ஆதார்ல இந்த ஒரு தவறு மட்டும் பண்ணிடாதீங்க!! உங்க பேங்க் அக்கவுண்ட்டே காலியாகிடும்!!
இந்தியாவில் மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக ஆதார் கார்டை நாம் பயன்படுத்துகிறோம் . நம்முடைய வங்கி கணக்கு தொடங்கி , முதலீடுகள், பரிவர்த்தனைகள் ,அ ரசு சேவைகள் என அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் நம்முடைய ஆதார் எண்ணை நாம் இணைத்து வைத்திருக்கிறோம். இது அரசு மற்றும் வங்கி சார்ந்த சேவைகளை நாம் எளிமையாக அணுகுவதற்கு உதவுகிறது. இதுவே மோசடியாளர்களுக்கும் மிக எளிமையாக நம்முடைய வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை களவாடுவதற்கு ஒரு கருவியாக அமைந்து விடுகிறது .
உங்களுடைய ஆதார் கார்டில் இந்த ஒரு சிறிய மாற்றத்தை செய்தால் செய்ய தவறினால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கக்கூடிய முழு தொகையும் நீங்கள் இழக்க நேரிடலாம். நம்முடைய வங்கி செயல்பாடுகள் தொடங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகள், அரசின் அதிகாரப்பூர்வ சேவைகள், நம்முடைய அலுவலக பயன்பாடு என அனைத்திற்குமே ஆதார் அட்டையை நாம் வழங்குகிறோம் .
இந்த ஆதார் அட்டையில் நம்முடைய பயோமெட்ரிக் மற்றும் டெமோகிராபிக் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை மோசடியாளர்களின் கைகளில் செல்லும்போது எளிதாக நமக்கே தெரியாமல் நம்முடைய கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை களவாடிக் கொள்ள முடியும். இதன் காரணமாக தான் யுஐடிஏஐ அமைப்பு ஆதார் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைத்து தனி நபர்களும் தங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகிறது.
ஆதார் அடிப்படையில் நடத்தப்படும் மோசடிகளை தடுக்க யுஐடிஏஐ அமைப்பு அண்மையில் ஆதார் நகல்களை கொண்டு அடையாள சரிபார்ப்பு செய்ய தடை விதித்தது. இந்நிலையில் மேலும் பாதுகாப்பை வலுப்படுத்த பொதுமக்கள் தங்களுடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருமே எளிதாக ஆன்லைனில் தங்களின் ஆதார் தகவல்களை லாக் செய்யலாம். இதன் மூலம் உங்களின் அனுமதி இல்லாமல் யாராலும் உங்களின் பயோமெட்ரிக் தகவல்களை அணுக முடியாது. ஏதேனும் சேவைக்கு தேவைப்பட்டால் தற்காலிகமாக அன்லாக் செய்து மீண்டும் லாக் செய்து கொள்ளலாம்.
இதற்கு ஆதாரின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் aadhaar services என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய ஆதார் எண்ணையும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும் கேட்கும். அவற்றை உள்ளீடு செய்து உங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்யலாம். எனவே அதன் பி உங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை யாராலும் அணுக முடியாது.
இதற்கு https://myaadhaar.uidai.gov.in/en_IN இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் LOCK/ UNLOCK AADHAAR என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணையும் கேப்சா கோடு, ஓடிபி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து enable biometric login என்பதை கிளிக் செய்து. அவ்வளவு தான் உங்களுடைய பயோமெட்ரிக் தரவுகள் லாக் செய்யப்பட்டு விட்டது . உங்களின் அனுமதி இல்லாமல் யாராலும் இவற்றை அணுக முடியாது. இது நீங்கள் மோசடியில் சிக்கும் வாய்ப்புகளை குறைக்கும்.
