12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கக்கூடிய சூழலில் நல்ல வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய ஐந்து துறைகள் குறித்து நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
1. டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing):
தற்போது அனைவரின் கைகளிலுமே ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டன. எனவே நிறுவனங்கள் தற்போது பாரம்பரியமான விளம்பரங்களை தாண்டி டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்களை சென்று சேர்வதில் தான் ஆர்வம் காட்டுகின்றன. இதற்காக அவை நாடக்கூடிய நிறுவனங்கள்தான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சிகள். சமூகவலைதளங்கள், செயலிகளில் விளம்பரம், இணையதளங்களில் விளம்பரம் என இதில் பல்வேறு பிரிவுகளும் இருக்கின்றன. எனவே இந்த பிரிவில் படிப்பை முடித்தால் நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

2. யுஐ அல்லது யுஎக்ஸ் டிசைன் (UI/UX design)::
தற்போது டிஜிட்டல் உலகில் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வது முக்கிய பங்கு வகிக்கிறது. வாடிக்கையாளர்களை செயலிகள் மற்றும் தங்களுடைய இணையதளங்கள் வாயிலாக நிறுவனங்கள் சென்றடைகின்றன. இந்த செயலிகளும் இணையதளங்களும் சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் இருப்பது அவசியம். இந்த பணியை தான் யூசர் இன்டர்பிரைஸ் டிசைனர்கள் மேற்கொள்கிறார்கள். அண்மைக்காலமாக நல்ல வேலை வாய்ப்பு கொண்ட படிப்பாக இது மாறி வருகிறது. இதன் மூலம் ஆப் டெவலப்மெண்ட் பிரிவுகளில் நாம் வேலைக்கு செல்ல முடியும்.
3. டேட்டா சயின்ஸ் (Data science):
உலகம் முழுவதுமே தற்போது டேட்டா எனப்படும் தரவுகள் தான் முக்கியமானவையாக மாறியிருக்கின்றன. அனைத்து தொழில்களுக்கும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த டிஜிட்டல் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் இந்த டேட்டா என்பது முக்கியம். இதன் காரணமாகத்தான் டேட்டா சயின்ஸ் மற்றும் டேட்டா அனலிட்டிஸ் பிரிவுகளுக்கு தற்போது நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கிறது. உலகம் முழுவதும் நல்ல டிமாண்ட் கொண்ட ஒரு வேலை வாய்ப்பு துறையாக மாறி வருகிறது.
4. சைபர் பாதுகாப்பு (Cyber security):
உலகமே நம் கைக்குள் வந்துவிட்டது, ஆனால் அது பாதுகாப்பு தொடர்பான பல சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. அனைத்து சேவைகளுமே டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் சைபர் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமாக மாறி இருக்கிறது. குறிப்பாக தனிநபர் தகவல்கள் பாதுகாப்பு, அரசாங்க ரகசியங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு சைபர் பாதுகாப்பு முக்கியம். எனவே பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் சைபர் செக்யூரிட்டி பிரிவில் பெரிய அளவில் கவனம் செலுத்துகின்றன.
5. பிராம்ப்ட் இன்ஜினியரிங் (Prompt engineering):
சாட் ஜிபிடி போன்ற ஏஐ தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. இதனை பயன்படுத்தி தொழில்களை மேம்படுத்துவது அதிகரித்துவிட்டது. இத்தகைய சாட் பாட்களை சரியாக பயன்படுத்தி அவற்றின் மொழியில் பிராம்ப்ட்களை கொடுத்து நமக்கான தகவல்களை பெற வேண்டும். இந்த வேலையை செய்பவர்கள் தான் பிராம்ப்ட் இன்ஜினியர்கள்.


Click it and Unblock the Notifications