இறந்தவருடைய ஆதார், பான் மற்றும் வாக்காளர் அட்டையை திருப்பித் தர வேண்டுமா? அதற்கான விதிகள் என்னென்ன?

நம் நாட்டில் ஒரு சில ஆவணங்கள் மிக மிக முக்கியமானவை. ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டர் ஐடி போன்ற ஆவணங்கள் இல்லாமல் எந்த ஒரு சேவையையும் பெற முடியாது. இந்த ஆவணங்கள் அரசாங்க உதவித்தொகை பெற, ஈபிஎஃப் கணக்கு தொடங்க, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க என எல்லா இடங்களிலும் பயன்படுகிறது. அதிலும் ஒரு சில திட்டங்களுக்கு கண்டிப்பாக ஆதார் நம்பரை கொடுத்தே ஆக வேண்டும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த அரசாங்க ஆவணங்களை ஒருவரின் இறப்புக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஒருவரின் இறப்புக்கு பின்னால் அவர்களுடைய ஆதார் கார்டை என்ன செய்வது?: ஒருவர் இறந்த பின்னர் அவர்களுடைய அரசாங்க ஆவணங்களை என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் குழப்பமான விஷயமாகவே இருக்கிறது. டெத் சர்டிபிகேட் வாங்கி விட்டால் ஆதார் கார்டு தானாகவே செயலிழந்து விடும் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். ஆதார் கார்டை இறப்பு தேதியை வைத்து ஒருபோதும் புதுப்பிக்க முடியாது.

இறந்தவருடைய ஆதார், பான் மற்றும் வாக்காளர் அட்டையை திருப்பித் தர வேண்டுமா? அதற்கான விதிகள் என்னென்ன?

இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் இறந்தவருடைய ஆதார் கார்டை சமர்ப்பிப்பதற்கு எந்தவித வழிமுறையையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனவே இதை சரண்டர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இறந்தவர்களுடைய ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க பயோமெட்ரிக் லாக் செய்து வைக்கலாம். இதனால் யாரும் அவர்களுடைய ஆதார் நம்பரை தவறாக பயன்படுத்தாமல் இருப்பார்கள். இதை எளிதில் UIDAI-இன் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவே செய்யலாம்.

Also Read

பான் கார்டு: உங்களுடைய எந்த நிதி சார்ந்த விஷயமாக இருந்தாலும் சரி அதற்கு முதலில் கேட்கப்படும் ஆவணம் பான் கார்டு. அதுவும் வங்கி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு மிக மிக அவசியம். இறந்தவர் ஐடிஆர் தாக்கல் செய்திருந்து.. அவருக்கு வருமான வரி ரீஃபண்ட் வரவிருந்தால் கண்டிப்பாக அவருடைய பான் கார்டை நீங்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இது போன்ற எல்லா விஷயங்களும் முடிந்த பின்னர் தேவைப்பட்டால் பான் கார்டை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கலாம்.

இதுவும் கட்டாயம் கிடையாது. தேவைப்பட்டால் ஒப்படைக்கலாம் இல்லையெனில் உங்களுடைய வீட்டிலேயே பத்திரமாக வைத்திருக்கலாம். பாஸ்போர்ட் இருந்தால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. குறிப்பிட்ட தேதிக்கு பிறகு அதை ரெனீவல் செய்ய வேண்டும். எனவே இறந்தவருடைய பாஸ்போர்ட்டை அப்படியே புதுப்பிக்காமல் விட்டுவிடலாம். அரசாங்க ஆவணங்களை அந்தந்த அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால் அதை ஒப்படைப்பது அல்லது டி-ஆக்டிவேட் செய்வது ஆன்லைன் மோசடிகள் நடப்பதை வெகுவாக தவிர்க்க உதவும். அப்படி இல்லை என்றாலும் நீங்களே பத்திரமாக உங்களுடைய பீரோ அல்லது பிற இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+