பட்ஜெட் என்றாலே வருமானம், செலவுகள் மட்டுமே என்பதைத் தாண்டி சில நுணுக்கமான விஷயங்களும் இருக்கின்றன இவைகளையும் த்ரிந்து கொள்ளுங்களேன்.
இடைக்கால பட்ஜெட் என்றால் என்ன?
ஒரு அரசு தன்னுடைய ஆட்சிக் காலம் முடியும் போது (அடுத்த மக்களைவைட் தேர்தலுக்கு முன்) போடும் பட்ஜெட் தான் இடைக்கால பட்ஜெட். இதைத் தான் ஆங்கிலத்தில் Interim budget என்கிறார்கள்.
சாதாரண ஆண்டு பட்ஜெட்களுக்கும், இடைக்கால பட்ஜெட்களுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
1. ஆண்டு பட்ஜெட்களில் ஒரு முழு நிதி ஆண்டுக்கான செலவுகள் அரசு கருவூலத்தால் அனுமதிக்கப்படும். ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் ஒரு முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரைக்கான செலவுகள் மட்டுமே அரசுக் கருவூலத்தால் அனுமதிக்கப்படும்.
2. ஆண்டு பட்ஜெட்களில் வருமான வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிகள் சார்ந்த முடிவுகளை எடுக்க முடியும். ஆனால் இடைக்கால் அபட்ஜெட்டில் அது போன்ற வரி சார்ந்த விஷயங்களைக் கொண்டு வர முடியாது. காரணம் நிதிச் சட்டங்களை மாற்றம் செய்ய வேண்டும். அதை மக்களவையில் ஓட்டு போட்டு தான் அனுமதிக்க வேண்டும் அதனால் இதைச் செய்ய மாட்டார்கள்.
நிதிச் சட்டங்கள் என்றால் என்ன?
Article 110-ன் படி நிதிச் சட்டம் ஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பின்னும் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த சட்டங்களில் மாற்றம் கொண்டு வந்தால் தான் அடுத்த நிதி ஆண்டில் இருந்து அவைகளை நடைமுறைப்படுத்தப்படும். அதுவரை பழைய சட்டங்களே அமலில் இருக்கும்.
உதாரணம்: இனி வருமான வரி வரம்பு 3,00,000 ரூபாயாக் அதிகரித்துவிட்டார்கள் என்றால் இந்த நிதிச் சட்டத்தில் அந்த மாற்றத்தைக் குறிப்பிட்ட பின் தான் அது அமலுக்கு வரும். அதுவரை பட்ஜெட்டில் தாக்கல் செய்தது எல்லாமே அறிவிப்புகள் தான்.
பாபுலிஸ்ட் பட்ஜெட் என்றால் என்ன?
அட நம்மூர் அரசியல்வாதிகள் "இது ஒரு மக்கள் பட்ஜெட்" எனச் சொல்வார்களே அது தான் பாபுலிஸ்ட் பட்ஜெட். உண்மையைச் சொல்லப் போனால் பாபுலிஸ்ட் பட்ஜெட் என ஒரு வரையறையே கிடையாது. பொதுவாக ஒரு நாட்டின் பெருவாரியான மக்கள் எதிர் கொள்ளும் பிரச்னைக்கு தீர்வு சொல்லும் விதமாக இருக்கும் பட்ஜெட்டுகள் அனைத்தும் பாபுலிஸ்ட் பட்ஜெட் தான்.
ஃபிஸ்கல் டெஃபிசிட் என்றால் என்ன?
ஒரு நாடு ஒரு பெட்ஜெட் போடுகிறது. அந்த ப்ட்ஜெட்டில் இத்தனை கோடி ரூபாய் வருமானம் வரும், இவ்வளவு ரூபாய் இந்த இந்த திட்டங்களில் செலவு செய்ய இருக்கிறோம் எனச் சொல்வார்கள். அவ்வளவு தான் பட்ஜெட். இப்போது அரசுக்கு வந்த வருமானத்தை விட (அரசு வாங்கிய கடன் தொகையை இதில் சேர்க்கக் கூடாது), செலவுகள் அதிகமாக இருக்கிறது என்றால் நிதிப் பற்றக் குறை ஃபிஸ்கல் டெஃபிசிட் (Fiscal Deficit) என்று பெயர்.
மத்திய அரசுக்கு வரி தவிர வேறு எந்த வழிகளில் எல்லாம் வருமானம் வருகிறது?
பிசினஸ் உரிமங்களுக்கு வாங்கும் தொகை, மத்திய அரசு முதலீடு செய்திருக்கும் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் இருந்து வரும் முதலீட்டு வருமானம், அரசு நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் லாபப் பகிர்வுகள், கையில் இருக்கும் முதலீடுகள் மற்றும் சொத்துக்களை விற்பதால் கிடைக்கும் வருமானம், கடனை திருப்பி வசூலிப்பதில் கிடைக்கும் வருமானம், அபராதங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் என வரி தவிர இத்தனை வழிகளில் அரசுக்கு வருமானம் கிடைக்கின்
றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications