இந்தியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் அமெரிக்கா சென்று வேலை செய்வதற்காக பயன்படுத்தும் ஹெச்1பி விசாவில் டிரம்ப் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருவதால் பெரும்பாலான இந்திய டெக்கிகளின் அமெரிக்க கனவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியர்களுக்கு செம சான்ஸ்: வெளிநாட்டு வேலை என்றாலே அமெரிக்கா தான் சொல்ல வேண்டும் என்று அவசியம் கிடையாது பல்வேறு நாடுகளும் தற்போது இந்தியர்களை எங்கள் நாட்டிற்கு வருகை தாருங்கள் வந்து வேலை செய்யுங்கள் என அழைப்பு விடுக்க தொடங்கியுள்ளன. ஜெர்மனி இந்த போட்டியில் முந்தியது , ஜெர்மன் நாட்டு அரசு இந்தியர்கள் ஜெர்மனிக்கு வந்து வேலை செய்யுமாறு அழைப்பு விடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது ஃபின்லாந்தும் இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

மகிழ்ச்சியான நாடு: உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது ஃபின்லாந்து. இந்தியர்கள் எளிதாக இந்த நாட்டில் சென்று வேலை செய்து நிரந்தர குடியுரிமை பெற முடியும். பல்வேறு இயற்கை சூழல் நிறைந்த அழகான ஒரு நாடு , உலகிலேயே மகிழ்ச்சியான நாடு என பெயர் பெற்றது . உயர்ந்த வாழ்க்கை தரம் கொண்ட ஃபின்லாந்தில் நிரந்தர குடியுரிமை பெறுவது என்பது பல்வேறு சாதகங்களை கொண்டதாக இருக்கிறது .
சொர்க்கபுரி: ஃபின்லாந்தில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் குடும்ப உறுப்பினர்களையும் அழைத்து வந்து உடன் வைத்துக் கொள்ளலாம். அந்நாட்டு அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள், சுகாதாரத் திட்டங்கள் , ஓய்வூதிய திட்டங்கள் அனைத்தும் இவர்களுக்கும் கிடைக்கும் . இது தவிர அந்நாட்டு அரசு வழங்கக்கூடிய வீட்டுமனை திட்டங்கள் , வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான ஆதரவு திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் பெற முடியும் . அதாவது ஒரு ஃபின்லாந்து குடிமக்களுக்கு என்ன சலுகைகள் திட்டங்கள் கிடைக்கிறதோ அவை அனைத்துமே இந்த நிரந்தர குடியுரிமை பெற்றவர்களுக்கும் கிடைக்கும்.

என்ன தகுதி: ஃபின்லாந்து சென்று இந்த நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு என்ன தகுதி என பார்த்தால் குறைந்தது நான்காண்டு காலம் இங்கே வசித்திருக்க வேண்டும். இது வரும் ஜனவரி மாதத்தில் இருந்து ஆறு ஆண்டுகள் என உயரப்போகிறது. ஆண்டுக்கு குறைந்தபட்சம் 41 லட்சம் ரூபாயாவது சம்பாதித்து இருக்க வேண்டும் அல்லது முதுநிலை பட்டப்படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகளாவது வேலை செய்த அனுபவம் இருக்க வேண்டும் அல்லது ஃபின்லாந்து மொழி சரளமாக தெரிந்தவராகவும் மூன்றாண்டுகள் வேலை அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். எந்த ஒரு குற்றவியல் பதிவும் இந்த நபர் மீது இருக்கக் கூடாது.
என்ன ஆவணங்கள் தேவை: பாஸ்போர்ட் , நிதி ரீதியாக நம்முடைய நிலைத் தன்மையை உறுதி செய்வதற்கான ஆவணங்கள், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் மொழித்திறன்களை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணங்கள் இவை அனைத்தும் இருந்தால் போதும். இந்த ஆவணங்களை தாக்கல் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதனை அடுத்து ஃபின்லாந்து நாட்டு குடியேற்றத்துறை அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு உங்களின் விவரங்களை சேகரிப்பார்கள். இதனை அடுத்து ஆய்வு செய்து உங்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கலாமா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும். ஃபின்லாந்து நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு விண்ணப்பிக்க சராசரியாக 30000 ரூபாய் தான் தேவைப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications