சென்னை: கடந்த சில ஆண்டுகளில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் செல்வத்தைக் குவிப்பதற்கான மிகவும் விரும்பப்படும் வழிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. மேலும் இது AMFI இன் தரவுகளின் படி சொத்துக்களின் எண்ணிக்கையில் (AUM) சாதனை அதிகரிப்பைக் காட்டுகிறது என கூறியுள்ளது. இந்தப் பதிவில் 15-15-15 ரூல் பயன்படுத்தி எப்படி ரூ. 1 கோடி பெறுவது என்பதை பற்றிப் பார்ப்போம்.
சந்தையில் ஆயிரக்கணக்கான திட்டங்கள் இருப்பதால், அதிகமான மக்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை அடைய, சந்தை அபாயத்திற்கு உட்பட்டது என தெரிந்தும் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்கின்றார். பணம் சம்பாதிப்பதற்கான மியூச்சுவல் ஃபண்ட் பிரபலமான முதலீடாகக் கருதப்படுகிறது.

PPF, NPS, FDகள் மற்றும் பிற சேமிப்பு திட்டங்கள் போன்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது மியூச்சுவல் ஃபண்டுகள் சிறந்த வருமானத்தை வழங்குகிறது. ஆனால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சில ஆபத்தையும் உள்ளடக்கியது என்பதைத் தெரிந்து கொண்டு முதலீடு செய்ய வேண்டும்.
SIP இன்வெஸ்ட்மென்ட் செய்யத் தொடங்கலாம்: மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் மற்றொரு நன்மை என்னவென்றால், 500 ரூபாய் முதல் முதலீடு செய்ய தொடங்கலாம். அதிலிருந்து வரும் வருமானம் பெருகும்போது காலப்போக்கில் உங்கள் முதலீட்டு தொகையை அதிகரிக்கலாம்.
இதனைப் பயன்படுத்தி கணிசமான கார்பஸை உருவாக்க, ஒவ்வொரு மாதமும் ஒரு நல்ல தொகையை முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் ரூ. 1 கோடியைப் பெற நினைத்தால், சில நல்ல ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் கடந்தகால ரிட்டர்ன்ஸ் பற்றி தெரிந்து முதலீடு செய்ய வேண்டும்.
15-15-15 ரூல்படி மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ரூ.1 கோடி பெறுவது எப்படி?: ஈக்விட்டி ஃபண்ட் 15% வருடாந்திர வருவாயை வழங்குகிறது என்று வைத்துக் கொண்டால், ரூ. 1 கோடியை எட்ட, 15 ஆண்டுகளுக்கு SIP மூலம் மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். இதுவே 15-15-15 ரூல் எனப்படுகிறது.
SIP முதலீடுகளில் கூட்டு வட்டி தரும் நன்மைகள்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட்டு வட்டி முறையை "உலகின் எட்டாவது அதிசயம்" என்று குறிப்பிடுகிறார். கூட்டு வட்டி என்பது உலகின் மிகவும் சக்திவாய்ந்த சக்தி. அதைப் புரிந்துகொள்பவர் , சம்பாதிக்கிறார், அதைச் செய்யாதவர் பிறருக்கு வட்டி செலுத்துகிறார்" என்று கூறியுள்ளார்.
ஆனால் இதனை அடைய, நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும். எனவே முதலீட்டிற்கு தொகை மட்டுமல்ல, உங்கள் நேரமும் தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு சிறிய SIP தொகையுடன் தொடங்கி, காலப்போக்கில் அதை அதிகரித்தாலும், கூட்டு வட்டி மூலம் நீங்கள் குறிப்பிடத்தக்க கார்பஸை உருவாக்கலாம்.
15 ஆண்டுகளில் முதல் ரூ.1 கோடி கார்பஸ் இலக்கை நீங்கள் எவ்வாறு அடைவது என்பது பற்றி நாங்கள் ஏற்கனவே 15-15-15 ரூலில் பார்த்தோம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 மியூச்சுவல் ஃபண்டில் போடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். இந்தப் பணத்தை இன்னும் 15 வருடங்கள் முதலீடு செய்து, ஒவ்வொரு ஆண்டும் 15 % வளர்ச்சியடைந்தால், கூட்டு வட்டியின் மூலம் இந்த தொகை, ரூ. 10 கோடியாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.
கூட்டு சக்தியிலிருந்து நீங்கள் பயன்பெற விரும்பினால், நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பொறுமை இல்லாமல் முதலீடு மூலம் பணம் சம்பாதிக்க முடியாது என்பதே. இதனை புரிந்து தக்க ஆலோசனை மற்றும் சுய விருப்பத்துடன் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications