வருமான வரி விலக்கு.. இனிமேல் நீங்கள் எப்படி வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

டெல்லி: இடைக்கால பட்ஜெட்டில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

இதுவரை 2.5 லட்சம் ஆண்டு வருவாய் கொண்ட தனி நபருக்கு வருமான வரி விலக்கு வழங்கப்பட்டது. 2.5-5.0 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீதம், 5-10 லட்சம் ரூபாய் வரையிலான வருவாய்க்கு 20 சதவீதம், அதற்கு மேல் 30 சதவீதம் என வருமான வரி விதிக்கப்பட்டது.

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில், ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி கிடையாது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

எனவே புதிய வரி விதிப்பு முறை எப்படி இருக்கும் என்பதை இந்த பட்டியல்கள் உங்களுக்கு புலப்படுத்தும்.

* உதாரணத்திற்கு, ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.550,000 என்று வைத்துக்கொள்வோம். அதில் நிலையான கழிவு 50,000 போய்விடும்.

எனவே அவர் ஆண்டு வருவாய் ரூ.5 லட்சம் என்று கணக்கிடப்படும். அந்த நபர் ஒரு பைசா கூட வருமான வரியாக செலுத்த வேண்டியதில்லை.

ParticularsFY 2018-19 (in rupees)FY 2019-20 (in rupees)
Basic Salary + DA377,200377,200
Other Taxable Allowances172,800172,800
Gross Salary550,000550,000
Standard Deduction (deducted)40,00050,000
Total Income under the head 'salary' 510,000500,000
Income Tax14,50012,500
Rebate under section 87A (deducted)012,500
Total tax payable after Rebate 14,5000
Surcharge @10% / 15%00
Total tax payable after surcharge 14,5000
Education Cess @ 4%5800
Total tax, surcharge and education cess 15,0800

இப்போதுள்ள நடைமுறையை ஒப்பிட்டால், புதிய அறிவிப்பால், இந்த அளவுக்கு வருவாய் கொண்டவர்கள் ரூ.15 ஆயிரத்து 80 சேமிக்க முடியும். அதாவது வருமான வரியை மிச்சப்படுத்துவிடலாம்.

*இப்போது அடுத்த உதாரணம். ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சத்திற்கு இடையே இருப்பவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி வசூலிக்கப்படுகிறது.

ParticularsFY 2018-19 (in rupees)FY 2019-20 (in rupees)
Basic Salary + DA7,77,2007,77,200
Other Taxable Allowances2,22,8002,22,800
Gross Salary10,00,00010,00,000
Standard Deduction (deducted)40,00050,000
Total Income under the head 'salary' 9,60,0009,50,000
Income Tax1,04,5001,02,500
Rebate under section 87A (deducted)00
Total tax payable after Rebate 1,04,5001,02,500
Surcharge @10% / 15%00
Total tax payable after surcharge 1,04,5001,02,500
Education Cess @ 4%4,1804,100
Total tax, surcharge and education cess 1,08,6801,06,600

ஒருவரின் ஆண்டு வருமானம் 10,0000 ரூபாய் என வைத்துக்கொள்வோம். அவர் நிலையான கழிவு 50,000 போக எஞ்சிய 9.5 லட்சத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும். தற்போது நிலையான கழிவு 40,000 என்ற அளவில் கணக்கிடப்படுகிறது. பியூஷ் கோயல் அதை 50,000 என்று அதிகரித்துள்ளார். எனவே, தற்போது 10 லட்சம் வருவாய் ஈட்டும் ஒருவர் ரூ.108,680 வரை வருமான வரி மற்றும் கல்வி செஸ் என்ற வகையில் செலுத்தி வருகிறார்கள். புதிய நிலையான கழிவு அறிவிப்பால் அந்த வருவாய் பிரிவினர் இனிமேல் 1,02500 அளவுக்கு வருமான வரி செலுத்தினால் போதும். சேமிப்பு ரூ.2,080 ஆகும்.

* ரூ.10 லட்சம் முதல் 50 லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் கொண்ட பிரிவை இப்போது பார்க்கலாம். ஒருவரின் ஆண்டு வருவாய் 30 லட்சம் என வைத்துக்கொள்வோம். நிலையான கழிவு ரூ.50000 கழித்து போக எஞ்சிய தொகைக்கு அவர் 7 லட்சத்து 25 ஆயிரத்து 400 வருமான வரியாக செலுத்த வேண்டி வரும். முன்பு நிலையான கழிவு 40,000 என்பதால், புதிய அறிவிப்பால் இவர்களுக்கு 3,120 மிச்சமாகும்.

வருமான வரி விலக்கு.. இனிமேல் நீங்கள் எப்படி வரி செலுத்த வேண்டும் தெரியுமா?

இதை வைத்து பார்த்தால் 5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு இந்த பட்ஜெட் ஒரு வரப்பிரசாதம் என்பதையும், பிற வருவாய் பிரிவினருக்கு ஓரளவுக்கு மிச்சப்படுத்தும் பட்ஜெட் என்பதையும் அறியலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+