Share This Article
English summary
Aadhaar Scam Warning: Avoid This Tiny Error to Prevent Bank Account Theft
Eng sum: A single error with your Aadhaar card can expose you to cyber frauds, potentially leading to bank account depletion. It highlights rising scams targeting Aadhaar data linked to banking and UPI services. Key protections include never sharing your 12-digit number via calls or messages, enabling biometric locks.Title: Aadhaar Scam Warning: Avoid This Tiny Error to Prevent Bank Account TheftKey: Aadhaar card, Online fraud, Bank account security, Cyber scams, UIDAI portal, Biometric lock, Virtual ID, KYC update, UPI safety, Data protection, how to lock my aadhaar bio metric, ஆதார், ஆதார் மோசடி, ஆதார் அட்டை , பாதுகாப்பான ஆதார், ஆன்லைன் மோசடி, ஆதார் பயோமெட்ரிக், ஆதார் பயோமெட்ரிக் லாக் என்றால் என்ன, பயோமெட்ரிக் தகவல்களை எப்படி லாக் செய்வதுTag: Aadhaar, biometric, UIDAI, ஆதார், பயோமெட்ரிக்ஆதார்ல இந்த ஒரு தவறு மட்டும் பண்ணிடாதீங்க!! உங்க பேங்க் அக்கவுண்ட்டே காலியாகிடும்!!இந்தியாவில் மிக முக்கியமான ஒரு அடையாள ஆவணமாக ஆதார் கார்டை நாம் பயன்படுத்துகிறோம் . நம்முடைய வங்கி கணக்கு தொடங்கி , முதலீடுகள், பரிவர்த்தனைகள் ,அ ரசு சேவைகள் என அனைத்து முக்கியமான சேவைகளுக்கும் நம்முடைய ஆதார் எண்ணை நாம் இணைத்து வைத்திருக்கிறோம். இது அரசு மற்றும் வங்கி சார்ந்த சேவைகளை நாம் எளிமையாக அணுகுவதற்கு உதவுகிறது. இதுவே மோசடியாளர்களுக்கும் மிக எளிமையாக நம்முடைய வங்கி கணக்குகளில் இருக்கும் பணத்தை களவாடுவதற்கு ஒரு கருவியாக அமைந்து விடுகிறது .உங்களுடைய ஆதார் கார்டில் இந்த ஒரு சிறிய மாற்றத்தை செய்தால் செய்ய தவறினால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கக்கூடிய முழு தொகையும் நீங்கள் இழக்க நேரிடலாம். நம்முடைய வங்கி செயல்பாடுகள் தொடங்கி ஆன்லைன் பரிவர்த்தனைகள், அரசின் அதிகாரப்பூர்வ சேவைகள், நம்முடைய அலுவலக பயன்பாடு என அனைத்திற்குமே ஆதார் அட்டையை நாம் வழங்குகிறோம் .இந்த ஆதார் அட்டையில் நம்முடைய பயோமெட்ரிக் மற்றும் டெமோகிராபிக் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை மோசடியாளர்களின் கைகளில் செல்லும்போது எளிதாக நமக்கே தெரியாமல் நம்முடைய கணக்கில் இருக்கக்கூடிய பணத்தை களவாடிக் கொள்ள முடியும். இதன் காரணமாக தான் யுஐடிஏஐ அமைப்பு ஆதார் அட்டை வைத்திருக்கக்கூடிய அனைத்து தனி நபர்களும் தங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகிறது.ஆதார் அடிப்படையில் நடத்தப்படும் மோசடிகளை தடுக்க யுஐடிஏஐ அமைப்பு அண்மையில் ஆதார் நகல்களை கொண்டு அடையாள சரிபார்ப்பு செய்ய தடை விதித்தது. இந்நிலையில் மேலும் பாதுகாப்பை வலுப்படுத்த பொதுமக்கள் தங்களுடைய ஆதார் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவருமே எளிதாக ஆன்லைனில் தங்களின் ஆதார் தகவல்களை லாக் செய்யலாம். இதன் மூலம் உங்களின் அனுமதி இல்லாமல் யாராலும் உங்களின் பயோமெட்ரிக் தகவல்களை அணுக முடியாது. ஏதேனும் சேவைக்கு தேவைப்பட்டால் தற்காலிகமாக அன்லாக் செய்து மீண்டும் லாக் செய்து கொள்ளலாம்.இதற்கு ஆதாரின் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் aadhaar services என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய ஆதார் எண்ணையும் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணையும் கேட்கும். அவற்றை உள்ளீடு செய்து உங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்யலாம். எனவே அதன் பி உங்களுடைய பயோமெட்ரிக் தரவுகளை யாராலும் அணுக முடியாது. இதற்கு https://myaadhaar.uidai.gov.in/en_IN இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும் LOCK/ UNLOCK AADHAAR என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின் உங்களுடைய 12 இலக்க ஆதார் எண்ணையும் கேப்சா கோடு, ஓடிபி ஆகியவற்றை உள்ளிட வேண்டும். இதனை அடுத்து enable biometric login என்பதை கிளிக் செய்து. அவ்வளவு தான் உங்களுடைய பயோமெட்ரிக் தரவுகள் லாக் செய்யப்பட்டு விட்டது . உங்களின் அனுமதி இல்லாமல் யாராலும் இவற்றை அணுக முடியாது. இது நீங்கள் மோசடியில் சிக்கும் வாய்ப்புகளை குறைக்கும்.
Story first published: Tuesday, December 23, 2025, 17:19 [IST]
Other articles published on
Dec 23, 2025