சாமானிய மக்கள் தொடங்கி பில்லியனர்கள் வரையில் இருக்கும் ஒரு மிகப்பெரிய இலக்கு, கனவு என்றால் அது சொந்த வீடு கனவாகத் தான் இருக்கும். அது சிறிய வீடோ அல்லது பெரிய வீடோ அவரின் நிதி நிலைக்கு ஏற்றவாறு வாங்க வேண்டும் அல்லது கட்ட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் இப்படி வாழ் நாள் கனவாகவே இருக்கும் சொந்த வீடு என வரும்போது, நாம் சந்திக்கும் முதல் பிரச்சனையே நிதி பற்றாக்குறை தான்.
ஆக நிதி ரீதியாக சரியாக திட்டமிட நீங்கள் பலவற்றை திட்டமிட வேண்டியிருக்கும். அப்போது தான் கனவு வீடு என்பது நிஜத்திலும் உருவெடுக்கும்.
ஆக நீங்கள் ஒரு வீட்டினை வாங்க திட்டமிடுகிறீர்கள் எனில், சில முக்கிய டிப்ஸ் உங்களுக்காக இதோ?
சேமிப்பு
நீங்கள் மாதம் தோறும் எவ்வளவு சேமிக்கிறீர்கள் என்பது மிகப்பெரிய விஷயமாக இருக்கும்.இது நீங்கள் கனவு வீட்டை வாங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். பொதுவாக நிபுணர்கள் உங்களது சம்பளத்தில் குறைந்தபட்சம் 20 - 30% ஆவது சேமிக்க கூறுகின்றனர்.
நீங்கள் வீட்டுக் கடனே வாங்கி வீடு வாங்கினாலும், கட்டினாலும் உங்களின் திரும்ப செலுத்தும் தகுதியினை வங்கிகள் அலசி பார்ப்பார்கள். ஆக உங்களது திரும்ப செலுத்தும் திறனை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
முன்பணம் (Down Payment)
வீட்டின் மதிப்பில் சுமார் 80% தொகைதான் வீட்டுக் கடனாக கிடைக்கும். மீதமுள்ள 20% தொகையினை வீடு வாங்குபவர் தங்களது கையில் இருந்து தான் முன் பணமாக போட வேண்டியிருக்கும். இந்த தொகையைத் தான் முன்பணம் (Down payment) என்பார்கள். ஆக நீங்கள் கடன் வாங்கும் முன்பு உங்களிடம் போதுமான முன்பணம் இருக்கிறது என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த தொகை சொத்தின் மதிப்பில் 10%ல் இருந்து 20% வரையில் இருக்கலாம். இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். இது எந்தளவுக்கு நீங்கள் அதிகம் செலுத்துகிறீர்களோ அந்தளவுக்கு மாத தவணை தொகை குறைவாக செலுத்த வழிவகுக்கும்.
மாத தவணையில் செலுத்த போகிறீர்களா?
உதாரணத்திற்கு நீங்கள் 9% வட்டி விகிதத்தில் 20 ஆண்டு காலத்திற்கு 50 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனாக வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் மாதம் தோறும் மாத தவணையாக சுமார் 45,000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். 20 வருடங்களில் உங்களால் செலுத்த முடியவில்லை எனில், இது மேற்கொண்டு உங்களுக்கு பிரச்சனையாக மாறக்கூடும்.ஆக நீங்கள் வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கும் திட்டம், உங்களுக்கு அதுவும் பிரச்சனையாக மாறலாம்.
ஆக சரியான நேரத்தில் மாத தவணை செலுத்த வேண்டும். அப்படி இல்லை எனில் இது உங்களின் பரிவர்த்தனையை பாதிக்க கூடும். நீங்கள் எதிர்காலத்தில் எந்த பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகக் கூட வாய்ப்புள்ளது. ஆக உங்களின் வழக்கமான செலவுகள் மற்றும் மற்றும் மாத தவணையை உங்களால் சரியாக செலுத்த முடியுமா? என்பதை சரியான முறையில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
எதிர்கால வருமானம்?
இளம் வயதில் உங்களது வேலையை தொடங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அப்படி எனில் எதிர்காலத்தில் உங்களது வருமானம் நிச்சயம் அதிகரிக்கும். ஆக உங்கள் கடனை விரைவில் செலுத்த இதனை பயனுள்ள ஒன்றாக மாற்றிக் கொள்ளலாம். முடிந்த அளவு உங்களது கடனை முன் கூட்டியே அடைக்க திட்டமிடலாம். இதன் மூலம் உங்களது கடனை விரைவில் அடைக்க முடியும். வட்டியும் குறையும்.
கிரெடிட் ஸ்கோர்
உங்களது கிரெடிட் ஸ்கோர் என்பது அதிகளவில் இருக்க வேண்டும். இதுவே உங்களது திரும்ப செலுத்தும் தகுதியினை தீர்மானிக்கும். உங்களது கிரெடிட் ஸ்கோர் என்பது உச்சத்தில் இருந்தால், எளிதில் குறைந்தவட்டியில் கடன் கிடைக்கும்.
உங்களது கிரெடிட் ஸ்கோர் என்பது நேரடியாக உங்களது கடனில் எதிரொலிக்கலாம். 700-க்கும் மேலாக இருந்தால் அது உங்களுக்கு சாதகமான ஒன்றாக அமையலாம். இதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்துங்கள்
குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு கடன் மறுக்கப்படலாம். அப்படியே கிடைத்தால் வட்டி அதிகமாக இருக்கலாம். ஆக வீட்டுக் கடனுக்கு அப்ளை செய்யும் முன்பு இதையெல்லாம் முன்பே தெரிந்து கொண்டு அதன் பிறகு விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வேளை கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், அதனை அதிகரிக்க திட்டமிட வேண்டும். அதன் பிறகு கடன் பற்றி யோசிக்கலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications