இந்தியாவில் இன்று மிக முக்கியமான ஆவணங்களில் ஆதார் கார்டும் ஒன்றாகும். அத்தியாவசிய பொருட்கள் போல, அனைத்து குடிமக்களுக்கும் இன்றியமையாத ஆவணமாக ஆதார் கார்டு மாறியுள்ளது.
இப்படிப்பட்ட ஆதார் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் கொண்ட கார்டு ஆகும், இந்த 12 இலக்க எண்ணை உருவாக்கி, அதனை நமக்கு ஆதார் அட்டை வழங்குவது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆகும்.
இந்த ஆதார் அடையாள அட்டை வங்கி கணக்கு முதல், 100 நாள் வேலை திட்டம், குழந்தைகளின் கல்வி, வருமான வரி தாக்கல் போன்றவற்றிற்கு அடையாள மற்றும் முகவரி அட்டையாக உள்ளது. குறிப்பாக அரசு திட்டங்களை பெற வேண்டுமெனில் அதற்கும் ஆதார் அவசியமானதாக உள்ளது. இப்படி பலவற்றிலும் மிக அத்தியாவசியமான ஆவணமாக கருதப்படும் ஆதாரினை, தவறாக பயன்படுத்தப்படுவதில் இருந்து எப்படி எச்சரிக்கையாக இருப்பது வாருங்கள் பார்க்கலாம்.
ஆதார் எண்ணை லாக் செய்யலாம்
ஒருவர் தன்னுடைய ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறது என நினைத்தால், அதனை லாக் செய்து கொள்ளலாம். இதனை இணையம் மூலம் மிக எளிதாக செய்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் https://uidai.gov.in/ என்ற இணையத்தின் பக்கம் சென்று, மை ஆதார் என்ற மெனு பாரினை கிளிக் செய்ய வேண்டும். அதில் ஆதார் சர்வீசஸ் என்ற மெனு பாரின் கீழ் உள்ள Aadhaar lock and unlock services என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்படி இல்லையெனில் https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock பக்கத்தில் நேரிடையாக செல்லலாம்.
எப்படி லாக் செய்வது?
இப்பக்கத்தில் ஆதார் எண் மற்றும் திரையில் தெரியும் பாதுகாப்புக் குறியீட்டு எண் (Security Code), பெயர், உங்களது பின்கோடு ஆகியவற்றை பதிவு செய்து Send OTP என்பதைக் கிளிக் வேண்டும். பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணுக்கு வரும் ஒடிபி-யை Enter OTP என்ற இடத்தில் டைப் செய்துவிட்டு, Login என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
எப்படி திரும்ப உபயோகப்படுத்துவது?
இதைச் செய்ததும் ஆதார் லாக் செய்யப்பட்டுவிடும். எனினும் லாக் செய்யப்பட்ட ஆதார் எந்த இடத்திலும் பயன்படாது என்பது குறிப்பிடதக்கது. தேவையானபோது லாக் செய்த ஆதாரை ஆக்டிவேட் (Activate) செய்யவும் முடியும். அதற்கும் இதையே திரும்ப ஒருமுறை செய்ய வேண்டும்.
எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டது?
ஒருவர் தனது ஆதார் எண் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் ஆதார் இணையதளத்தில் அறிய முடியும். எப்போது, எங்கு ஆதார் எண் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்களையும் பார்க்க முடியும்.
ஆதார் எண்ணை பயன்படுத்திய விதம், தேதி, நேரம், எந்த நிறுவனத்துக்காக ஆதார் எண் பயன்படுத்தப்பட்டதோ அந்த நிறுவனத்தின் பெயர் (உதராணம், ரயில்வே), பயன்பாடு வெற்றிகரமாக முடிந்ததா இல்லையா என்ற விவரம், ஏதேனும் பிரச்னை ஏற்பட்டிருந்தால், பிரச்னையின் காரணம் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் பட்டியலிடப்படும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications