மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது அண்மைக்காலம் வரையிலும் பல தவறான கண்ணோட்டங்களைக் கொண்டிருந்தது. சொத்து மேலாளர்கள் அல்லது பெரிய அளவிலான முதலீடுகளுடன் தொடர்பு கொண்டவர்கள் மற்றுமே மியூச்சுவல் பண்டை அணுக முடிந்தது.
ஆனால் இந்தத் தடைகளை எல்லாம் டிஜிட்டல் பிளாட்பாரங்கள் தகர்த்து எறிந்தன. இதன் மூலம் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வது எளிதான காரியமாக ஆகிவிட்டது. தங்கள் தேவைக்கேற்ப எந்த பிரிவுகளிலும் முதலீடு செய்யவும் நிதித் தேவைக்கேற்ப கையாளவும் முடிகிறது.

நிதித்துறையில் ஆப்கள் தொழில்நுட்பத்தின் காரணமாக மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. இதன் மூலம் உலகளவில் முதலீடுகள் வேறு மாதிரியாகிவிட்டன.
எளிதாக அணுக முடிவதோடு வசதியாக இருப்பது டிஜிட்டல் ஆப்களின் மிகப் பெரிய சாதகமான அம்சமாகும். கேஒய்சி நடைமுறையை உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் இன்றைக்கு உங்களது ஆவணங்களை அப்லோடு எளிதாக செய்து அவற்றை வெரிபை செய்து வேறு எந்த பிளாட்பாரங்களுக்கும் மாற்றலாம்.
இதனால் ஒவ்வொரு பிளாட்பாரத்துக்கும் கேஒய்சியை அப்லோடு செய்யும் வீண் வேலை இல்லாமல் போய்விட்டது. அத்துடன் உங்களது விவரங்களை பிரிண்ட் செய்யவும், அட்டாச் செய்யவும், கையெழுத்திடவும் சமர்ப்பிக்கவும் தேவையான ஆவணங்கள் உங்கள் வசம் எப்போதும் தயாராக இருக்கும். உங்களது நிதிநிலைமையையும் அப்டேட் செய்து கொள்ள முடியும்.
மற்றொரு சாதகமான அம்சம் என்னவென்றால் ஆட்டோமேடிக்காக முதலீடு செய்வதற்கு இந்த ஆப்கள் உதவுகின்றன. முதலீடு செய்வதற்கு ஏற்ற துறை, நிலவரத்தைப் பொருத்து உங்களது பணத்தை உடனடியாக மாற்றுவதற்கு வசதியாக இருக்கிறது. முன்பு இது மிகவும் சிரமமான காரியமாக இருந்தது.
முதலீட்டாளர்கள் இவ்வளவு தொகை இத்தனை முறை என்று குறிப்பிட்டு விட்டால் போதும் ஆட்டோமேடிக் முதலீடு இங்கு வந்து உங்களுக்கு கைகொடுக்கும்.
இதுதவிர முதலீட்டாளர்கள் மைக்ரோ முதலீடுகளை மியூச்சுவல் பண்டில் செய்வதற்கு இந்த ஆப்கள் மிக எளிமையாக வசதி செய்து தருகிறது. ஒரு பெரிய முதலீட்டை முதலீட்டாளர்கள் சேமித்து வைத்தால் அதிலிருந்து ரூ.10 முதல் ரூ.100 வரை அவ்வப்போது முதலீடு செய்து கொள்ளலாம்.
செலவு மலிவான இந்த ஆப்கள் மூலம் ஜீரோ கட்டண பயன்பாடு, குறைந்த பட்ச சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் போன்ற சிறப்பான வசதிகளையும் கொண்டுள்ளன. சப்ஸ்கிரிப்ஷன் கட்டணத்தைத் தவிர வேறு எந்த மறைமுக கமிஷன்கள் வசூலிக்கப்படாது. இது முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்லாமல் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
மேலும் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களும் இதற்கு கிடையாது. மியூச்சுவல் பண்டுகளை வாங்கும்போதும் விற்கும்போதும் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. உங்களது மொபைலில் இலவசமாக கேஒய்சியை டிஜிட்டல் முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications