உங்கள் குடும்பத்தினருக்கு புற்றுநோய் , நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்து வருகிறீர்கள் எனில் அதனை வருமான வரி கணக்கில் குறிப்பிட்டு வரிச் சலுகை பெற முடியும். இதற்கான வருமான வரி சட்டத்தின் பிரிவு 80DDB குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.
பிரிவு 80DDB: வருமான வரி செலுத்தும் நபர் தனக்கோ அல்லது சார்ந்தவர்களுக்கோ ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட தீவிர நோய்களுக்காக செய்யப்படும் மருத்துவ செலவுகளுக்கு வரி விலக்கு கோரலாம். வரி சலுகை கோரும் நபரின் வயது மற்றும் செய்யப்பட்ட செலவை பொறுத்து இது மாறுபடும்.

யாரெல்லாம் வரிச்சலுகை கோரலாம்?: வருமான வரி சட்டம் பிரிவு 80DDB கீழ் தனிநபர் அல்லது பிரிக்கப்படாத இந்து குடும்பத்தை சேர்ந்தவர் வரி சலுகையை பெறலாம். கூடுதலாக இந்த வரி சலுகையை பெற இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
நிபந்தனைகள் என்னென்ன?: வரி சலுகை கோருபவர் தன்னை சார்ந்திருப்பவருக்கு சிகிச்சை அளிக்க பணம் செலவு செய்திருந்தால்
இங்கே சார்ந்திருப்பவர் என்பது மனைவி, குழந்தைகள், பெற்றோர் மற்றும் சகோதரன்/சகோதரி.
ஒருவேளை சார்ந்திருக்கும் நபர், காப்பீடு மூலம் சிகிச்சைக்கான பணம் பெற்றிருந்தால், அதில் கிடைத்த தொகை போக மீதமுள்ள தொகைக்கு விலக்கு கோரலாம்.
பிரிவு 80DDBயில் வரிச்சலுகை கோர சான்றிதழ் பெறுவது எப்படி?: சிகிச்சை பெற்று வரும் உடல் பிரச்சனைக்கு ஏற்ப அதற்குரிய மருத்துவ நிபுணர்களிடம் சான்றிதழ் பெற வேண்டும். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர் என்றால் அரசு மருத்துவமனையில் சான்றிதழ் பெற வேண்டியதில்லை.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர், இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த முழு நேர சிறப்பு மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
சான்றிதழில் கட்டாயம் இடம் பெற வேண்டியவை: நோயாளியின் பெயர், வயது, என்ன நோய் தாக்கம் அல்லது பாதிப்பு.
சான்றளிக்கும் மருத்துவரின் நிபுணத்துவம் என்ன? பெயர் முகவரி, பதிவு எண்
என்னென்ன பாதிப்புகளுக்கு வரி சலுகை பெறலாம்?
நரம்பியல் பாதிப்பு, குறைபாட்டின் தன்மை 40% மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்
1. முதுமை மறதி (Dementia )
2. டிஸ்டோனியா மஸ்குலோரம் டீஃபார்மன்ஸ் (Dystonia Musculorum Deformans )
3. இயக்க நரம்பு நோய் (Motor Neuron Disease )
4. நரம்புதளர்ச்சியால் ஏற்படும் பாதிப்பு (Ataxia )
5. வலிப்பு வகை (Chorea )
6. ஹெமிபாலிஸ்மஸ்(Hemiballismus )
7. அபாசியா (Aphasia )
8. பார்கின்சன் (Parkinsons Disease)
9. புற்றுநோய்
10. எய்ட்ஸ்
11. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு
12. ஹீமோபிலியா
13. தலசீமியா
எவ்வளவு தொகை வரி சலுகை பெற முடியும்?
60 வயதுக்கு கீழ் இருந்தால் எவ்வளவு செலவு செய்தீர்களோ அந்த தொகை அல்லது ரூ.40,000 (எது குறைவானதோ)
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் எவ்வளவு செலவு செய்தீர்களோ அந்த தொகை அல்லது ரூ.1,00,000 (எது குறைவானதோ)
உதாரணம்:
நிதியாண்டில் அருண் தனது 70 வயது தந்தைக்கு புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.80,000 செலவு செய்தார் என வைத்துக் கொள்வோம். இதற்கான உரிய சான்றிதழை பெற்று வருமான வரி தாக்கலின் போது சமர்ப்பித்து தான் செலவு தொகையான ரூ.80,000 ஐ குறிப்பிட்டு வரிச்சலுகை பெற முடியும். எவ்வளவு செலவு செய்தாரோ அதை மட்டுமே சலுகையாக கோர முடியும், அரசின் வரம்பான ரூ.1,00,000ஐ கோர முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications