இந்தியாவில் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருந்து வரும் ஆதார் கார்டு, குழந்தைகளின் பிறப்பு முதல் இறப்பு வரையில் அவசியமான ஒன்றாக உள்ளது. அனைத்து அரசு தரப்பு முதல் தனியார் துறை வரையில், கல்வித் துறை, மருத்துவமனை உள்ளிட்ட பல துறைகளிலும் அவசியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட முக்கிய ஆவணமான ஆதார் கார்டில் அவசியல் செய்ய கூடாதது என்ன? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
முக்கிய ஆவணம்
UIDAI-வால் வழங்கப்பட்ட தனித்துவமான 12 இலக்க எண் தான் ஆதார். இது இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் எடுக்க வேண்டிய ஆவணமாகும். இப்படிப்பட்ட ஆவணம் சரியான பயன்படுத்தப்படவில்லை எனில், தவறாக பயன்படுத்தப்படவும் வாய்ப்புகள் அதிகம். ஆக உங்களது ஆதார்களின் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
எச்சரிக்கையாக இருங்க
ஏதேனும் ஒரு இடத்தில் உங்கள் ஆதார் நம்பரை பகிரும்போது அதனை எச்சரிக்கையாக கையாள வேண்டும். குறிப்பாக நிறுவனங்களே அதனை பயன்படுத்தும் போது, உங்களின் ஒப்புதலை பெற்ற பிறகு பயன்படுத்துமாறு வலியுறுத்தலாம். இது மேற்கொண்டு தவறுகள் நடக்காமல் தவிர்க்க முடியும்.
VID-யினை பயன்படுத்தலாம்
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆதார் எண்ணினை பகிராமல், VID மூலமாக பயன்படுத்தலாம். இதனை ஒரு மாதத்திற்கு பிறகு மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு. ஆக இதன் முலம் உங்கள் ஆதார் எண் பகிரப்படாமல் இருக்கும். அதனையும் மீறி உங்கள் ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுவதாக தோன்றினால், UIDAI அல்லது M Aadhaar செயலியில் கடந்த 6 மாதங்களாக உங்களது கார்டின் வரலாற்றினை பார்த்துக் கொள்ள முடியும். இதன் மூலம் உங்கள் ஆதார் கார்டு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு வேளை தவறாக பயன்படுத்தப்பட்டதாக தோன்றினால் உடனடியாக சரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம்.
அடிக்கடி மெயில் பாருங்கள்
அடிக்கடி உங்களது பதிவு செய்யப்பட்டமெயில் ஐடியினையும் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் ஆதார் கார்டில் செய்யப்படும் ஒவ்வொரு அப்டேட்டும் மெயிலும் வருவதால், அதன் மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஒரு வேலை ஐடி மாறியிருந்தால் கூட, எளிதில் அதனை எளிதில் அப்டேட் செய்து கொள்ளலாம். மொத்தத்தில் உங்களுக்கு வரும் ஒவ்வொரு மெயிலும் சரியான முறையில் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
ஒடிபியினை பயன்படுத்துங்கள்
இன்று நம்மில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு இது தான். ஆதார் கார்டில் கொடுத்த மொபைல் எண்ணினை மாற்றிவிடுவது. இதன் மூலம் ஓடிபி மூலமாக செய்யும் சேவைகள் செய்ய முடியாமல் போகலாம். ஆஃப்லைனில் செய்யும்போது, உங்களது தகவல்கள் கசியவும் வாய்ப்புகள் அதிகம். ஆக எப்போதும் உங்களது ஆதார் கார்டில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆதார் லாக்
ஆதார் லாக் அல்லது பயோமெட்ரிக் வசதியினை பயன்படுத்தலாம். இதன் மூலம் தேவைப்படும் சமயத்தில் நீங்கள் லாகின் செய்து கொள்ளலாம். இதுவும் உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வழிவகுக்கும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications