சென்னை: புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கும் படிப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது செய்திகள் வெளியாவது உண்டு. அப்படித்தான் அண்மையில் 71 வயதான ஒரு முதியவர் சிஏ எனப்படும் பட்டய கணக்காளர் படிப்பில் தேர்ச்சி பெற்றார் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தியாவில் சிஏ படிப்புக்கு வயது வரம்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதிலை தான் நாம் இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
71 வயது முதியவர்: ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தை சேர்ந்தவர்தான் தாராசந்த் அகர்வால் 71 வயதான இவர் எஸ்பிஐ வங்கியில் துணை பொது மேலாளராக பணி புரிந்தவர். 38 ஆண்டுகாலம் வேலை பார்த்த இவர் 2014 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் தன் கடந்த 2020 ஆம் ஆண்டு தன்னுடைய மனைவியை இழந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இவருக்கு பிள்ளைகள் பல்வேறு புத்தகங்களை வாங்கி படிக்கும்படி வழங்கியுள்ளனர்.

சிஏ தேர்வு எழுத முடிவு: அப்போதுதான் அவருக்கு இந்தியாவில் சிஏ தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பு இல்லை என்ற விவரம் தெரியவந்திருக்கிறது. இதனை அடுத்து அவர் சிஏ தேர்வு படிப்பதற்காக 2021 ஆம் ஆண்டு பதிவு செய்தார் . 2022 ஆம் ஆண்டு மே மாதம் சிஏ ஃபவுண்டேஷன் தேர்விலும், 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் சிஏ இன்டர்மீடியட் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். கடந்தாண்டு மே மாதம் இறுதி தேர்வு எழுதினார், ஆனால் அதில் தோல்வி அடைந்திருக்கிறார் . பின்னர் தீவிரமாக முயன்று இந்த ஆண்டு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டார்.
சிஏ இறுதி தேர்வில் வெற்றி: நாட்டில் சேர்ந்த லட்சக்கணக்கானவர்கள் எழுதக்கூடிய இந்த தேர்வில் 71 வயதான ஒரு முதியவர் தேர்ச்சி பெற்றிருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் எந்த வேலை செய்தாலும் நான் மன உறுதியுடன் செய்வேன் என இது பகவத் கீதை எனக்கு கற்றுத்தந்த பாடம் என கூறி இருக்கிறார்.

10 மணி நேரம் படிப்பு: ஒரு நாளைக்கு 10 மணி நேரம் படிப்பாராம், தோள்பட்டை வலி இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முழுவதும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினேன் என கூறியிருக்கிறார். தினமும் பல மணி நேரங்களுக்கு எழுதுவதற்கே பயிற்சி எடுப்பாராம். பல்வேறு புத்தகங்கள் , யூடியூப் வீடியோக்கள் வாயிலாக சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவருடைய மூத்த மகன் சிஏவாக டெல்லியில் பணியாற்றுகிறார். இளைய மகன் வரி தாக்கல் சம்பந்தப்பட்ட பணியில் தான் ஈடுபட்டு இருக்கிறார். தன்னுடைய மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர் என கூறுகிறார்.
வயது வரம்பு என்ன? : இந்தியாவில் சிஏ படிப்பதற்கு வயது வரம்பு இல்லையா என்ற கேள்வி எழுகிறது . இந்தியாவைப் பொறுத்தவரை சிஏ தேர்வு எழுதுவதற்கு எந்த ஒரு வயது வரம்பும் கிடையாது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் . சிஏ ஃபவுண்டேஷன் தேர்வில் கலந்து கொள்ளலாம். கல்லூரியில் காமர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பை முடித்தவர்கள் 55 சதவீதம் மதிப்பு இருந்தால் நேரடியாக இன்டர்மீடியட் சிஏ தேர்வில் பங்கேற்கலாம். சிஏ ஃபவுண்டேஷன், இண்டர்மீடியட், இறுதி தேர்வு ஆகிய மூன்றுக்குமே வயது வரம்பு கிடையாது. கல்வி தகுதி அடிப்படையில் எந்த வயதினரும் எழுதலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications