இன்றைய காலகட்டத்தில் மக்கள் வங்கிகளின் இணைய சேவைகளை விட அதிகளவில் யுபிஐ சேவைகளையே பயன்படுத்தி வருகின்றனர். எங்கு பார்த்தாலும் கியூஆர் கோடுகள் போர்டினை காண முடிகிறது.
அதனை ஸ்கேன் செய்து எளிதில் அனுப்பி விடலாம். மொபைல் எண் பதிவு செய்து அனுப்பும் போது கூட, சில நேரங்களில் தவறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஸ்கேன் செய்யும்போது அப்படி ஏதும் வாய்ப்பில்லை எனலாம்.
எனினும் ஸ்கேனிங் இல்லாத சமயங்களில் மொபைல் நம்பர் கொடுத்தே அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பும்போது சில நேரங்களில் தவறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
தவறு செய்யலாம்
சில சமயங்களில் இந்த தொகையை எப்படி பெறுவது என்பது பெரும் சிக்கலாக இருக்கும். சிலர் உங்கள் பணத்தை திருப்பி கொடுத்துவிடலாம். சிலர் அதனை தவிர்க்கலாம். சில சமயங்களில் பெரியளவிலான தொகை எனும் அது பெரும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதன் பிறகு என்ன செய்வது என்பதை தெரியாமல் தவிக்கலாம்..
ஸ்கேன் செய்யுங்கள்
நீங்கள் கூகுள் பே, போன் பே அல்லது வேறு எந்த யுபிஐ சேவையினை பயன்படுத்தினாலும் சரி, நீங்கள் தவறான யுபிஐ ஐடி அல்லது தவறான மொபைல் எண்ணினை பயன்படுத்தும் போது தவறிழைக்க வாய்ப்பிருக்கிறது. ஆக முடிந்த அளவுக்கு ஸ்கேன் செய்து பணம் அனுப்பலாம்.
புகார் செய்யலாம்?
நீங்கள் எந்த வங்கியின் கணக்கில் இருந்து பணத்தை பரிமாற்றம் செய்தீர்களோ? அந்த கணக்கு உள்ள வங்கியிலும் தெரிவிக்கலாம். நீங்கள் கூகுள் பே, பேடிஎம் மற்றும் போன் பே ஆப்கள் மூலம் உதவியினை பெறலாம். இதன் மூலம் ஆர்பிஐ-யின் ஆம்பட்ஸ் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையை குறித்தான பிரச்சனையை எதிர்கொள்ளலாம்.
என்பிசிஐயிலும் புகார் செய்யலாம்?
இந்திய தேசிய கொடுப்பனவு கழகமான NPCI-யிலும் (https://www.npci.org.in/what-we-do) புகார் அளிக்கலாம். அதில் மேலே உள்ள ஆப்சனில் what we do என்பதை கிளிக் செய்தால் யுபிஐயில் உள்ளிட்ட அனைத்து பட்டியலும் இருக்கும்.
அதில் நீங்கள் பயன்படுத்திய யுபிஐ சேவையினை தேர்வு செய்யவும். அடுத்ததாக Dispute redressal mehanism என்ற ஆப்சனை பயன்படுத்த வேண்டும்.
அதன் பிறகு சில பாக்ஸ்கள் தகவல்களை நிரப்பகோரி ஓபன் ஆகும். அதில் உங்களது பரிவர்த்தனை ஐடி, வங்கி பெயர், பரிவர்த்தனை பெயர், மெயில் ஐடி, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை தவறில்லாமல் சரியாக பதிவிட வேண்டும்..
இது சரிபார்க்கப்பட்டு பிரசனைக்கள் தீர்க்கப்பட்டு உங்களது கணக்கிற்கு பணம் திரும்ப கிடைக்கும்.
ரிசர்வ் வங்கியில் புகார்
இதே ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படி, , bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்தில் சென்றும் புகார் அளிக்கலாம். இதிலும் விரைவில் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும்.


Click it and Unblock the Notifications