பணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் மின்னணு பணப் பரிமாற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்ப பேடிஎம், கூகிள், போன்பே ஆகிய நிறுவனங்கள் சமானியர்களும் பயன்படுத்தும் எளிய வகையான பணப் பரிமாற்ற தளத்தை உருவாக்கியுள்ளது. UPI மூலம் செய்யப்படும் பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்த BHIM செயலி வாயிலான பரிமாற்றங்கள் குறைந்துள்ளது.
NPCI அமைப்பு
NPCI அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ஜனவரி மாதம் மட்டும் யூபிஐ தளத்தின் வாயிலாகப் பேடிஎம் நிறுவனம் சுமார் 221 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது, இதைத் தொடர்ந்து கூகிள் பே மற்றும் போன் பே ஆகிய நிறுவனங்கள் தலா 220 மில்லியன் பணப் பரிமாற்றங்களைப் பெற்றுள்ளது.
போன்பே
இதுகுறித்துப் போன்பே கூறுகையில் ஜனவரி மாதம் சுமார் 225 மில்லியன் பேமெண்ட்களின் வாயிலாகச் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணப் பரிமாற்றங்களைச் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் என்சிபிஐ அமைப்பு 220 மில்லியன் பணப் பரிமாற்றங்களை மட்டுமே செய்துள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
யூபிஐ பரிமாற்றங்கள்
இப்படி ஜனவரி மாதம் யூபிஐ வாயிலாக மொத்தம் 672 மில்லியன் பேமெண்ட்களைச் செய்யப்பட்டுள்ளது, இதுவே டிசம்பர் மாதம் 620 மில்லியன் பேமெண்ட்கள் மட்டுமே செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
BHIM செயலியின் நிலை
இதுவே BHIM செயலியின் வாயிலாக வெறும் 13.9 மில்லியன் பரிமாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, இது டிசம்பர் மாதத்தில் இதன் எண்ணிக்கை 17.06 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள்
என்னதான் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் அதிகரித்தாலும் தனிநபர் - தனிநபர் இடையிலான பரிமாற்றங்களே அதிகரித்து வருகிறது. வணிகர்கள் மத்தியிலான பரிமாற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான்.
வணிகப் பணப் பரிமாற்றம்
ஜனவரி மாதம் செய்யப்பட்ட மொத்த 672 யூபிஐ பரிமாற்றங்களில் வெறும் 100-120 மில்லியன் பரிமாற்றங்கள் மட்டுமே தனிநபர் - வணிகர்கள் மற்றும் வணிகர்கள்- வணிகர்கள் இடையில் நடந்துள்ளது.
மாபெரும் தோல்வி
இப்படிப்பார்க்கும் போது இந்தியாவில் அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் பணப் பரிமாற்ற புரட்சி அனைத்தும் வீண் ஆகியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் ஏற்கனவே தனிநபர்கள் இடையிலான பணப் பரிமாற்றங்கள் இணைய வங்கி வாயிலாக நடந்து வந்தவை தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications