இன்று இந்தியாவில் ஒரு குழந்தை பிறப்பது முதல் முதியவர்களின் ஓய்வூதியம் வரை அனைத்திற்கும் ஆதார் அவசியமான ஒன்றாக உள்ளது. வங்கி கணக்கு, சிம் கார்டு, ரேஷன் என ஒவ்வொரு இடத்திலும் ஆதாரை பயன்படுத்தும் நாம், அதில் உள்ள சிறு தவறுகளை திருத்த முற்படும்போது தான் பல சவால்களை சந்திக்கிறோம்.
நினைத்த நேரத்தில் உங்கள் பெயரை மாற்றவோ, பிறந்த தேதியை திருத்தவோ முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) சில முக்கிய விவரங்களை மாற்ற வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கிறது. அந்த ஒரு வாய்ப்பையும் நீங்கள் கவனக்குறைவாக தவறவிட்டால், அரசு சலுகைகள் முதல் பாஸ்போர்ட் எடுப்பது, பள்ளிக்கூடங்கள் வரை பெரும் சிக்கல்களை சந்திக்க நேரிடும். எதற்கெல்லாம் இந்த தடை? எவற்றை எத்தனை முறை மாற்றலாம்? எப்படி ஆதாரை புதுப்பிப்பது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை புதுப்பிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அனுமதி அளித்தாலும், சில முக்கியமான விவரங்களுக்கு வாழ்நாளில் ஒரு முறை என்ற கடும் கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
பிறந்த தேதி - ஒருமுறை மட்டுமே!
ஆதார் எடுக்கும் போது உங்கள் பிறந்த தேதி தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை திருத்த உங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும். அதற்கு முறையான பிறப்பு சான்றிதழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வயது சான்று ஆவணங்கள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். ஆதாரமற்ற கோரிக்கைகளை UIDAI நிராகரித்து விடும்.
பாலினம் (Gender) - ஒரு முறை மட்டுமே!
ஆதார் வைத்திருப்பவர் தனது பாலின விவரத்தை தவறாக பதிவு செய்திருந்தால், அதை திருத்திக்கொள்ள ஒரு முறை மட்டுமே அனுமதி உண்டு. இந்த திருத்தத்திற்கு பிறகு, மீண்டும் மாற்றம் செய்ய பொதுவான விதிகளின்படி அனுமதி கிடையாது.
மற்ற விவரங்களை எத்தனை முறை மாற்றலாம்?
உங்கள் பெயரை வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். இதே உங்களுடைய முகவரி & மொபைல் எண்: உங்கள் வீடு மாறும்போதோ அல்லது புதிய சிம் கார்டு வாங்கும்போதோ எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு தடையில்லை.
விரல் ரேகைகள், கண் கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம் (குறிப்பாக குழந்தைகளுக்கு 5 மற்றும் 15 வயதில் இது கட்டாயம்).
ஒருவேளை இந்த ஒரு வாய்ப்பையும் தாண்டி நீங்கள் திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நீங்கள் UIDAI-ன் மண்டல அலுவலகத்தை நேரடியாக அணுகி, சிறப்பு அனுமதி பெற வேண்டியிருக்கும். இது மிகவும் கடினமான நடைமுறை என்பதால், முதல் முறையே சரியாக செய்வது அவசியம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications