மாத சம்பளம் வாங்குவோர் அனைவரும் வருமான வரி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டு இருக்கும் வேளையில் பலருக்கும் தெரியாத ஒரு டிரிக் இப்போது டிரெண்டாகியுள்ளது.
வரி செலுத்துபவர்கள் கடந்த நிதியாண்டில் செலுத்திய வரிகளுக்கான ரீபண்ட் தொகையைத் திரும்பப் பெற ஆர்வமாக இருக்கும் வேளையில், கடைசி நேர அவசரத்தைத் தவிர்க்க, வரி செலுத்துபவர்கள் வரியைக் குறைப்பதற்கு இந்த டிரிக்-ஐ பயன்படுத்தலாம்.

தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS), வருங்கால வைப்பு நிதி (EPF), ஈக்விட்டி லிங்க்டு சேவிக்ஸ் திட்டம் (ELSS) போன்ற நீண்ட கால முதலீட்டு திட்டங்களில் பங்களிப்பது மூலம் 80சி திட்டத்தின் கீழ் ஒரு நிதியாண்டுக்கு சுமார் ரூ.1.50 லட்சம் வரை வரி சேமிப்பைப் பெற முடியும். இருப்பினும், வரியைக் குறைப்பதற்கான வேறு சில வழிகளும் உள்ளன.
வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மூலம் வரி சேமிப்பு செய்ய ஒரு வழி உள்ளது. உங்கள் சம்பளத்தில் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) சலுகையைச் சிறப்பாகப் பயன்படுத்தும் ஐடியா தான் இது. HRA பிரிவில் வரி சலுகை பெற உங்கள் மனைவிக்கே வீட்டு வாடகை செலுத்தி HRA விதிமுறைகளின் கீழ் உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை வரி இல்லாமல் பெறலாம்.
HRA சலுகையைப் பெறுவது எப்படி?
முதலில் உங்கள் மனைவிக்கும் - உங்களுக்குமான ஒரு அதிகாரப்பூர்வ வாடகை ஒப்பந்தத்தை உருவாக்குங்கள். ஒப்பந்தத்தில் வாடகைத் தொகை மற்றும் பிற நிபந்தனைகளைத் தெளிவாகக் குறிப்பிடவும்.
வீட்டு வாடகையை ஒவ்வொரு மாதமும் வங்கி பரிவர்த்தனை அல்லது காசோலை மூலம் செலுத்துங்கள். இதன் மூலம் வங்கி ஆவணத்தில் இது சேர்க்கப்பட்டு ஆதாரமாக விளங்கும்.
HRA கிளைம்:
நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்களுக்கு வழங்கும் சம்பளத்தில் எவ்வளவு தொகையை HRA-வுக்காக கொடுக்கிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். இதன் பின்பு செலுத்திய வாடகையைக் கருத்தில் கொண்டு, உங்கள் அடிப்படைச் சம்பளத்தில் 10 சதவீதத்தைக் கழித்து மீதமுள்ள தொகையைக் கணக்கிடுங்கள்.
நீங்கள் மெட்ரோ நகரில் வசிப்பவராக இருந்தால், செலுத்திய வாடகையில் 50 சதவீதத்தை நீங்கள் வரி விலக்கிற்காகக் கோரலாம். மெட்ரோ அல்லாத நகரில் வசிப்பவராக இருந்தால், செலுத்திய வாடகையில் 40 சதவீதத்தை வரி விலக்கிற்காகக் கோரலாம்.
எவ்வளவு வரி சேமிக்க முடியும்?:
உங்கள் மாத சம்பளம் ரூ.1,00,000 என்றால், அதில் ரூ.20,000 HRAவாகவும் இருந்தால், உங்கள் மனைவிக்கு மாத வாடகையாக ரூ.25,000 செலுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். இதில்
வருடாந்திர HRA: ரூ.2,40,000
வருடாந்திர வாடகை செலுத்துதல்: ரூ.3,00,000
அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம்: ரூ.1,20,000
HRA விலக்கு கணக்கீடு:
வருடாந்திர HRA: ரூ.2,40,000
செலுத்திய வாடகை - அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம்: ரூ.3,00,000 - ரூ.1,20,000 = ரூ.1,80,000. இந்த 1,80,000 தொகைக்கு நீங்க வருமான வரி விலக்கை கோரலாம்.
நச்சுன்னு நாலு விஷயம்:
நீங்கள் செய்யும் ஒப்பந்தம் முறையானது மற்றும் எந்தவிதமான மோசடி நடவடிக்கையும் இல்லாதது என்பதை உறுதிப்படுத்தவும்.
வங்கி அறிக்கை அல்லது காசோலை பேமெண்ட் மூலம் வாடகை செலுத்தியதற்கான ஆதாரத்தை வருடம் முழுவதும் பராமரிக்கவும்.
உங்கள் மனைவி தனது வருமான வரித் தாக்கல் செய்வதில் வாடகை வருமானத்தைக் கட்டாயம் காட்ட வேண்டும் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
உங்கள் மனைவிக்கு வாடகை செலுத்துவது மூலம் வரியைச் சேமிக்க முடியும். ஆனால் அது கவனமாகவும் அனைத்து சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவும் செய்யப்பட வேண்டும்.
More From GoodReturns

இனி நீங்கள் இழக்கப்போகும் வரிச் சலுகைகள் என்னென்ன? புதிய விதிகளால் லாபமா? நஷ்டமா?

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications