நீங்கள் வருமான வரி செலுத்தும் நபரெனில் இது உங்களுக்கு ஒரு நல்ல செய்திதான். ஏனெனில் இந்திய வருமான வரித்துறை (The Income Tax department) வரி செலுத்துவோருக்கென AIS for Taxpayers எனும் ஒரு புதிய மொபைல் ஃபோன் APP ஐ அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் வரி செலுத்துவோர் அவர்களின் வருடாந்திர தகவல் அறிக்கை (ஏஐஎஸ்) / வரி செலுத்துவோர் தகவல் விவரம் (டிஐஎஸ்) போன்ற விவரங்களை பெறலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
மேலும் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த செயலியில் வரி செலுத்துவோருக்கு விரிவான தகவல் வழங்கும் என கூறப்படுகிறது.
அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில்!
வரி செலுத்துவோர் தங்கள் டிடிஎஸ்/டிசிஎஸ் (TDS/TCS), வட்டி, டிவிடெண்ட், பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல் மற்றும் வருமான வரியை திரும்பப் பெறுதல் (Tax Returns) போன்ற அனைத்து தகவல்களையும் இந்த செயலியின் மூலம் இனி எளிதாக அறிந்து கொள்ளலாம் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
இந்த செயலியைப் (APP) பெறுவது எப்படி?
1. AIS for Taxpayers செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
2. பின்னர் பயனர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
3. இதற்கு பான் கார்டு எண்ணை பயனர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளிட்டு பயனர்கள் இதில் தங்களை ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம்.
4. அதனைத் தொடர்ந்து பயனர்கள் 4 டிஜிட் கொண்ட ரகசிய எண்ணை உள்ளிட வேண்டும். அதன்பின் இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்தலாம். இதனை ஏஐஎஸ் வலைதளத்திலும் பயன்படுத்த முடியும்.
5. Google Play Store மற்றும் App Store இல் இது இலவசமாகவே கிடைக்கிறது.
செயலியின் நோக்கம்!
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'AIS அல்லது TIS பற்றிய தகவல்களை வரி செலுத்துவோருக்கு வழங்குவதே இந்த செயலியின் நோக்கம் ஆகும் எனத் கூறப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்
இது வரி செலுத்துவோர் தொடர்பான பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை வழங்குகிறது. அதில் TDS/TCS, வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரி செலுத்துதல்கள், வருமான வரித் திருப்பிச் செலுத்துதல், AIS/TIS இல் உள்ள பிற விஷயங்களுடன் தொடர்புடைய தகவல்களைப் பார்க்க வரி செலுத்துவோர் இந்த மொபைல் ஆப்பை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Chatbot சேவை
டிடிஎஸ் குறித்த கருத்துகளை வரி செலுத்துவோர் இதன் மூலம் வழங்கப்படும், அதை பயனர்கள் PDF அறிக்கையாக ஒருங்கிணைக்கவும் முடியும் என கூறப்படுகிறது.
பயனர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் இந்த செயலியில் உள்ள சாட்பாட் மூலம் பயனர்கள் தங்களது சந்தேகங்களுக்கு பதில் பெறலாம்.
Link for Apple users : https://apps.apple.com/in/app/ais-for-taxpayers/id1571076423
Link for Android Users : https://play.google.com/store/apps/details?id=io.lntinfotech.AIStaxpayer&hl=en_US
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications