மார்ச் 31 கடைசி நாள்.. ஆதார்-பான் இணைப்பது எப்படி? இணைப்பை செக் செய்வது எப்படி?!

2021ஆம் நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி நெருங்கி வரும் நிலையில் வருமான வரியைச் சேமிக்கப் பலரும் எளிய முதலீடுகளைத் தேடி வரும் நிலையில் மத்திய அரசு ஆதார் மற்றும் பான் தகவல்களை இணைக்கக் கடைசி நாள் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பின் படி மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு வைத்துள்ள அனைவரும் தங்களது ஆதார் எண் உடன் இணைக்கவேண்டும், இல்லையெனில் உங்களது பான் எண் அல்லது பான் கார்டு செல்லாதது.

பான் கார்டு இல்லையெனில் வருமான வரி செலுத்தவும் முடியாது, செலுத்தப்பட்ட வரியை திருபம்வும் பெற முடியாது. எனவே ஆதார் மற்றும் பான் எண் இணைக்க வேண்டியது கட்டாயம்.

 அபராதம் கட்டாயம்

அபராதம் கட்டாயம்

மார்ச் 31, 2021க்குள் ஆதார் மற்றும் பான் எண்-ஐ இணைக்காதவர்களுக்குத் தாமதம் கட்டணமாக 1000 ரூபாயை அபராதமாக விதிக்க மத்திய அரசு நிதியியல் கொள்கை 2021 அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. இந்த அபராத விதிப்பிற்கு நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 நிதியியல் கொள்கை 2021ல் புதிய சட்டம்

நிதியியல் கொள்கை 2021ல் புதிய சட்டம்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதியியல் கொள்கை 2021ல் பிரிவு 139AA(2) கீழ் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும், அப்படி இணைக்காத பட்சத்தில் தாமதம் கட்டணமாக 1000 ரூபாய் தொகையை அபராதமாகப் பிரிவு 234H சட்டத்தின் கீழ் செலுத்த வேண்டும் எனப் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

 பான் கார்டு செல்லாது

பான் கார்டு செல்லாது

ஆதார் உடன் இணைக்காத பான் கார்டுக்கு அபராதம் மட்டும் அல்லாமல், பான் கார்டும் செல்லாத ஒன்றாக அறிவிக்கப்படும். பான் கார்டு வருமான வரி செலுத்துவதற்கும் மட்டும் அல்லாமல் புதிய பான் கார்டு வாங்குவதற்கும் கட்டாயம் தேவை என்பதால் முன்கூட்டியே இணைப்பது நல்லது. இல்லையெனில் அபராதம் உடன் புதிய பான் கார்டு வாங்க வேண்டி வரும். சரி பான் இணைப்பது எப்படி..?!

 வருமான வரித் தளம் மூலம் இணைக்கலாம்.

வருமான வரித் தளம் மூலம் இணைக்கலாம்.

1. வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home
2. இடது புறம் இருக்கும் Quick Links பட்டியலில் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்
3. குறித்த இணையப் பக்கத்தில் உங்கள் பான் எண், ஆதார் எண், ஆதார் அட்டையில் இருக்கும் பெயர் ஆகியவற்றை நிரப்புங்கள்
4. உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டும் இருந்தால் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.
5. UIDAI அமைப்பிடம் உங்களது ஆதார் தகவல்களைச் சரிபார்க்க ஒப்புதல் அளிக்கச் செக் பாக்ஸ்-ஐ டிக் செய்யவும்.
6. Captcha Code-ஐ பதிவு செய்து Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான் மொத்த வேலையும் 5 நிமிடத்தில் முடித்துவிடலாம்.

 

 எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி..?!

எஸ்எம்எஸ் மூலம் இணைப்பது எப்படி..?!

ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு UIDPAN என்ற பார்மெட்டில் எஸ்எம்எஸ் அனுப்பினால் போதுமானது. உதாரணமாக UIDPAN 123456789000 EPOPE1234E

 ஆதார் பான் இணைப்பை செக் செய்வது எப்படி..?

ஆதார் பான் இணைப்பை செக் செய்வது எப்படி..?

1. முதலில் வருமான வரித் தளத்திற்குச் செல்லுங்கள் https://www.incometaxindiaefiling.gov.in/home
2. லாக்இன் செய்த பின்பு டேஷ்போர்டில் Profile Settings என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
3. Profile Settings-ல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் Link Aadhaar என்பதைக் கிளிக் செய்யுங்கள்
4. ஏற்கனவே உங்கள் பான் மற்றும் ஆதார் இணைக்கப்பட்டு இருந்தால் Your Pan is Linked to Aadhaar Number XXXX XXXX 1234 என்ற செய்தி கிடைக்கும்.
5. இல்லையெனில் ஆதார் பான் இணைப்பதற்கான ஆப்ஷன் வரும். மேலே உள்ள வழிமுறையைக் கடைப்பிடித்து இணைத்திடுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+