வருமான வரி விலக்கு பெற திட்டமிட்டு கொண்டிருப்பவர்கள் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Dஐ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இது மருத்துவ தேவையின் போது உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது மட்டுமல்லாமல் , வருமான வரி விலக்கும் பெற்றுத்தருகிறது.
பிரிவு 80D: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மருத்துவ காப்பீட்டை தேவையற்ற முதலீடாக கருதுகின்றனர். திடீரென ஒரு மருத்துவ அவசர நிலை தேவைப்படும் போது சேமிப்பில் இருந்தோ அல்லது கடன் பெற்றோ அதற்கு செலவு செய்கின்றனர்.

எனவே மக்கள் மருத்துவ காப்பீடு வாங்குவதை ஊக்குவிக்க மத்திய அரசு பிரிவு 80D -யின் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது. ஒவ்வொரு தனிநபரும் நிதியாண்டில் மருத்துவ காப்பீட்டிற்காக செலுத்திய ப்ரீமியம் தொகைக்கு விலக்கு பெற முடியும். டாப் -அப் திட்டங்கள் மற்றும் தீவிர நோய்களுக்கான திட்டங்களுக்கும் இது பொருந்தும்.
பிரிவு 80Dஇன் கீழ் யாரெல்லாம் சலுகை பெற முடியும்: தனிநபர் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் இந்த பிரிவின் கீழ் வருமான வரி சலுகை பெற முடியும்
பிரிவு 80D -இல் எதற்கெல்லாம் விலக்கு கிடைக்கும்:
தனக்காக மற்றும் குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டிற்காக செலுத்தப்பட்ட ப்ரீமியம் தொகை
மூத்த குடிமக்களுக்கான மருத்துவ செலவுகள்
மருத்துவ பரிசோதனைகள்
மருத்துவ காப்பீட்டு ப்ரீமியம் (பணமாக செலுத்தி இருக்க கூடாது):
தனக்காக, மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு செலுத்தப்பட்ட ப்ரீமீயத்திற்கு ரூ.25,000 வரை
குடும்பம் அல்லது பெற்றோர் மூத்த குடிமக்களாக (60 வயதுக்கு மேல்) இருந்தால் ரூ.50,000 வரை
மருத்துவ பரிசோதனைகள்( பணமாக செலுத்த அனுமதி உண்டு):
தனக்காக, மனைவி மற்றும் குழந்தைகள் , பெற்றோருக்கு ரூ.5,000 வரை
மருத்துவ செலவுகள்:
மருத்துவ காப்பீடு இல்லாத மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மேற்கொண்ட மருத்துவ செலவுகளுக்கு ரூ.50,000 வரை விலக்கு கோரலாம்.
80D-இன் கீழ் எவ்வளவு வரி விலக்கு பெற முடியும்:
ஒரு நிதியாண்டில் இந்த பிரிவின் கீழ் ரூ.25,000 வரை வரி விலக்கு பெற முடியும். ஒருவேளை மூத்த குடிமக்களாக இருந்தால் ரூ.50,000 வரை பெறலாம்.
உதாரணம்: அருண் 40 வயதுடையவர், அவரது தந்தை 70 வயதுடையவர். தனக்கான மருத்துவ காப்பீட்டிற்கு அருண் ரூ, 30,000 மற்றும் தந்தைக்கான மருத்துவ காப்பீட்டிற்காக ரூ.35,000 ப்ரீமியம் செலுத்தினால், அந்த நிதியாண்டில் அருண் எவ்வளவு தொகை விலக்கு பெற முடியும்?
அருண் தனக்காக செலுத்தும் தொகை ரூ.30,000 அதில் ரூ 25,000 மற்றும் தந்தைக்கான தொகையில் (மூத்த குடிமகன்) அரசு கூறும் அதிகபட்ச வரம்பு ரூ.50,000 அவர் செலுத்துவது 35,000 என்பதால் மொத்தமாக 25,000 +35,000 என ரூ.60,000 வரை வரி விலக்கு பெற முடியும்.
80D-இன் கீழ் வரி விலக்கு பெற முக்கிய நிபந்தனை: மருத்துவ பரிசோதனைக்கு பணம் உட்பட அனைத்து வடிவத்திலும் தொகையை செலுத்தி இருக்கலாம், ஆனால் ப்ரீமியம் தொகை மற்றும் மருத்துவ செலவுகளுக்கு, பணமாக இல்லாமல் மற்ற வடிவங்களில் (டிஜிட்டல் முறை, உள்ளிட்ட ) செலுத்தி இருந்தால் மட்டுமே விலக்கு பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications