இந்திய குடிமகன்களுக்கு ஆதார் கார்டு என்பது முக்கியமான ஒரு அடையாள அட்டையாகும். பல்வேறு அரசு திட்டங்களுக்கும் நலஉதவிகளுக்கும் இந்த ஆதார் கார்டுதான் டிஜிட்டல் அடையாள அட்டையாக விளங்குகிறது. எனவே ஆதார் கார்டை தொலைத்துவிட்டால் சிக்கல்தான். சேவைகளைப் பெறுவதற்காக ஆதார் கார்டு காப்பியை தர வேண்டும் அல்லது ஆன்லைனில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
ஆனால் தொலைந்து போன ஆதார் கார்டை ஆப்லைனிலோ அல்லது ஆன்லைனிலோ திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு ஆதார் அளிக்கும் யூனிக் ஐடன்டிவிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பு வகை செய்துள்ளது.

தனிப்பட்ட நபர்கள் தங்களது ஆதார் கார்டை ஆதார் எண், என்ரோல்மென்ட் ஐடி, ஆதார் விர்சுவல் ஐடி அல்லது மொபைல் நம்பர் அல்லது இமெயில் ஐடியை தந்து பெற்றுக் கொள்ளலாம். யூஐடிஏஐ வெப்சைட்டில் தனிப்பட்டவர்கள் தங்களது ஆதாரை ஆன்லைனில் பெறலாம். உங்களது ஒரிஜினல் ஆதார் கார்டு பேப்பரில் இருந்தால் நாளடைவில் அது சேதமடைந்து விடக் கூடும்.
எனவே புதிய ஆதார் கார்டை வாங்கும்போது நீங்கள் ஒரு இ-ஆதார் அல்லது பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
புதிய ஆதார் கார்டை பெறுவது எப்படி என்பதை இங்கு விவரமாகப் பார்க்கலாம்.
தனிநபர்கள் தங்களது ஆதார் எண்ணை தெரிந்து வைத்திருந்தால் அதைக் கொண்டு இ-ஆதாரை நேரடியாக UIDAI வெப்சைட் அல்லது mAadhaar appஇல் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இ-ஆதார் என்பது ஆதார் அட்டையின் பாஸ்வேர்டு பாதுகாக்கப்பட்ட எலக்ட்ரானிக் காப்பி ஆகும். இதில் UIDAI டிஜிட்டல் சிக்னேச்சர் அடங்கியிருக்கும். இந்த இ-ஆதாரை ஆதார் கார்டைப் போலவே எல்லா விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம்
இ-ஆதார் பெறும் வழிகள்-
- myaadhaar.uidai.gov.in/ என்ற தளத்தில் உள்ள UIDAI வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.
- Download Aadhaar என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உங்களது ஆதார் எண்ணையும் கேப்சாவையும் என்டர் செய்யவும்.
- உங்களது மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட 4 இலக்க OTPஐ என்டர் செய்யவும்.
- OTPஐ என்டர் செய்துவிட்டு Submit என்பதை கிளிக் செய்யுங்கள்.
- உங்களது இ-ஆதார் PDF வடிவில் டவுன்லோடு ஆகும்.
- இந்த PDF பைலை எதிர்கால பயனுக்காக சேமித்துக் கொள்ளுங்கள்.
- mAadhaar app மூலமாகவும் உங்களது இ-ஆதாரைப் பெறலாம்.
- mAadhaar appஐ கூகுள் பிளேஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
- ஆப்பை ஓபன் செய்து உங்களது ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக்குகளை பயன்படுத்தி நுழையுங்கள்.
- அங்கு My Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.
- பின் Download Aadhaar என்பதை கிளிக் செய்துவிட்டு e-Aadhaar என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட 4 இலக்க OTP எண்ணை என்டர் செய்துவிட்டு Submit என்பதை கிளிக் செய்யவும்.
- உங்களது இ-ஆதார் PDF வடிவில் டவுன்லோடு ஆகிவிடும்.
- இந்த PDF பைலை உங்களது எதிர்கால பயன்பாட்டுக்காக சேமித்துக் கொள்ளுங்கள்.
பிவிசி ஆதார் கார்டை பெறுவது எப்படி?
- உங்களது ஆதார் கார்டை ஆன்லைனில் கன்வெர்ட் செய்து பிவிசி கார்டை உருவாக்க UIDAI வகை செய்துள்ளது.
- UIDAI வெப்சைட்டுக்கு சென்று ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். பின் பிவிசி கார்டை பெறலாம். பிளாஸ்டிக்கினால் ஆன பிவிசி ஆதார் கார்டு பாதுகாப்பானது. சேதமடையாது.
- இதற்கு atuidai.gov.in/ என்ற UIDAI வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்.
- அங்கு My Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- அதில் Order Aadhaar PVC Card என்பதை கிளிக் செய்யவும். பின் Order Now என்பதை கிளிக் செய்யவும்.
- உங்களது ஆதார் எண்ணையும் கேப்சாவையும் என்டர் செய்யவும்.
- பின்னர் Proceed என்பதை கிளிக் செய்யவும்.
- உங்களது முகவரி மற்றும் மொபைல் எண்ணை என்டர் செய்ய வேண்டும்.
- இதைத் தொடர்ந்து Submit என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் மொபைல் போனுக்கு ஒரு ஓடிபி வரும்.
- அந்த ஓடிபியை என்டர் செய்துவிட்டு Verify என்பதை என்டர் செய்யவும்.
- நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுவீர்கள்.
- Pay Now என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- உங்களுக்கு கன்பர்மேஷன் மெசேஜ் வரும்.
- இந்த பிவிசி ஆதார் கார்டு உங்களது முகவரிக்கு 15 வேலை நாட்களுக்குள் வந்து சேரும்.
ஒரே நாளில் 3 லட்சம் கோடி சம்பாதித்த Pham Nhat Vuong.. அமெரிக்காவில் கலக்கும் வியட்நாம் கார்..!
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications