குழந்தைகளுக்கு ஆதார் அட்டை எடுப்பது எப்படி.. ஆன்லைனில் எடுக்க முடியுமா?

இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டும் அல்ல, சிறிய குழந்தைகளுக்கு முதல் கொண்டு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில், கல்லூரிகளில் என பல இடங்களிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனைஅடையாள சான்றாக மட்டும் அல்லாது, பல் நோக்கங்களுக்கான மத்திய அரசு கட்டாயமாக்கி வருகின்றது.

ஆக குழந்தைகள் உள்பட அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கட்டாயமில்லை எனினும், சில இடங்களில் தனியார் பள்ளிகளில் ஆதாரினை கேட்கின்றன. ஆக குழந்தைகளுக்கு ஆதாரினை கட்டாயம் எடுத்துக் கொள்வதும் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை

குழந்தைகளுக்கான பால் ஆதார் அட்டை

உங்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்துக்கு உங்கள் குழந்தையை அழைத்து செல்லுங்கள். உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் இருந்தால் போதுமானது. குழந்தைகளுக்கு இரு விதமான ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகின்றது. அதாவது குழந்தை 5 வயதிற்கு கீழ் உள்ளது என்றால், அதன் பயோமட்ரிக் அடையாளங்கள் எடுக்கப்படுவதில்லை. அதில் ஆதார் எண் தொடர்பான விவரங்கள் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்கள் வரும். இது நீல நிறத்தில் உள்ள பால் ஆதார் அட்டை என்று வழங்கப்படும்.

ஆதாரினை அப்டேட் செய்ய வேண்டும்?

ஆதாரினை அப்டேட் செய்ய வேண்டும்?

இந்த பால் ஆதார் அட்டை 90 நாட்களுக்குள் வீட்டுக் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். எனினும் இந்த பால் அட்டை குழந்தை 5 வயதினை அடையும்போது செல்லாது. 5 வயதிற்கு பின்பு குழந்தையின் பயோமெட்ரிக் விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்யப்பட வேண்டும். ஒரு வேளை குழந்தைக்கு 5 வயது வரை ஆதார் எடுக்கப்படவில்லை எனில், புதியதாக பயோமெட்ரிக் முறையில் ஆதார் கார்டுக்கு அப்ளை செய்யப்பட வேண்டும். இதே போல 15 வயதிலும் குழந்தையின் ஆதார் அப்டேட் செய்யப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு எப்படி எடுப்பது?

குழந்தைகளுக்கு எப்படி எடுப்பது?

குழந்தையில் பிறப்பு சான்று அல்லது போட்டோவுடன் கூடிய ஐடி பள்ளிகூட ஐடி கார்டுகள் இருந்தால் கூட போதுமானது. அதோடு குழந்தைகளின் பெற்றோரின் ஆதார் விவரங்கள் தேவைப்படும். தேவையான ஆவணங்களை எடுத்துக் கொண்டு, அருகில் இருக்கும் ஆதார் மையத்திற்கு செல்லவும். குழந்தைகளின் ஆதார் தகவல்கள், பெற்றோர் ஆதாருடன் இணைக்கப்படும்.

ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது?

ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது?

https://appointments.uidai.gov.in/bookappointment.aspx என்ற தளத்தில் சென்று ஆதார் அப்டேட் அல்லது நியூ ஆதார் என்பதை கிளிக் செய்து, உங்களது நகரம், குழந்தையின் பெயர், பெற்றோரின் மொபைல் எண், இமெயில் முகவரி உள்பட அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்தபிறகு வீட்டு முகவரி, ஊர், மாவட்டம், மாநிலம் உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதன் பின் fixed appointment ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் ஆதார் கார்டு பதிவுக்கான தேதியை தேர்வு செய்ய வேண்டும். இதில் உங்கள் அருகாமையிலுள்ள ஆதார் சேவை மையத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்?

ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்?

அதன் பிறகு தேவையான ஆவணங்கள் மற்றும் reference number உடன் குறிப்பிட்ட தேதியில் ஆதார் சேவை மையத்துக்கு செல்ல வேண்டும்.
உங்களது வெரிபிகேஷன் முடிந்தபிறகு, குழந்தை 5 வயதுக்கு மேல் இருந்தால் மட்டும் கைரேகை உள்ளிட்ட பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிக்கப்படும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை எனில் வெரிபிகேஷன் முடிந்துவிட்டால், உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS வரும். அதன்பிறகு உங்கள் குழந்தைக்கான பால் ஆதார் கார்டு அனுப்பப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+