ஆதார் கார்டு: NRI-களுக்கு ஆதார் ஏன் அவசியம்..? அப்ளை செய்வது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆதார் அட்டை இந்திய மக்களின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்ட நிலையில் இதைப் பாதுகாப்பாக வைப்பதை தாண்டி, யாரும் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.

 

இதேபோல் மத்திய மாநில அரசின் திட்டங்களுக்குக் கூடுதலாக நிதி சேவைகளைப் பெற ஆதார் அட்டை மிகவும் முக்கியமானதாக உள்ளது. மேலும் வங்களில் முதல் KYC தேவைப்படும் அனைத்து இடத்திலம் பொது மற்றும் தனியார் அதிகாரிகள் ஆதார் அட்டையை முக்கிய ஆவணமாகக் கோருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு NRI அதாவது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இந்தியர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா..? அப்படி முடியும் எனில் எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்..? இதேபோல் NRI-களுக்கு ஆதார் அட்டை ஏன் மிகவும் முக்கியம்..?

என்ஆர்ஐ

என்ஆர்ஐ


இந்திய பாஸ்போர்ட்டைக் கொண்ட என்ஆர்ஐ எந்த ஆதார் மையத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்பதை UIDAI உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் பல வருடமாக வெளிநாட்டில் NRI தகுதி உடைய அனைவரும் ஆதார் கார்டு பெறலாம்.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

ஆதார் அட்டையைப் பெறுவதற்கு ஒரு NRI பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை என்ன என்பதை UIDAI அமைப்புப் படிப்படியாகத் தெரிவித்துள்ளது. இதைப் பின்பற்றினாலே ஆதார் அட்டையை மிகவும் எளிதாகப் பெற்று விட முடியும்.

வழிக்காட்டி
 

வழிக்காட்டி

படி 1 : உங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லவும்
படி 2 : உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்
படி 3 : ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவு படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்பவும்
படி 4 : NRI-கள் தங்கள் மின்னஞ்சல் ஐடியைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்
படி 5 : NRI சேர்க்கைக்கான DECLARATION இந்திய குடிமகன்கள்கான் DECLARATION-க்கு சற்று வித்தியாசமானது. இதனால் இப்படிவத்தில் இருக்கும் பின்வருவனவற்றைப் படித்து, உங்கள் பதிவுப் படிவத்தில் கையொப்பமிடுங்கள்.
படி 6 : உங்களை NRI ஆகப் பதிவு செய்ய ஆதார் மையத்தின் ஆபரேட்டரிடம் கேளுங்கள்
படி 7 : அடையாளச் சான்றுக்கு, ஆபரேட்டரிடம் உங்கள் பாஸ்போர்ட்டைக் கொடுங்கள்
படி 8 : அடையாளச் சான்றுக்குப் பிறகு, பயோமெட்ரிக் செயல்முறையை முடிக்கவும்
படி 9 : ஆபரேட்டரிடம் சமர்ப்பிக்கும் முன் கம்பியூட்டர் திரையில் பதிவிட்டு உள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
படி 10 : உங்கள் 14 இலக்க பதிவு ஐடி மற்றும் தேதி மற்றும் நேர முத்திரையைக் கொண்ட ரசீது அல்லது பதிவுச் சீட்டுப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேட்டஸ்

ஸ்டேட்டஸ்

இல் இந்தச் செயல்முறையை முடித்த பிறகு உங்கள் ஆதார் ஜெனரேஷன் ஸ்டேட்டஸ்-ஐ myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus இந்த இணைய முகவரியில் சரிபார்க்கலாம். UIDAI அமைப்பின் படி, உங்கள் முகவரி மற்றும் பிறந்த தேதியை சரிபார்ப்பதற்காக உங்கள் பாஸ்போர்ட்டுடன் கூடுதலாக மற்றொரு முறையான ஆவணம் அல்லது ஆவணங்களை வழங்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

முகவரிச் சான்று

முகவரிச் சான்று

உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டு உள்ள முகவரி மாறியிருந்தால், UIDAI-ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலுக்கு இணங்க தற்போதைய முகவரிச் சான்று உடன் புதுப்பிக்கப்பட்ட இந்திய முகவரியை நீங்கள் வழங்க வேண்டும்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு


NRI-களுக்கு ஏன் முக்கியம் என்றால் இந்தியாவுக்கு வந்து நீங்கள் பணியாற்ற விரும்பினால் குறிப்பாக அரசுத் துறையில் வேலை பெறுவதற்கும் NRIகளுக்கான ஆதார் அட்டை முக்கியமானது. நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய விரும்பினால், ஆதார் அட்டை அவசியம்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

இதேபோல் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் முக்கியமான சந்தேகம் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் நிலம், வீடு வாங்க அல்லது விற்க ஆதார் அட்டை அவசியமா என்பது தான். NRIகள் அல்லது PIO களுக்கு ஆதார் அட்டைகள் தேவையில்லை, ஆனால் நீங்கள் நீங்கள் NRI என்பதற்காக ஆதாரத்தைக் கட்டாயம் காட்ட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Aadhaar: How NRI can apply Aadhaar card? Step by step guide; why nri needs aadhar card?

Aadhaar: How NRI can apply Aadhaar card? Step-by-step guide; why nri needs aadhar card?
Story first published: Saturday, January 21, 2023, 18:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X