 12 முதல் 18 மாதங்களுக்கான நிலை வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 8 சதவிகிதத்தில் இருந்து 8.25 சதவிகிதமாக உயர்த்துவதாக கடந்த மாதம் அறிவித்துள்ளது.

 

வட்டி

வட்டி

24 முதல் 36 மாதங்கள் வரையிலான நிலை வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 8.50 சதவிகிதமாக உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளது.

தனிநபர்களுக்கு, 12 முதல் 18 மாதங்களுக்கான நிலை வைப்புகளுக்கு 7.75 % வட்டி விகிதமும், 48 முதல் 60 மாதங்களுக்கான நிலை வைப்புகளுக்கு 8 % வட்டியும் வழங்குவதாக அறிவித்துள்ளது.

சுந்தரம் ஹவுசிங் பைனான்ஸ்

சுந்தரம் ஹவுசிங் பைனான்ஸ்

சுந்தரம் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தற்போது 17,000 வாடிக்கையாளர்களிடம் இருந்து 1,000 கோடி ரூபாய் வைப்பு நிதியைத் திரட்டி வைத்துள்ளது. இதனை இந்த நிதியாண்டில் 3,500 கோடி ரூபாயாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. தென்னிந்தியா முழுவதும் தங்களுடைய தீவிர கவனத்தைச் செலுத்தி தங்களுடைய நிதி வணிகத்தை விரிவாக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. " காலமுறைக் கடன்கள், தேசிய வங்கிகளில் பெற்ற வீட்டுக் கடன்களுக்கான மறு கடன் வசதி (refinance), நிலை வைப்புகள், வணிகக் கடன்கள் ஆகியவற்றின் மூலமாக தங்களுடைய வளர்ச்சியை விரிவுபடுத்த இந்நிறுவனம் விரும்புகிறது. நாடு முழுவதும் இந்நிறுவனத்திற்கு 110 கிளைகளும் 50,000 வாடிக்கையாளர்களும் உள்ளனர்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை
 

கவனத்தில் கொள்ள வேண்டியவை

2048, ஜீலை 6 ஆம் நாளைய கணக்குப்படி, சுந்தரம் பி.என்.பி. பாரிபாஸ் நிலை வைப்புகளுக்கு ICRA நிறுவனம் MAA+ (Positive) என்னும் தரநிலையை வழங்கியுள்ளது. இது அதிகப்பட்ச தர நிலைக்கு ஒரு படி கீழானதாகும். இந்தத் தர நிலையைப் பெற்ற நிலை வைப்புகள் குறைவான சந்தை அபாயங்களைக் கொண்டதாகும் (low risk). இருந்தாலும் நிலை வைப்புகளில் முதலீடு செய்வதில் உள்ள அபாயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sundaram bnp paribas interest
English summary

Sundaram BNP Paribas Offers FD Interest Rates As High As 8.75%

Sundaram BNP Paribas Offers FD Interest Rates As High As 8.75%
Story first published: Saturday, November 24, 2018, 13:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X